சுல்தான் - இம்ப்ரஸ் ஆன ரஜினி & கலக்கப்போகும் எந்திரன் கிராபிக்ஸ்

1) த்ரீ-டி அனிமேஷன் என்பது அத்துணை சுலபம் அல்ல - சௌந்தர்யா ரஜினி
சௌந்தர்யாவை பார்க்கும் எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி சுல்தான் எந்த ஸ்டேஜில் இருக்கிறது? எப்பொழுது ரிலீஸ்? என்பது தான். ஒரு வார இதழுக்கு “கோவா” பட டீம் அளித்துள்ள பேட்டியில் ‘சுல்தான்’ பற்றிய கேள்விக்கு சௌந்தர்யா கூறியிருக்கும் பதில் பல சந்தேகங்களை தீர்க்கும் என நம்பலாம். (தனது பதில் முழுக்கசூப்பர் ஸ்டாரை ‘தலைவர்’ என்றே குறிப்பிடுகிறார் சௌந்தர்யா).
“தென் கிழக்கு ஆசியாவிலேயே முதன் முதலில் தயாருகிற 3D அனிமேஷன் படம் இது. கார்டூன் படம் இல்லை. ரஜினி ரஜினியாவே அவரோட முகம், பாடி லேங்குவேஜ், ஸ்டைல்ன்னு எதுவும் மாறாமல் அப்படியே வர்றார். அவருக்கு ஜோடி கூட உண்டு. ஏ.ஆர்.ரஹ்மான் ம்யூசிக்ல பாடல்கள் கூட இருக்கு. பீட்டர் ஹெயினோட திரில்லான ஃபைட் இருக்கு.”
சௌந்தர்யா மேலும் கூறுகையில், “ஜாக்கி சானை வெச்சு டி.வி.க்காக ஒரு கார்டூன் படம் எடுத்தாங்க. ஆனா ரியாளிஸ்டிக்கான 3D அனிமேஷன் படத்துல நடிச்ச முதல் தென் கிழக்கு ஆசிய ஹீரோ தலைவர் தான். கதை அவோரடது தான். டைரக்டரா நான் ஸ்க்ரீன் ப்ளே பண்ணி காண்பிச்சேன். அதுல நம்பிக்கை வந்து தான் ஒத்துகிட்டார். 15 நாள் பாடி ஸ்கேனிங்குக்கு பெல்ஜியம் வந்தார். பாடி சூட் போட்டுக்கிட்டு 47 INFRA-RED கேமிராவுல ஷூட் பண்ண நடிச்சார். இதுவரைக்கும் தயாரான படத்தை ரஷ் பார்த்துட்டு ரொம்ப உற்சாகமா இருக்கார். பொதுவா இந்த மாதிரி படங்களை தயாரிக்க வெளிநாடுகள்ளயே 7 அல்லது 8 வருஷம் கூட ஆகும். அத்தனை வேலை இருக்கு. இது வரைக்கும் 75% படம் முடிஞ்சிருக்கு.”
சூப்பர் ஸ்டார் குடும்பம்… ஒரு நடுத்தரக் குடும்பம்….
சூப்பர் ஸ்டாரை பற்றி மேலும் கூறுகையில், வீட்ல எல்லாருமே பயங்கர பிசி. அதுனால் கிடைக்குற நேரத்தை மிஸ் பண்றதில்லை. எப்படியும் மாசம் ரெண்டு தடவை டின்னர் சாப்பிட போயிடுவோம். சூப்பர் ஸ்டார் ஃபேமிலின்னா எல்லாமே வேற மாதிரி இருக்கும்னு நினைக்கவேண்டாம். ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்துல இருக்குற நடைமுறைகள் தான் எங்க குடும்பத்திலயும் இருக்கும்.
தீபாவளிக்கு கூட அப்படித்தான். காலைல குளிச்சுட்டு சாமி கும்பிட்டுட்டு தலைவர் வந்து பட்டாசு வேடிச்சாத் தான் தீபாவளியே… அதுக்கு பிறகு தான் சாப்பாடெல்லாம்.
தனது தாயார் லதா ரஜினியை பற்றி மறக்காமல் குறிப்பிடுகிறார் சௌந்தர்யா. “அம்மா, அத்துணை பிஸிலயும் குடும்பத்தை அத்தோட கட்டு குலையாம நடத்துற விதமே தனி அழகு.

2) எந்திரன் - ஒவ்வொரு ஃபிரேமும் பேசப்படும்
சிறந்த SPECIAL EFFECTS சுக்கான தேசிய விருதை ‘சிவாஜி’ படத்துக்காக பெற்றிருப்பவர்கள் INDIAN ARTISTS என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஸ்ரீநிவாஸ் மோகன் & ஜெயகுமார்.
‘சிவாஜி’ படத்தில் ஒரு கூடை சன்லைட் பாடலுக்கு சிறப்பான முறையில் SPECIAL EFFECTS செய்ததற்காக இவர்களுக்கு அந்த விருது கிடைத்துள்ளது. அந்த பாடலுக்காக இவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் மற்றும் இயக்குனர் ஷங்கர் தலைமையிலான சிவாஜி படக்குழுவினர் எடுத்துக்கொண்ட சிரத்தைகள் பற்றி பட்டியலிடுகிறார்கள் இந்த இரட்டையர்கள். எந்திரனுக்கும் இவர்கள் தான் SPECIAL EFFECTS என்பது சிறப்பு.

சரி… எந்திரன் பற்றி என்ன கூறுகிறார்கள் இருவரும்?
“எந்திரனில் நீங்கள் பார்க்கப்போகும் இந்த VISUAL EFFECTS படத்தின் ஒவ்வொரு FRAME ஐயும் பேச வைக்கும். படம் துவங்குவதற்கு முன்னர் PRE-PRODUCTION பணிகளுக்காக பல மாதங்கள் செலவிட்ட நாங்கள் இப்போது கிராபிக்ஸ் பணிக்காக (CG) அதைவிட அதிக மாதங்கள் செலவிட்டு வருகிறோம். ஆனால் எங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்பொழுது, வேறு என்ன வேண்டும்…!!” நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் இருவரும்.
நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...