
தீபாவளிக்கு வெளியான ஆதவன் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த ரஜினி, படத்தில் இடம் பெற்ற மற்ற காட்சிகளை விட வடிவேலு காமெடியைத்தான் வெகுவாக ரசித்து சிரித்தாராம்.
இதைப் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
ஆதவன் படத்துக்கு ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பு நாங்களே எதிர்பார்க்காதது. மொத்தம் 516 தியேட்டர்களில் வெளியிட்டோம். என்எஸ்ஸி ஏரியாவில் மட்டும் ரூ.1 கோடியைத் தாண்டிவிட்டது படத்தின் வசூல்.படத்தை தமிழக முதல்வர் கலைஞர் பார்த்துவிட்டு, நல்ல ஜனரஞ்சகமான படம் என்று பாராட்டினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்துடன் இந்தப் படத்தைப் பார்த்தார். அவருக்குப் படத்திலேயே வடிவேலு காமெடிதான் பிடித்திருந்தது. வடிவேலுவின் காமெடி அருமையாக இருந்ததாகவும், சந்திரமுகிக்குப் பிறகு இந்தப் படத்தில் வடிவேலு தூள் கிளப்பியிருப்பதாகவும் கூறிப் பாராட்டினார்.கூடவே, எனக்கும் சூர்யாவுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்" என்றார் உதயநிதி.
No comments:
Post a Comment