“கோச்சடையான் தீபாவளி வெளியீடு” — லண்டன் புறப்படும் முன் விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் பேட்டி! Video Added!!

கோச்சடையான் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி குழுவினருடன் லண்டன் புறப்பட்டு சென்றா. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சௌந்தர்யா, உள்ளிட்ட பிரதான தொழில்நுட்ப கலைஞர்கள் உடன் சென்றனர்.
சூப்பர் ஸ்டார் லண்டன் கிளம்புவது குறித்து நமது டுவிட்டரில் (http://twitter.com/thalaivarfans) நேற்று காலை செய்தி வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம்!
Noble Poster  “கோச்சடையான் தீபாவளி வெளியீடு” — லண்டன் புறப்படும் முன் விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் பேட்டி! Video Added!!
முன்னதாக செய்தியாளர்களிடம் சூப்பர் ஸ்டார் பேசுகையில்,  படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறும் என்றும், பாடல் காட்சிகளும், முக்கிய வசனக் காட்சிகளும் படம்மாக்கப்படவிருக்கின்றன என்றும் குறிப்பிட்டார் ரஜினி. அவர் மேலும் கூறுகையில், இந்த படத்தில் புதிய ரஜினியை பார்க்கமுடியும் என்றும் படம் இதுவரை வெளியான படங்களை விட சிறப்பாக இருக்கும் என்றும், பொறுத்திருந்து பார்க்குமாறும் கூறினார் ரஜினி. படம் இந்த ஆண்டு எப்படியும் வெளியாகும் என்றும், தீபாவளி வெளியீட்டுக்கு வாய்ப்பு உண்டு என்ற தித்திப்பு செய்தியையும் அவர் கூறினார். இந்த லண்டன் ஷெட்யூலில் கிட்டத்தட்ட 40% படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் ரஜினி குறிப்பிட்டார்.
செய்தியாளர்களிடம் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், கோச்சடையான் நிறைவடைந்த பின்னர் ‘ராணா’ துவங்கும் என்று கூறினார். அது பற்றிய அறிவிப்பு அந்த நேரத்தில் தான் வெளியிடமுடியும் என்றும் கூறினார்.
“சாமி உலா வருது பின்னால; விபூதி வாசனை வருது முன்னால” என்பதை உணர்த்தும் விதமாக, கோச்சடையானின் இந்த குதூகல துவக்கத்தை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் நேற்று முன்தினமே சென்னை முழுக்க போஸ்டர்கள் எழுப்பியது தெரிந்ததே.
திருச்சி ரசிகர்கள் எழுப்பிய போஸ்டரை முன்னரே பார்த்தோம். தற்போது சென்னை ரசிகர்கள் நண்பர் நோபல் அலக்ஸ் & சண்முக சுந்தரம் ஆகியோர் எழுப்பியுள்ள போஸ்டரை பாருங்கள்.
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்ற முதுமொழிக்கேற்ப, போஸ்டர் சிறியது என்றாலும், அதில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் அர்த்தம் பொதிந்தது. அதனால் தானோ என்னவோ, போஸ்டரை பலர் நின்று பார்த்து படித்துவிட்டு சென்றார்கள் என்று நினைக்கிறேன்.
Video of Superstar’s interview @ Chennai Airport

Video URL : http://www.youtube.com/watch?v=SUjL-vetuQ0&feature=youtu.be
[END]
copy - http://onlysuperstar.com/?p=14179

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...