படம் ரிலீசாகாத நிலையிலும் இந்தியா டுடேவின் “சக்திமிக்க 50 பேர்” பட்டியலில் இடம் பிடித்து சூப்பர் ஸ்டார் ரஜினி சாதனை!

ஜினி ரசிகர்கள் எல்லாரும் காலரை தூக்கி விட்டுக்கோங்க. இந்தியா டுடேவின் “சக்திமிக்க 50 பேர் — 2012″ பட்டியலில் 4வது ஆண்டாக இடம் பிடித்து சூப்பர் ஸ்டார் ரஜினி சாதனை!
இந்த ஆண்டும் இந்தியா டுடேவின் ‘சக்திமிக்கவர்கள் 50′ பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். இந்தியா டுடே இதழ் அகில இந்திய அளவில் சக்திமிக்கவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 50 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் தொழில்துறை சக்கரவர்த்திகள், மீடியா ஜாம்பவான்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் என்று பல்வேறு பிரிவினர் இடம்பெற்றுருக்கின்றனர்.
அன்னா ஹசாரே முதலிடத்தில் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில், சூப்பர் ஸ்டாருடன் சேர்த்து தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், தொழிலதிபர்கள் ஷிவ் நாடார், டீ.வி.எஸ். குழுமத்தின் வேணு ஸ்ரீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, சன் குழுமத்தின் கலாநிதி மாறன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இது தவிர தமிழகத்தின் அரசியல் டாப் டென், அகில இந்திய அரசியல் டாப் டென் என தனித் தனி பட்டியல்கள் உண்டு. முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க.தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, ப.சிதம்பரம், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், டி.ஜி.பி. ராமானுஜம் உள்ளிட்டோர் அதில் இடம்பெற்றுள்ளனர்.
India Today Power List 2012  படம் ரிலீசாகாத நிலையிலும் இந்தியா டுடேவின் “சக்திமிக்க 50 பேர்” பட்டியலில் இடம் பிடித்து சூப்பர் ஸ்டார் ரஜினி சாதனை!
ஒவ்வொருவர் பற்றியும் விரிவான விபரங்களுடன் புகைப்படத்தோடு வெளியிட்டு அவர்கள் முந்தைய ஆண்டு என்ன ரேங்க்கில் இருந்தார்கள் என்பதை அடைப்பு குறிக்குள் போட்டு வெளியிட்டுள்ளனர். தவிர, ஏன் இந்த பட்டியலில் அவர்கள் இடம்பெற்றார்கள் என்பதற்கான காரணங்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
சூப்பர் ஸ்டாரை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் இடம் பெற்றுவருகிறார். இந்த ஆண்டு சென்ற ஆண்டை விட 8 ரேங்குகள் கீழே வந்துள்ளார். அவர் நடித்த படம் எதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் அவர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அமீகான், ஷாருக் கான், அமிதாப் பச்சான் ஆகியோர் வருடத்திற்கு குறைந்தது இரண்டு படங்களாவது நடித்து வெளியிட்டுவிடுகின்றனர்.
சூப்பர் ஸ்டாரோ படம் எதுவும் வெளிவராத நிலையிலும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் தலைவா!
Also check – (From our archives)
—————————————————————————–
இந்தியா டுடே பவர் லிஸ்ட் பட்டியலில் சூப்பர் ஸ்டார்
2011 ஆம் ஆண்டு
http://onlysuperstar.com/?p=10736
2010 ஆம் ஆண்டு
http://onlysuperstar.com/?p=6270
2009 ஆம் ஆண்டு
http://onlysuperstar.com/?p=2839

copy of  http://onlysuperstar.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...