தலைவர் எப்போதோ ரெடி; நீங்கள் ரெடியா?


சூப்பர் ஸ்டாரின் ரசிகர் சந்திப்பு குறித்து பல்வேறு ரசிகர்களுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிவருகிறேன். சந்திப்பு ஒவ்வொருவரையும் சென்றடைந்திருக்கும் விதம், எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், சந்திப்பு அவர்களுக்கு சொல்லும் சேதி என்ன என்று அறியமுற்படும்போது அந்த பிரமிப்பு இன்னும் பல மடங்கு கூடுகிறது.
ரசிகர்களின் பார்வை குறித்தும், சந்திப்பு குறித்து அவர்கள் நினைப்பது என்ன என்பது குறித்தும் அவ்வப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
தலைவர் எப்போதோ ரெடி; நமக்காகத்தான் காத்திருக்கிறார்
தென் மாவட்ட மன்ற பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது அவர் கூறிய கருத்து என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. “தலைவர் எப்போதோ அரசியலில் நுழைவதற்கு தகுதி, அனுபவம் ஆகியற்றை பெற்றுவிட்டார், அவர் காத்திருப்பது நாம் தகுதி பெறுவதற்கு தான். தான் மட்டும் சுத்தமாக இருந்து பயனில்லை. தன்னை சார்ந்தவர்களும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதை தான், அவர் என்னிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள் என்று கூறியிருக்கிறார். இப்படி அவர் கூறியிருப்பதால் பொருளாசை உள்ளவர்கள் அனைவரும் தாமாகவே வெளியேறிவிடுவர். மீதமிருப்பவர்கள் ஓரளவுக்கு அப்பழுக்கற்றவர்களாக இருப்பார்கள். அவர்களை பயிற்றுவிப்பது எளிது!” - எவ்வளவு உண்மை!! இந்திய அரசியல் வரலாற்றில் “என்னிடம் பணம் எதிர்பார்க்காதீர்கள்” என்று அறிவித்த ஒரே தலைவன் சூப்பர் ஸ்டார் மட்டுமே.
ரஜினியைப் பொறுத்தவரை தலைமைப் பதவிக்கு எப்போதோ தகுதி பெற்றுவிட்டார். மேலும் இந்த பன்னிரண்டு வருடங்கள் அவரை நன்கு பக்குவப்படுத்தியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளின் மீட்டிங்குகளுக்கு மாறுவேடங்களில் சென்று, அங்கு பேசப்படுபவற்றை உற்று கவனித்து வந்துள்ளார். மக்கள் அதற்க்கு காட்டும் ஒவ்வொரு ரிஆக்க்ஷனும் ரஜினிக்கு அத்துப்படி.
தலைவர் ஒதுங்கியிருந்தார்; உதறியிருந்தார். ஆனால் ஒருபோதும் உறங்கிவிடவில்லை.
(முதல்வர் பதவிக்கு அவர் முழு தகுதி பெற்றுவிட்டார் என்றும் குசேலன் பிரச்னையை சிறிதும் பதட்டப்படாமல் டிப்ளோமேடிக்ககாக அவர் தீர்த்த விதத்தை பற்றியும் ஒரு தனி பதிவே நான் அளித்தேன், நினைவிருக்கிறதா?)
http://www.rajinispecial.blogspot.com/
தன்னிடம் பதவி தானாக தேடி வந்தபோதே, அடுத்தவர்களின் வெற்றியில் தான் ஷீல்ட் வாங்க மறுத்தவர், அரசியல் பிரவேசம் குறித்து, இப்போதும் நிதானமும் பக்குவமும் காட்டி வருவது மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒன்றிரண்டு படம் ஹிட் கொடுத்த நடிகர்கள் கூட, நான் தான் அடுத்த முதல்வர் என்று விளம்பரங்கள் கொடுக்கும் இந்த காலத்தில் ரஜினியின் இந்த பக்குவம் ராமதாசை கூட கவர்ந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. நாளை ஒருவேளை அவர் அரசியலில் பிரவேசித்தாலும், ரஜினிக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது, சிரஞ்சீவியை பார்த்து அவர் அரசியலில் குதிக்கிறார் போன்ற வாதங்கள் மக்களிடம் எடுபடாது.
ரஜினி சாமர்த்தியமாக அது போன்ற வாதங்களுக்கு இப்போதே வைத்துவிட்டார் ஆப்பு.
குமுதம் சூப்பர் ஸ்டாரின் சமீபத்திய ரசிகர் சந்திப்பை பற்றி அருமையான சுருக்கமான கட்டுரை வெளியிட்டுள்ளது. கீழே அதை ஸ்கேன் கட்டிங்காக தந்திருக்கிறேன்.
ரசிகர் சந்திப்பு குறித்து பதிவுகள் இன்னும் வரும், வந்துகொண்டேயிருக்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...