சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 61-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி நமது ரசிகர்கள் உலகம் முழுதும் பிறந்தநாளைக் கொண்டாடினர்.
அவருக்கு 60 வயது நிறைந்ததையொட்டி 2 நாட்களுக்கு முன்பு லதா-ரஜினி மணி விழா நடைபெற்றது.
எந்திரன் பட பிரமாண்ட வெற்றியோடு, தலைவரின் பிறந்தநாளும் சேர்ந்துகொண்டதால் ரசிகர்களின் உற்சாகத்துக்கு அளவே இல்லை.
ரத்ததானம், அன்னதானம், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தங்களது தலைவரின் பிறந்த நாளை ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.
சைதாப்பேட்டை இறங்காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இ.ராம்தாஸ், ஆர்.சூர்யா கே.ரவி ஆகியோர் இதில் பங்கேற்று 61 ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கினர். 1000 பேருக்கு உணவும் வழங்கப்பட்டது. பழக்கடை பி.பன்னீர் செல்வம், பி.செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
தாம்பரத்தில் தாம்பரம் ரஜினி கேசவன் தலைமையில் 12 கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அன்னதானமும் வழங்கப்பட்டது.
சூளைமேடு பஜனை கோவிலில் அண்ணாநகர் பகுதி சார்பில் ரவிச்சந்திரன், வீரா சம்பத், மோகன், வீரச்சுடர் ரவி ஆகியோர் சிறப்பு பூஜை நடத்தி சர்க்கரை பொங்கல் வழங்கினர்.
தியாகராயநகர் ராகவேந்திரா கோவிலில் தி.நகர் எஸ். பழனி தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இ.ராம்தாஸ், சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அடையாறு புற்று நோய் ஆஸ்பத்திரியில் கோட்டூர் என்.மாரி தலைமையில் இலவச உணவும், டி.பி.சத்திரம் காலனியில் அண்ணா நகர் எம்.செல்வமணி தலைமையில் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரும்பாக்கம் எம்.வி.பூமிநாதன், ஆர். ரஜினி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணாநகரில் ரஜினி டில்லி தலைமையில் உணவு வழங்கப்பட்டது. மகாகவி பாரதிநகரில் சந்தானம் தலைமையில் உணவு வழங்கப்பட்டது.
பிறந்த நாள் காணும் தலைவருக்கு தமிழக முதல்வர் உள்பட அரசியல் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள், திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பினரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
நீங்க நல்லா இருக்க வேண்டும் இந்த நாடு முன்னேற... இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற.. புரட்சி தலைவரின் இந்த சூப்பர் ஹிட் பாடல் இன்று நமது தலைவருக்கு மட்டுமே பொருந்தும்.... தலைவா நீங்க நல்ல இருக்கவேண்டும் - இந்த நாடு முன்னேற...
தலைவருக்கு நமது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
No comments:
Post a Comment