டோக்கியோவில் ஸ்ரேயாவுக்கு ரெட் கார்பெட் வரவேற்பு!

சிவாஜி 3D படத்தின் பிரீமியரை காண ஜப்பான் தலைநகர் சென்றுள்ளார் ஸ்ரேயா. அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்ப்பை கொடுத்து திக்குமுக்காட வைத்துவிட்டனர் ஜப்பானியர்கள்.

தனது தாயாருடன் ஜப்பான் சென்ற ஸ்ரேயா, படம் தேரியாயிடப்படும் திரையரங்கிற்கு முன்னாள் ரெட் கார்பெட் விரிக்கப்பட்டு, ஜப்பான் பாரம்பரியப்படி, கை ரிக்ஷாவில் அமரவைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டார்.

ஜப்பான் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தன.

“டோக்கியோ மிக அழகான நகரம். மக்கள் மிகவும் இனிமையானவர்கள். எனக்கு இந்த இடம் ரொம்ப பிடித்துவிட்டது. தமிழ் செல்வி என்ற காரெக்டரை எனக்கு தந்ததற்காக ஷங்கர் சாருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அதே போல எனக்கொரு அருமையான நடிகராக அமைந்ததற்கு  ரஜினி சாருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்திய சினிமா கண்ட மிக அற்புதமான இயக்குனர்களில் முத்னமையானவராக ஷங்கர் சார் எப்போதும் இருப்பார். அவருடன் பணிபுரிந்தது எனக்கு கிடைத்த அதரிஷ்டம்” என்று கூறியுள்ளார்.

சிவாஜி 3D படம் ஜப்பானில் பெறும் வரவேற்பு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து அம்மக்கள் கோச்சடையானை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறார்கள்.
———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...