நண்பர்களே, நமது தளம் சார்பாக, நமது அன்புத் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 61 வது பிறந்த நாள் சென்னை, அண்ணா நகர் மேற்க்கில் உள்ள மாற்றுத் திறன் குழந்தைகள் மறுவாழ்வு மையத்தில் எளிமையான முறையில், இன்று மதியம் கொண்டாடப்படவுள்ளது.
இன்றைக்கு மதியம் 3.00 மணிக்கு அந்த இல்லத்தில் உள்ள சுமார் 65 குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்கள் முன்னிலையில் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது.
நமது தள வாசகர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
நமது மற்ற கொண்டாட்டங்கள் மற்றும் செயல்கள் பற்றி மறுபடியும் இங்கு அறிவிக்கிறேன்.
Venue : Guild of Service, Home for Handicapped Children, No. 1175, D Block, School Road, (Near Thirumangalam Police Station), Anna Nagar West, Chennai – 101. (Bus-stop: Anna nagar West Terminus). Ph: 26151906, 26261055.
Date : Saturday 11 th December
Time : 3.00 p.m.
நண்பர்கள் மற்றும் மன்றத் தோழர்களின் சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பற்றிய செய்திகள் + புகைப்படங்கள் நாளை முதல் நமது தளத்தில் இடம் பெற துவங்கும்.
———————————————————-
குறிப்பு : நமது தளம் பற்றிய விசேஷ கவரேஜ் News X தொலைக்காட்சியில் நாளை ஒளிபரப்பாகவிருக்கிறது. சுமார் அரை மணிநேரம் நம்ம தளத்தை பற்றியும் தலைவர் பற்றியும் என் கருத்துக்களை ஆங்கிலத்துல சொல்லியிருக்கேன். ஒரு நிமிஷம் அல்லது அரை நிமிஷமா அதை எடிட் பண்ணி CRISP ஆ போடுவாங்க. பார்க்கலாம் எப்படி வருதுன்னு… இந்த கவரேஜ்ல சொல்ல நினைச்ச சில நல்ல விஷயங்களை பதட்டம் காரணமா சொல்ல முடியலே… இருந்தாலும் ஓரளவு சமாளிச்சிட்டேன். (எங்கே… கேமிராவை பார்த்தாலே நாக்கு குழறுது!)
———————————————————-
No comments:
Post a Comment