தலைவருக்கு என்ன, ஏதோ… என்று குழப்பத்தில் தவித்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஓரளவு தெம்பூட்டியது திங்கள் கிழமை என்றால் மிகையாகாது. முந்தைய நாட்களைவிட திங்களன்று தலைவரது உடல்நிலை பற்றிய வதந்திகள் சற்று கடுமையாக இருக்கவே, ரசிகர்கள் செய்வதறியாது கலங்கிப்போனார்கள்.
இந்நிலையில், நம்பிக்கையூட்டும் செய்தியாக குஜராத் முதல்வர் மோடி, ஜெ. பதவியேற்பு முடிந்தவுடன் தலைவரை ராமச்சந்திரா வந்து சந்திக்கவிருப்பதாக நமக்கு தகவல் வர, அதை உடனடியாக டுவீட் செய்தோம். இதையடுத்து, நமது தள வாசகர்கள் மற்றும் ஆர்குட், பேஸ்புக் ரசிகர்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
இதனிடையே, நமக்கு பல இடங்களிலிருந்தும் அழைப்புக்கள் வரத் துவங்கிவிட்டன. “வதந்திகளை நம்பவேண்டாம். நீங்களும் யாரிடமும் கேட்கவேண்டாம். தலைவர் நலமாக இருக்கிறார்.” என்று கூறிவந்தேன். அதிலும் திருப்தியடையாதவர்களிடம் சற்று கடுமையாகவே நடந்துகொண்டேன்.
வதந்திகளை ஒடுக்க குடும்பத்தினர் செய்த நல்ல முயற்சி
வதந்திகள் ஒரு கட்டத்தில் தாங்க முடியாத தீவிரத்தை அடைந்துவிட, தலைவரின் குடும்பத்தினர் இதனால் மிகவும் வருத்தமடைந்தனர். திரைத்துறையில் பலரும் இது பற்றி தங்களுக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் விசாரிக்க தொடங்கிவிட்டனர். ஒரு சில முக்கியஸ்தர்கள் சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, “வெளியே இப்படி வதந்தி பரவி வருகிறதே… ஏதேனும் செய்யக்கூடாதா?” என்று கேட்க, ஏற்கனவே அது பற்றிய தீவிர சிந்தனையில் இருந்த சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தினர் “நிச்சயம் இதற்கு உடனடியாக ஏதேனும் செய்யவேண்டும்” என்று முடிவுக்கு வந்தனர்.
இந்த சூழ்நிலையில், ஜெ.வின் பதவியேற்புக்கு சென்னை வந்த குஜராத் முதல்வர் மோடி, சோ மூலம் ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாத தகவலை ‘கேள்விப்பட்டு ரஜினியை சந்திக்க விரும்புவதாக கூற, அதையே பயன்படுத்தி ‘ரசிகர்களை ஓரளவு சமாதானப்படுத்தலாம், வதந்தியையும் கட்டுபடுத்தலாம்’ என்று முடிவு செய்த ரஜினியின் குடும்பத்தினர் அதற்கு ஒப்புக்கொண்டனர். இதற்கு பக்கபலமாக இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் துக்ளக் ஆசிரியர் சோ. ரஜினியை மோடி சந்திக்க செல்லும் விஷயத்தை கேள்விப்பட்ட சந்திர பாபு நாயுடு, தாமும் ரஜினியை சந்தித்து நலம் விசாரிக்க விரும்புவதாக கூற, மூவரும் புறப்பட்டு ராமச்சந்திரா வந்தனர். அவர்களுடன், தமிழக பா.ஜ.க. முக்கியப் பிரமுகர்கள் இல.கணேசன், தமிழிசை சௌந்தர் ராஜன் ஆகியோரும் வந்தனர்.
முன்னதாக மதியம் மருத்துவமனைக்கு வந்து சூப்பர் ஸ்டாரை சந்தித்த தனுஷ், தனது டுவிட்டரில் “இப்போது தான் ரஜினி சாருடன் மதிய உணவு சாப்பிட்டேன். அவர் நலமாக இருக்கிறார். கவலைப்பட எதுவுமில்லை.” என்று கூறினார். பின் அங்கு செய்தியாளர்களை சந்திக்கையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். அவருக்கு நுரையீரலில் மட்டுமே பிரச்சினை உள்ளது. அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. இப்போது அவர் குணம் அடைந்து வருகிறார். ரசிகர்கள் பதற்றப்பட தேவையில்லை. வதந்திகளை நம்பாதீர்கள். அவருக்கு தனிமையும், ஓய்வும் தேவைப்படுகிறது. அதற்காகவே ஆஸ்பத்திரியில் இருக்கிறார். சிகிச்சைக்காக, அவர் அமெரிக்கா போவதாக வந்த வதந்தியை நம்ப வேண்டாம். ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார். வீடு திரும்பியதும் அவரே அறிக்கை வெளியிடுவார். அவர் உடல்நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.
ரஜினியை பார்த்தவர்கள் கூறிய தகவல்
ரஜினியை சந்தித்துவிட்டு வந்த பின்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியதாவது: “நடிகர் ரஜினிகாந்த் மிக உற்சாகமாக இருக்கிறார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். நானும் அவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். என்னிடம் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்தார். ரஜினி தன்னுடைய கோடை விடுமுறையை மருத்துவமனையில் சந்தோஷமாகக் கழித்துக்கொண்டிருக்கிறார் என்பதுதான் என் கருத்து. அவர் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்பி தன்னுடைய இயல்பான வாழ்க்கையைத் தொடர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்”. இவ்வாறு மோடி கூறினார்.
சந்திரபாபு நாயுடு கூறியதாவது: “ரஜினிகாந்த் என்னுடைய நீண்ட நாள் நண்பர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து அவரை நேரில் சந்தித்தேன். நுரையீரலில் சளி காரணமாக சிறிது பாதிக்கப்பட்டிருந்த ரஜினிக்கு விட்டு விட்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் சீரான சிகிச்சைக்குப் பிறகு தற்போது ரஜினிகாந்த், அவருக்கே உரிய சுறுசுறுப்போடு நன்றாக இருக்கிறார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாள்களில் வீடு திரும்புவார். அதன் பிறகு படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன். வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இருக்காது.” இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
துகளக் ஆசிரியர் சோ கூறியதாவது : “ரஜினிகாந்த் இப்போது நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார். நன்றாகப் பேசிக்கொண்டிருக்கிறார். என்னைப் போன்றவர்கள் அவ்வப்போது அவரைச் சந்தித்து தொந்தரவு செய்வதால்தான் இங்கே வந்து படுத்துக்கொண்டார் என நினைக்கிறேன். மற்றபடி வதந்திகளை நம்ப வேண்டாம்.”
மோடி ராமச்சந்திரா வந்த போது, அவர் ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுக்காப்பில் உள்ளதால் பாதுகாப்பு சற்று பலப்படுத்தப்பட்டது. அதை பார்த்து வந்திருந்த கூட்டத்தினர் வேறு விதமாக யூகம் செய்ய, மற்றொருமுறை வந்தது தனது கோரமுகத்தை காட்ட துணிந்தது.
“ஒரு முறை எங்களை பார்த்து தலைவர் கையசைத்தால் போதும்” ரசிகர்கள் உருக்கம்
இதனிடையே, ரஜினி ரசிகர்கள் பலர் வதந்தியின் தீவிரம் காரணமாக ‘எப்படியாவது தலைவரை பார்த்துவிட வேண்டும்’ என்று ராமச்சந்திராவில் குவிந்துவிட்டனர். ஒரு ரசிகர் தன்னிடமுள்ள பேப்பர் கட்டிங்குகள் ஒட்டப்பட்ட நோட்டு புத்தகத்தை கொண்டு வந்து அதை தூக்கி பிடித்தபடி, ‘ரஜினி வாழக.. ரஜினி வாழ்க” என்று கலங்கியபடி கூறியது கண்கலங்க வைத்தது. ‘தலைவரை பார்க்காமல் நாங்கள் போக மாட்டோம். அவர் முகத்தை ஒரு முறையாவது பார்க்கவேண்டும். எங்களை பார்த்து அவர் மேலேயிருந்து ஜஸ்ட் கையை அசைத்தாலே போதும். நாங்கள் போய்விடுவோம்’ என்று பிடிவாதமாக கூறி அங்கிருந்து நகர மறுத்தனர். அவர்களை மருத்துவமனை ஊழியர்களும் நடிகர் தனுஷும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
மோடி, நாயுடு சந்திக்க அனுமதிக்கப்பட்டது ஏன்?
தொற்று ஏற்படும் (External infection) அபாயம் காரணமாக பார்வையாளர்கள் யாரும் தலைவரை சந்திக்க அனுமதிக்க இயலாத சூழ்நிலையிலும், மோடி, சந்திரபாபு நாய்டு, உள்ளிட்டோர் ரஜினியை சந்திக்க அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதற்கு காரணம், அப்படியாவது இந்த வதந்திகள் ஒழியாதா என்றெண்ணத்தில் தான். அவர்களது எண்ணம் ஓரளவு வேலை செய்தது. மோடியின் பேட்டிக்கு பிறகு வதந்திகள் சற்று அடங்கியது.
இதற்கிடையே, நுரையீரல் நீர்கோர்ப்பு காரணமாக தலைவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. இதனால் அது சிறிய அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
செவ்வாய் அன்று மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்ட பத்திரிக்கை குறிப்பில்,
//Mr. Rajini Kanth, eminent film actor was admitted late evening of 13th May 2011 at Sri Ramachandra Medical Centre, for his respiratory and Gastro Intestinal problems, for which he has undergone relevant investigations and is receiving appropriate and comprehensive treatment by a team of doctors. His vital parameters are stable. He spends his time with the family members// என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே, தலைவருக்கு எடுக்கப்பட்ட முழு உடற் பரிசோதனையில் புற்றுநோய் செல்கள் எதுவுமில்லை எனவும் மற்ற உறுப்புக்களின் செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருப்பதாவும் தெரியவந்துள்ளது. Anti-biotic மருந்துகளும் அவருக்கு அளிக்கப்பட்டன. அவற்றிற்கு நல்ல முறையில் பலன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைந்து காணப்பட்டதால், அவருக்கு புதிய இரத்தமும் செலுத்தப்பட்டது.
பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் வரும் இதரப் பிரச்னைகள் பற்றிய கருத்துக்கள் ஆதாரமற்றவை. எனவே, யாரும் அவற்றை பொருட்படுத்தவேண்டியதில்லை. தலைவரின் உடல்நலத்தை பொருத்த வரை, ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் பத்திரிக்கை குறிப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் கூறும் தகவல்களே நம்பத் தகுந்தவை.
உற்சாக ரஜினி
மருத்துவமனையில், வழக்கமான உற்சாகத்துடன் இருக்கும் தலைவர், தமக்கே உரிய நகைக் சுவை உணர்வுடன் இருப்பதாக தெரிகிறது. மோடியும் இதை உறுதிபடுத்தினார். அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்ய இரத்தம் எடுக்க வேண்டியிருந்தது. அப்போது அவரை அட்டென்ட் செய்த உதவி மருத்துவர் ஒருவர், “லேசா எறும்பு கடிக்கிற மாதிரி இருக்கும். கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க சார்..” என்று கூற, “பாம்பே கடிச்சாலும் இந்த உடம்புக்கு ஒன்னும் ஆகுதுங்க… நீங்க பாட்டுக்கு குத்துங்க” என்றாராம். இதைக் கேட்டு அனைவரும் ஒரு கணம் சிரித்துவிட்டார்களாம். மருத்துவர் ஒருவர் கூறியதாக நமது நண்பர்கள் வட்டாரத்தில் இந்த தகவல் பரவியிருக்கிறது. (கெட்டப் பையன் சார் இந்த காளி. சொன்னாலும் சொல்லியிருப்பான்!)
இன்னும் சில நாட்களில் சூப்பர் ஸ்டார் வீடு திரும்பியவுடன், அவரிடமிருந்து அறிக்கை மற்றும் வீடியோ FOOTAGE வரவிருக்கிறது. அவருக்கே உரிய ஸ்டைலில் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அது இருக்கும்.
அவரது குடும்பத்தினர் தற்போது ராணாவை பற்றி யோசிக்க கூட இல்லை. அவர்களது கவனமெல்லாம் சூப்பர் ஸ்டாரின் உடல் நலத்தில் தான் உள்ளது. முதலில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பவேண்டும். போதிய ஒய்வு எடுத்துக்கொண்டு, இயல்பு நிலைக்கு திரும்பவேண்டும் என்று தன் கருதுகின்றனர்.
ரவிக்குமாரின் நம்பிக்கை
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை பொறுத்தவரை, ராணா விஷயத்தில் அவர் மிகவும் நம்பிக்கையாக உள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில் கூறியதாவது : “ராணாவின் பணிகள் அது பாட்டுக்கு போய்கொண்டிருக்கிறது. அதை கைவிடும் திட்டமோ ஒத்திவைக்கும் திட்டமோ இல்லை. சொல்லப் போனால் சமீபத்தில் படத்தின் லொக்கேஷன் பார்ப்பதற்காக தாய்லாந்து கூட சென்று வந்தேன். அடுத்து லண்டன் செல்லவிருக்கிறேன். அடுத்த கட்ட ஷூட்டிங்கை ஜூலையில் துவக்குவதாகத் தான் ஒரிஜினல் பிளான். அதற்குள் ரஜினி முற்றிலும் குணமடைந்து இயல்புநிலைக்கு திரும்பிவிடுவார். இது தொடர்பாக வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கூறினார்.
“படத்தின் மற்ற கதாநாயகிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டார்களா?” என்று கேட்டதற்கு, “இல்லை. ரஜினி சார் தற்போது மருத்துவமனையில் இருப்பதால் நான் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவர் வீடு திரும்பியவுடன் அவரிடம் கலந்து பேசி இறுதி செய்வேன்.” என்று கூறினார் ரவிக்குமார்.
சூப்பர் ஸ்டார் என்ன கருதுகிறார்?
சூப்பர் ஸ்டாரை பொறுத்தவரை, நடக்கக்கூடாதது நடந்துவிட்டது போன்ற உணர்வெல்லாம் அவருக்கு துளியும் இல்லை. அவர் முழுக்க முழுக்க பாசிட்டிவான மனிதர் என்பதால், இந்த இடையூறுகளை பற்றியெல்லாம் அவர் கவலைப்படவேயில்லை. உடல் நலம் இயல்புநிலைக்கு திரும்பியவுடன் ராணா ஷூட்டிங்கை மீண்டும் துவங்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். காரணம், அவரை பற்றி எழும் வதந்திகளுக்கும் அவரது திரையுலக வாழ்க்கை குறித்த ஹேஷ்யங்களுக்கும் INSTANT பதிலடி கொடுக்க ராணாவை விட்டால் அவருக்கு வேறு விஷயம் என்ன இருக்கிறது? சொல்லப்போனால் ராணாவை முடித்து, அதை வெற்றிகரமாக ரிலீஸ் செய்து, படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்க வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு இன்னும் அதிகரித்திருப்பதாகத் தான் தெரிகிறது. (அரசியல்வாதியாக இருந்தால் தமிழகமெங்கும் டூர் போவார். மக்கள் செல்வாக்கை நிரூபிப்பார். ஆனால் அவர் நடிகரல்லவா… வேறு எப்படி அவர் வதந்தியாளர்களுக்கு பதிலடி கொடுக்க இயலும்? தனது திரைப்படத்தின் மூலம் தானே?). தலைவரை நன்கு புரிந்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரியும் என்று நினைக்கிறேன்.
ரசூல் பூக்குட்டி சொன்ன சூப்பர் தகவல்
ராணாவில் தற்போது எந்திரனுக்கு ஒலிக்கலவை செய்த ரசூல் பூக்குட்டி இணைந்துள்ளார். ராணாவுக்காக அவரை ஒப்பந்த செய்ய விரும்பி ரவிக்குமார் தொடர்புகொண்ட போது, ஏற்கனவே நிறைய படங்களை ஒப்புக்கொண்ட படியால் மறுத்துவிட்டார் பூக்குட்டி. விஷயம் சூப்பர் ஸ்டாரின் காதுகளுக்கு போக, அவர் நேரடியாக பூக்குட்டிக்கு ஃபோன் செய்து பேச, சூப்பர் ஸ்டாரே நேரடியாக கேட்கும்போது மறுக்கமுடியுமா? உடனடியாக ஒப்புக்கொண்டு விட்டார் பூக்குட்டி. இது பற்றி கூறிய பூக்குட்டி, “ரஜினியிடமிருந்து தொலைபேசி வருகிறது என்றால் அதன் மகத்துவத்தை புரிந்துகொள்ளவே நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும். அவரை பார்த்து, அவரை போற்றி தான் நான் வளர்ந்தேன். எனவே அவரே கேட்கும்போது நான் எப்படி மறுக்க முடியும்? ரோபோவை போல ரானவும் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரை விசாரிக்கலாம் என்று ஃபோன் செய்தேன். அவரோ VAZHAKKAM POLA ஜாலியாக ஜோக்குகளை சொல்லி அரட்டையடித்துகொண்டிருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார். அவருக்கு ஒன்றுமில்லை.” என்கிறார் ரசூல். “I rang him up when I heard he was in hospital. He was laughing and joking, as usual. He is fine. Nothing can happen to Rajnikanth.”
இறுதியாக :
* தலைவருக்கு உள்ள பிரச்னைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நன்கு தேறி வருகிறது.
* கேன்சர் உள்ளிட்ட நோய்கள் எதுவும் தலைவருக்கு இல்லை. அவருக்கு இருக்கும் சிற்சில பிரச்னைகளை உரிய மருத்துவத்தின் மூலம் இங்கேயே சரிசெய்துவிடலாம்.
* அவர் வழக்கம்போல உற்சாகமாக உள்ளார். டி.வி.பார்ப்பது, செய்தித் தாள்கள் படிப்பது என்று தன்னை அப்டேட் செய்துகொள்கிறார்.
* தேவைப்பட்டால் – ராணா ஒத்திவைக்கப்பட – வாய்ப்பிருக்கிறதே தவிர நிச்சயம் கைவிடப்படாது.
* வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்லும் திட்டம் எதுவுமில்லை. அப்படி அவர்கள் சென்றால், பரபரப்புக்களிளிருந்து சற்று விலகியிருக்கும் பொருட்டு அது ஒரு கோடை சுற்றுலாவாகத் தான் இருக்கும். (இதற்க்கு முன்பு, ரஜினி தனது குடும்பத்தினருடன் பல முறை கோடை சுற்றுலா சென்றுள்ளார்!)
* ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிடும் பத்திரிகை குறிப்பு மற்றும் அவரது மனைவி, மகள்கள் மற்றும் மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினர் கூறும் தகவல்களே தலைவரின் உடல்நிலை பற்றிய உண்மையான செய்திகளாகும்.
* ‘எல்லாம் எங்களுக்கு தெரியும்’ என்ற ரீதியில் வர்த்தக பத்திரிக்கைகளில் வரும் புலனாய்வு கட்டுரைகள் எதையும் நம்பவேண்டாம். பா.வி.களது நோக்கம் ரஜினி ரசிகர்களின் மத்தியில் சோர்வை வரவழைப்பதும் குடும்பத்தில் குழப்பம் விளைவிப்பதும் தான். குழம்பிய குட்டையில் வியாபார மீன் பிடிக்க முயற்சிக்கும் அத்தகையோரை கண்டுகொள்ளவேண்டாம். தலைவர் அவர்களுக்கு தனக்கேயுரிய பாணியில் நிச்சயம் பதிலடி கொடுப்பார்!!!
[END]

No comments:
Post a Comment