கவியரசு வைரமுத்துவின் வாரிசு மதன் கார்க்கி ‘எந்திரன்’ படத்தில் பணியாற்றிவருவது தெரிந்ததே. (ஏற்கனவே இது பற்றி நமது தளத்தில் செய்தி வந்துள்ளது.)
ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லான்ட் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி துறையில் மேற்படிப்பு படித்து, அங்கேயே ‘Sensor’ தொழில் நுட்பத்தில் ஆராய்ச்சியையும் வெற்றிகரமாக முடித்து பின்னர் டாக்டர் பட்டத்தையும் பெற்றுவிட்டு, இங்கே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் துணைப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவர், எந்திரன் படத்தில் தொழில்நுட்ப ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். கூடவே அசத்தலான எந்திரனுக்கு பாடலாசிரியரும் கூட.
எந்திரனுக்கு எழுதிய பாடலுக்காக இயக்குனர் ஷங்கரிடம் கார்க்கி சமீபத்தில் சபாஷ் வாங்கியிருக்கிறார்.
தான் எழுதிய கவிதைத் தொகுப்புகளை, இயக்குனர் ஷங்கர் உட்பட பலரிடம் ஏற்கனவே காண்பித்திருக்கிறேன். திடீரென்று ஒரு நாள் ஷங்கர் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. பாடல் எழுத அல்ல. அவரது கணினி அறிவை பயன்படுத்திக்கொள்ள.
“எந்திரன் படத்தில் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய சம்மதமா?” எனக் கேட்டிருக்கிறார்கள். மறுக்கவா முடியும்? சந்தோஷத்தோடு அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். கூடவே பாடல் எழுதும் வாய்ப்பையும் நினைபடுத்தியிருக்கிறார். அவரது ஆர்வத்தை பார்த்த ஷங்கர் கூடவே பாடல் எழுதும் வாய்ப்பையும் தந்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட்டெழுதும் பொன்னான வாய்ப்பை - அதுவும் சூப்பர் ஸ்டாருக்கு - சரியாக பயன்படுத்தி, அசத்தலான பல சரணங்களையும், பல்லவிகளையும் மெனக்கெட்டு எழுதி ஷங்கரை அசரவைத்திருக்கிறார். பத்தே நாளில் ரெக்கார்டிங், அடுத்தடுத்து ஷூட்டிங் என அப்பாடல் பிரமாதமாகவந்திருக்கிறதாம்.
மதன் கார்க்கி வைரமுத்துவின் மகன் என்பதால் அல்ல, தனது முழு தகுதியையும் வைத்து தான் எந்திரன் படத்தில் இடம் பிடித்திருக்கிறார் என்பதை இப்போது புரிந்த்கொண்டிருப்பீர்களே…!!
No comments:
Post a Comment