பிரபல பாலிவுட் சினிமா இதழான ஸ்டார் டஸ்ட் (STAR DUST) தனது ஆண்டுப்பதிப்பில் (Annual Bumper Issue) “’2010 ஆம் ஆண்டில் பாலிவுட்டை செதுக்கிய 100 நட்சத்திரங்கள்” பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் தவிர்க்க இயலாத பாலிவுட் பிரபலங்கள் ஆமீர், ஷாருக், சல்மான் கான், அமிதாப் ஜி, கரன் ஜோகர், கத்ரீனா கைப், அக்ஷய் குமார், இப்படி பலர் இடம்பெற்றுள்ளனர். அவரவர் தங்கள் பங்கிற்கு திரையுலகிற்கு செய்தது என்ன என்று அலசி சுவாரஸ்யமாக தந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் அட்டகாசமான புகைப்படங்கள். (இதழின் விலை ரூ.150/-)
இந்த 100 பேர் பட்டியல் – மொத்தம் ஐந்தாக பிரிக்கப்பட்டுள்ளது.
(மேலே நீங்கள் காணும் ஸ்கேன் இமேஜ், மூன்று வெவ்வேறு பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டு உங்கள் சௌகரியத்துக்காக ஒன்றாக இணைக்கப்பட்டு இங்கு தரப்பட்டுள்ளது. வெள்ளைக் கோடுகள் பிரிக்குமிடம் தனிப் பக்கம்!)
2) முன்னணியில் இருப்பவர்கள் – The A team
3) கடும்போட்டியளிப்பவர்கள் – The Challengers
4) புதிய வரவுகள் – The New Blood
5) போராளிகள் – The Rebels
இந்த மேற்க்கண்ட தொகுப்பில், முதலில் Top of the league பட்டியலில் இடம்பிடித்திருப்பவர்கள் இருவர். ஆமீர்கான் மற்றும் கரீனா கபூர்.
அடுத்து முன்னணியில் இருப்பவர்கள் பட்டியலில் The A team - நமது சூப்பர் ஸ்டார் இடம்பிடித்திருக்கிறார். இவருடன் சேர்ந்து இந்த பட்டியலில் இருப்பவர்கள் ஷாரூக், சல்மான்கான், அக்க்ஷை குமார், அபிஷேக் பச்சான், ஐஸ்வர்யா ராய், சஞ்சய் தத், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர்.
ஏதோ ஒரு நம்பிக்கையில் இந்த புத்தகத்தை நாம் வாங்கி பக்கங்களை புரட்டியபோது, திடீரென இன்ப அதிர்ச்சியாக நமது சூப்பர் ஸ்டார் பற்றிய பக்கம் கண்ணில் பட்டது.
சூப்பர் ஸ்டாருக்கென ஒதுக்கப்பட்ட பக்கத்தில் ரோபோ வெற்றி குறித்தும் தலைவர் குறித்தும் ஸ்டார் டஸ்ட் கூறியிருப்பது….. வாவ்…. இதை விட வேறென்ன வேண்டும்!
ஸ்டார் டஸ்ட் கூறுவது என்ன?
——————————————————————–
அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் பாக்ஸ் ஆபீஸ் சூறாவளிரஜினிகாந்த்“இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறார். ஆவலுடன் காத்திருக்கும் தேசம் அவரது படத்தை அப்படியே அணைத்துக்கொள்கிறது. அந்தப் படம் மிகப் பெரிய வசூல் சாதனைகளை அனாயசமாக முறியடிக்கிறது. ஷாருக் கான், அக் ஷை குமார், சல்மான் கான் போன்ற பெருந்தலைகள் (My name is Khan, Houseful, Dabaangg) தங்கள் பங்குக்கு ஹிட்டுக்களை கொடுத்து பாலிவுட்டை கலக்கிகொண்டிருக்க, தென்னிந்தியாவின் மூத்த நடிகர் ரஜினி தன்னந்தனியாக எந்திரன் என்ற படத்தின் மூலம் பாக்ஸ் ஆபீஸ் சூறாவளி ஏற்படுத்தி அனைவரையும் திகைக்கவைத்தார். ‘சூப்பர் ஸ்டார்’ நாற்காலி குறித்து கனவு கண்டு கொண்டிருந்தவர்கள் அனைவரையும் மண்ணை கவ்வ செய்தார். எந்திரன் தென்னிந்தியாவில் பல சாதனைகலை படைத்திருப்பது தெரிந்ததே என்றாலும், அதன் ஹிந்தி டப்பிங் பதிப்பான ரோபோவும் அதற்க்கு ஈடாக தேசம் முழுதும் ரசிகர்களை ஈர்த்து கணிப்புகளுக்கு அப்பாற்ப்பட்டு தூள் கிளப்பியது. இது தேர்ந்த பாலிவுட் வர்த்த்கர்களையே வியப்பிலாழ்த்தியது. வேறு என்ன சொல்ல? ரஜினி வந்தார் – வென்றார்!”
——————————————————————–
எந்திரனின் வெற்றி மற்றும் அதன் ஹிந்தி பதிப்பான ரோபோவின் வெற்றி குறித்தும், இதைவிட சிறப்பாக கூற முடியுமா என்ன?
சும்மா கிடைத்ததா இந்த வெற்றி?
தொடர் தோல்வி கொடுத்துக்கொண்டிருக்கும் ஹீரோக்களே சினிமாவில் கவனம் செலுத்தாது, பதவி ஆசையில், அரசியல் ஒத்திகை பார்க்க துடிக்கும் இன்றைய காலகட்டங்களில் எத்துனையோ பிளாக்பஸ்டர்களை அனாயசமாக கொடுத்த, மகுடங்கள் தன்னை தேடி வந்தபோதும் ‘எனக்கு அனுபவமில்லை’ என்று மறுத்த, மக்கள் செல்வாக்கு மிக்க நம் தலைவர், தனக்கு கூறப்பட்ட கதையை மிகவும் கவனத்துடன் பரிசீலித்து, அதை ஒப்புக்கொள்ளும் முன் தீர யோசித்து, பின் இயக்குனரின் மீது முழு நம்பிக்கை வைத்து தம்மை ஒப்படைத்து, அங்கீகாரத்துக்கு போராடும் ஒரு அறிமுக நாயகனைப் போல கடுமையாக உழைத்து, இரண்டரை வருடங்கள் ஒரு ரூபாய் அட்வான்ஸ் கூட பெறாமல் முழு அர்பணிப்புடன் நடித்து (60 வயதிலும்), படம் பிரச்னைகளை சந்தித்து மெல்ல மெல்ல முன்னேறியபோது பொறுமை காத்து, மைக் கிடைத்த போதெல்லாம் தேவையற்ற சவால்களை விட்டுக்கொண்டிருக்காமல் அடக்கமாக அனைத்தையும் எதிர்கொண்டு, படம் ரிலீசாகி சாதனைகளை குவித்துகொண்டிருந்த தருணத்தில் கூட துளியும் கர்வப்படாது, அந்த பெருமையை இயக்குனருக்கு உரியதாக்கி – இறுதியில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று சொல்கிறார்.
நிலைமை இப்படியிருக்க, சில அறிவுஜீவிகள் ’வடை போச்சே’ என்ற தங்களின் விரக்தியை மறைத்துக்கொண்டு எந்திரனின் வெற்றி குறித்து புதிய காரணங்களை கண்டுபிடித்து கிளம்பியிருக்கிறார்கள்.
நம்மால் என்ன செய்ய முடியும்? சிரிப்பதை தவிர!
[END]
No comments:
Post a Comment