பிசினஸ் & வாழ்க்கை மட்டுமா? பங்குச் சந்தைக்கும் வழி காட்டுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி! ஆச்சரிய கட்டுரை!!

சூப்பர் ஸ்டார் திரையில் + நிஜத்தில் பேசிய பன்ச் டயலாக்குகளை ஆராய்ந்து அவற்றுள் பொதிந்து கிடக்கும் நிர்வாகவியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களை, ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் என்னும் ஒரு அற்புதமான நூலாக திரு.பி.சி.பாலசுப்ரமணியம் அவர்களும் திரு.கிட்டி அவர்களும் வெளியிட்டது உங்களுக்கு தெரியும். விற்பனையிலும் அந்த நூல் சாதனை படைத்து வருவதும் அறிந்ததே.
மேற்படி நூலுக்கு படித்தவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கிடைத்த வரவேற்பு பதிப்புலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
படத்தில் ஒரு நடிகன் உச்சரிக்கும் ஒரு சாதாரண வசனத்துக்கு இப்படியெல்லாம் அர்த்தம் கற்பிக்க வேண்டுமா? இதெல்லாம் கொஞ்சம் அதிகமில்லையா என்று கேட்பவர்கள் கூட ராஜ் டி.வி.யில் ஒவ்வொரு திங்களன்று இரவு 9.30 க்கு ஒளிபரப்பாகிவரும் ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் நிகழ்ச்சியை பார்த்தால் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வர்.
சாதனையாளர்களும் சாதிக்க துடிப்பவர்களும் மேற்படி பன்ச் டயலாக்குகள் எப்படி தங்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை பிரதிபலித்தன என்பதை எடுத்துக்கூறும்போது, நமக்கு ஒரு கணம் சிலிர்க்கிறது. நாம் முன்னரே கூறியபடி, சாதிக்க துடிப்பவர்களுக்கு அதற்கான உத்வேகம் எங்கிருந்து வந்தால் என்ன?
பங்குச்  சந்தை முதலீட்டுக்கும் உதவுகிறார் ரஜினி
ரஜினி அவர்களின் திரை + நிஜ வாழ்க்கை வசனங்கள் வணிக நிர்வாகத்துக்கும் வாழ்க்கைக்க்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பதே நமக்கு பெருமை சேர்க்கிறது எனும்போது, அவர் வாழ்க்கைமுறை + கொள்கைகள் பங்குச் சந்தைக்கும் அதன் முதலீட்டுக்கும் பெருமளவு உதவுகிறது என்பதை அறியும்போது இன்னும் வியப்பாக இருக்கிறது அல்லவா?
(Double Click the below images to ZOOM & READ the text!)
Nanayam Vikatan 12 640x472  பிசினஸ் & வாழ்க்கை மட்டுமா? பங்குச் சந்தைக்கும் வழி காட்டுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி! ஆச்சரிய கட்டுரை!!
விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் பிரபல வணிக இதழான நாணயம் விகடனில், கவர் ஸ்டோரி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிரபல பங்குச் சந்தை நிபுணர் நாகப்பன் ‘ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்’ என்ற தலைப்பில், ரஜினி அவர்களின் வாழ்க்கை முறை எவ்வாறு பாதுகாப்பான பங்கு சந்தை முதலீட்டை கற்றுக்கொடுக்கிறது என்பதை அழகாக விளக்கியுள்ளார்.
Nanayam Vikatan 2 640x472  பிசினஸ் & வாழ்க்கை மட்டுமா? பங்குச் சந்தைக்கும் வழி காட்டுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி! ஆச்சரிய கட்டுரை!!
உண்மையில் நாமெல்லாம் காலரை தூக்கி விட்டுக்கொள்ளவேண்டிய விஷயம் தான்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வழக்கமுள்ள நமது ரசிகர்களும் வாசக அன்பர்களும் மேற்படி கட்டுரையை படித்து பயனடையலாமே… தவிர, உங்கள் நண்பர்களுக்கும் இந்த கட்டுரையை பரிந்துரை செய்யலாமே…. நன்றி.

http://onlysuperstar.com/

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...