முழு வீச்சில் தயாராகி வரும் ரசிகர்கள்


அக்டோபர் சந்திப்பு குறித்து சத்தியநாராயணா அனைத்து மாவட்ட ரசிகர்களுடனும் தொலைபேசியில் பேசிவருகிறார். ஒரு மாவட்டத்திற்கு ஐந்து ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர் என்று ஸ்ட்ரிக்டாக கூறி வருகிறார். ஆனால் மாவட்ட நிர்வாகத்தினர் ஐந்து பேர் போதாது, குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்திற்கு 15 பேரையாவது அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுவருகின்றனர். சத்தி, “ஆகட்டும் பார்க்கலாம்!” என்று கூறி வருகிறார்.
அனைத்து மாவட்டங்களிலும் தற்போது ரசிகர்கள் சந்திப்பின்போது தலைவரிடம் என்ன பேசுவது, என்ன கோரிக்கைகள் வைப்பது என்று தங்களுக்குள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
பெரும்பாலான மன்றத்தினர், கோரிக்கைகளை வேண்டுகோள்களை பேப்பர்களில் நீட்டாக டைப் செய்து கொண்டு செல்ல தீர்மானித்துள்ளனர்.
இதனிடையே, ரசிகர்களின் சந்திப்பு ஏற்பாடுகள் குறித்து நாளிதழ்களுக்கு அளிக்கப்பட்ட செய்தி பின்வருமாறு:
…………………………………………………………………………………………………………………
தலைவா வா! தலைமை ஏற்க வா!!
வரும் அக்டோபர் மாதம் முதல் வாரம் ரஜினி தனது ரசிகர்களை சந்திப்பதாக கூறியிருப்பது தெரிந்ததே. இதையடுத்து ரஜினியை வரவேற்க ரசிகர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சென்னை மாற்று தமிழகம் முழுதும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்படுகிறது. சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. சென்னை நகர் முழுக்க, “தலைவா தலைமை ஏற்க வா” என்று ரஜினிக்கு அழைப்பு விடுத்து பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திருவான்மியூர் பகுதி ரசிகர்கள் ரஜினி பாஸ்கர் தலைமையில், திருவான்மியூர் பஸ் டெப்போ அருகில் அக்டோபர் சந்திப்பை முன்னிட்டு பேனர் வைத்திருக்கின்றனர்.
நாளை நமதே, தமிழ் நாடும் நமதே என்ற வாசகத்துடன் காணப்படும் இந்த பேனரில் ‘அக்டோபர் அரசியல் புரட்சி வெல்க’ என்று எழுதப்பட்டுள்ளது. பேனரில் எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினியின் படங்களோடு மஹாத்மா காந்தி, காமராஜர், விவேகானந்தர், அண்ணா, காயிதே மில்லத், பசும்பொன் தேவர் ஆகியோர் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன..
தமிழகம் முழுதும் இதேபோன்று பேனர்கள் வைக்க ரசிகர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.
இதையொட்டி சென்னை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது, “தலைவர் முதன் முறையாக அனைத்து மாவட்ட ரசிகர்களை சந்திப்பதாக கூறியிருக்கிறார். எனவே எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பேனர்கள் வைக்க மற்றும் போஸ்டர்கள் ஒட்ட முடிவு செய்திருக்கிறோம். தலைவர் பொதுவாக இத்தைகைய ஆடம்பரங்களை விரும்புவது கிடையாது. இருப்பினும் நாங்கள் அரசியல் கட்சி அல்ல. ரசிகர் மன்றம். எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். அவ்வளவே. சந்திப்பின்போது தலைவரிடமிருந்து நல்ல தகவல் வரும் பட்சத்தில் சமூக நலப்பணிகளோடு அதை கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்.”

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...