திரையுலகில் "சூப்பர் ஸ்டார்" என்றாலே அனைவரது நினைவிற்கும் வருபவர்
"ரஜினிகாந்த்" தான். அவர்கள் தென்னிந்தியாவில் மட்டும் புகழ் பெற்று
விளங்கவில்லை. உலகம் முழுவதும் அனைவரது மனதிலும் நீங்கா இடத்தைப் பெற்று,
அனைவரது வீட்டிலும் ஒருவராக வாழ்ந்து வருகிறார். இத்தகைய புகழ் பெற்ற
ரஜினிகாந்த், தன் ஸ்டைலால் மட்டும் அனைவரையும் கவரவில்லை, பஞ்ச்
டயலாக்குகள் மூலமும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடியதை, தன்
படங்களின் வழியாக உண்மையாக வெளிகாட்டி வருகிறார். இவரது பெயரைக் கேட்டாலே
அனைவரின் மனதிலும் ஒரு குதூகலம் பிறக்கும். இத்தகைய சூப்பர் ஸ்டார்
ரஜினியின், சிறந்த, இன்றும் அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கும், மறக்க
முடியாத பஞ்ச் டயலாக்குகள் சிலவற்றை படித்து பாருங்களேன்...
* அதிலும்
நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிவந்த சிவாஜி படத்தில் வரும் டயலாக்குகளான
"பேரை கேட்டாலே, சும்மா அதிருதுல்ல...", "பன்னிங்க தான் கூட்டமா வரும்,
சிங்கம் எப்பவுமே சிங்கிளா தான் வரும்" போன்றவை சிறந்த பஞ்ச் டயலாக்காக
உள்ளது.
* ரஜினி அவர்கள் சிவாஜியுடன் நடித்த கடைசி படமான "படையப்பா"-வில் கூட வாழ்க்கையின் உண்மையை வெளிப்படுத்தும் டயலாக்கை சொல்லியுள்ளார். அதுதான் "அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல".
அதுமட்டுமல்லாமல், இன்னும் சில சூப்பர் மற்றும் சிந்திக்க வைக்கும் உண்மை டயலாக்குகளான...
* "எப்பவும் பொன், பெண், புகழ் பின்னாடி ஆம்பளை போகக் கூடாது. ஆம்பளைங்க பின்னாடி தான் இதெல்லாம் வரணும்."
* "நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்."
* "நம்ம வாழ்க்கை நம்ம கையில தான் இருக்கு."
* "நல்லவங்களை ஆண்டவன் நிறைய சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களை சோதிக்க மாட்டான், ஆனா கைவிட்டுருவான்."
* "கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது."
* "வாழ்க்கையில பயம் இருக்கலாம். ஆனால் பயமே வாழ்க்கையாகிடக் கூடாது."
* "கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்குறது எதுவும் நிலைக்காது."
இவை மட்டுமல்ல இன்னும் இருக்கின்றன. மேலும் ரஜினி அவர்களின் பஞ்ச் டயலாக்குகளுக்கு அளவே இல்லை. அந்த அளவு அவர் தன் ஸ்டைலோடு, மக்களையும் சிந்திக்க வைத்துள்ளார். என்ன நண்பர்களே! உங்களுக்கு பிடித்த டயலாக் என்னன்னு, எங்களோடயும் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

English summary
Super
Star Rajinikanth is not just impressing his style. he impressing people
with his punch dialogues also. And Super Star Rajinikanth’s films are
known for their “punch” dialogues. These are rhyming lines of dialogue
delivered by the Rajinikanth. So it quickly reached our people's heart.
No comments:
Post a Comment