AVM to re-release the 3D version of the 2007 mega blockbuster Sivaji, the Boss!

சூப்பர் ஸ்டாரின் மெகா பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘சிவாஜி’ தி பாஸ், விரைவில் 3D வடிவில் வெளியாகவிருக்கிறது. படத்தை தயாரித்த ஏ.வி.எம். ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம், இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சூப்பர் ஸ்டாரின் அசத்தலான நடிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சுண்டியிழுக்கும் இசையில், ஷங்கரின் அற்புத இயக்கத்தில், கே.வி.ஆனந்தின் நேர்த்தியான ஒளிப்பதிவில் வெளியான சிவாஜி திரைப்படம், ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் விருந்தாக அமைந்தது மட்டுமல்லாமல், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. அதுவரை இருந்த தமிழ் சினிமாவின் அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடித்தது. குறிப்பாக சந்திரமுகியின் ரெக்கார்டுகளை முறியடித்தது.
தமிழ் திரையுலகில் வர்த்தகம், விநியோகம், லாபம், முதலீடு, தொழில்நுட்பம், பிரம்மாண்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் டிரென்ட் செட்டிங் படமாக அமைந்த ‘சிவாஜி தி பாஸ்’ திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. உலகெங்கிலும் வசூலை வாரிக்குவித்த அந்த திரைப்படம், தமிழ் சினிமாவின் வர்த்தக எல்லைகளை விரிவுபடுத்தியது.
இந்நிலையில், அந்தப் படத்தை 3D தொழில் நுட்பத்தில் வெளியிட விரும்பிய ஏ.வி.எம். நிறுவனம் இந்த தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும், PRASAD VFX நிறுவனத்துடன் இணைந்து அதற்க்கான பணிகளில் சில மாதங்களுக்கு முன்பே இறங்கியது. தற்போது அந்த பணி நிறைவடைந்ததையடுத்து, படத்தை மிகப் பெரிய அளவில் தமிழகம் முழ்தும் ரீ-ரிலீஸ் செய்ய ஏ.வி.எம். திட்டமிட்டுள்ளது. அநேகமாக செப்டம்பர் மாதம் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிகிறது.
அண்மையில், இந்த மெருகூட்டப்பட்ட 3D படத்தை பிராசாத் ப்ரீவ்யூ திரையரங்கில் பார்த்த சூப்பர் ஸ்டார் மிகவும் இம்ப்ரெஸ் ஆகிவிட்டாராம். முழு வடிவத்தை திரையில் காண மிகவும் ஆவலாக இருக்கிறாராம். “அருமையா வந்திருக்கு. சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க” என்று சூப்பர் ஸ்டார் பச்சைக்கொடி காட்டியுள்ளதை அடுத்து, ஏ.வி.எம். நிறுவனம் மிகவும் உற்சாகமாக படத்தின் வர்த்தகம் தொடர்பான பணிகளில் இறங்கியுள்ளது.
2012 ஆம் ஆண்டு படங்களுக்கு சரியான போட்டி தான் அப்போ…. ஆல் தி பெஸ்ட் தலைவா…
வாழ்த்துக்கள் ஏ.வி.எம். சரவணன் சார் & குகன் சார்!
AVM to re-release the 3D version of the 2007 mega blockbuster Sivaji, the Boss!
AVM Productions, the producers of mega blockbuster of Sivaji, the Boss, all set to release the film in 3D version soon. The film acted as a trendsetter in the industry in various aspects including star remuneration, production cost, distribution rights, wide release, satellite rights, overseas release etc.
AVM has joined hands with RASAD VFX who are pioneers in 3D conversion technology. The process is said to have completed almost.
Superstar who watched the preview of the film, was astounded by its presentation in 3D and have asked for the producers to go ahead immediately with the release.
The producers are now holding talks with some distriubutors for a wide release of the film in the state.
It is once again proved that Superstar’s movies are always a perennial source of income to producers.
We pray the ALMIGHTY for the success of the film!
(Keep checking the same space for more info on the same!)
[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...