இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட வியூகம் & தலைவர் in ஸ்டேடியம் — சில சுவாரஸ்யமான தகவல்கள்!

“கெட்டவங்க ஜெயிக்கிற மாதிரி தான் தெரியும். ஆனா தோத்துடுவாங்க. நல்லவங்க தோக்குற மாதிரி தெரியும். ஆனா கடைசீல ஜெயிச்சிடுவாங்க.” – நேற்றைக்கு இந்தியா அணி நமது நீண்ட நாள் கனவை நனவாக்கி, கோப்பையை கைப்பற்றியபோது நாம் செய்த டுவீட் (Tweet) இது தான்.
Jai Ho 640x495  இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட வியூகம் & தலைவர் in ஸ்டேடியம் — சில சுவாரஸ்யமான தகவல்கள்!
தோல்விப் பாதைக்கு சென்றுகொண்டிருந்த இந்தியா அணியை வெற்றிப் பாதைக்கு இட்டு சென்ற பெருமை கேப்டன் டோனியையே சாரும். சரியான நேரத்தில் அவரே களமிறங்கி, பதட்டப்படாது, ஒன்று இரண்டு என அவர் பொறுமையாக காம்பீருடனும், யுவராஜுடனும் சேர்த்த ரன்கள் தான் நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றன.
முதலில் சொன்னது நமது தளம்….
இந்த மேட்ச்சை பொறுத்தவரை நமக்கெல்லாம் மிக மிக முக்கியமான ஒன்றாகும். காரணம் தலைவர் அதை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்ததால். ‘தலைவர் குடும்பத்துடன் மும்பையில் இறுதி மேட்ச்சை கண்டு ரசிப்பார்’ என்று முதலில் கூறியது நாம் தான். கடந்த வியாழனன்றே இது குறித்து டுவீட் செய்துவிட்டோம். (twitter.com/thalaivarfans)
தலைவர் பொதுவாக கிரிக்கெட் மேட்ச்களை ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நண்பர்களுடன் தான் கண்டு ரசிப்பார். சில சமயம் குடுமபத்தினருடன் போயஸ் கார்டன் இல்லத்தில். இந்த முறை, அவரது குடும்பத்தினர் நேரடியாக மேத்ச்சை ரசிக்க விரும்பவே, மும்பைக்கு அவர்களை அழைத்து சென்றார். கடந்த வியாழனன்று, ராணாவுக்கு போட்டோ ஷூட் முடிந்தவுடன், அன்று மாலையே மும்பை சென்றுவிட்டார் தலைவர்.
RAJINIWORLDCUPJ 640x420  இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட வியூகம் & தலைவர் in ஸ்டேடியம் — சில சுவாரஸ்யமான தகவல்கள்!
நேற்று நாம் கூறியபடியே தலைவர் ஸ்டேடியத்தில் தோன்றியதும் நமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தலைவரை எப்போடா மறுபடியும் காட்டுவார்கள் என்பதிலேயே நமது கவனம் இருந்தபடியால் மேட்ச்சை முழுமையாக ரசிக்க முடியாது திணறினோம். நமது நண்பர்களும் இதே போல உணர்ந்ததை நமக்கு வந்த எஸ்.எம்.எஸ்.கள் உணர்த்தியது.
ஒவ்வொரு முறையும் தலைவரை காட்டியபோதும், “ஹை நான் தலைவரை பார்த்துட்டேன்…”,  “ஹை… தலைவர் இந்தியா டீமோட டிரஸ் போட்டிருக்கார்” என்று எஸ்.எம்.எஸ்.கள் நமக்கு குவிந்தன.
274 ரன்களை இலங்கை அணி  குவித்தபோது, கோப்பை பற்றிய கனவு நம் ரசிகர்கள் நிறைய பேருக்கு போய்விட்டிருந்தது. இந்தியா பேட் செய்தவுடன் துவக்கத்திலேயே சேவாக்கும், டெண்டுல்கரும் வீழ்ந்துவிட, ஸ்டேடியத்தில் ஆர்பரித்துகொண்டிருந்த ரசிகர்கள் உட்பட நாடு முழுவதும் ஒட்டு மொத்த ரசிகர்களின் உற்சாகமும் குலைந்துபோனது.
மிகவும் உற்சாகமாக காணப்பட்ட தலைவரின் முகம் இருண்டுபோனது. சௌந்தர்யா அதிர்ச்சியுடன் காணப்பட்டார். அதற்க்கு பிறகு தலைவரை நீண்ட நேரம் காண முடியவில்லை. கேமிரா அவரை போகஸ் செய்ய முடியாத பகுதிக்கு சென்றுவிட்டார்.
அதற்க்கு பிறகு டோனி, களமிறங்கி ஸ்கோரை அழகாக உயர்த்திக்கொண்டே போக, தலைவரை மறுபடியும் பார்க்க முடிந்தது. நம் வீரர்கள் பவுண்டரிக்கு பந்தை விளாசியபோது சின்ன குழந்தை போல துள்ளி குதித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
தலைவர் நேரடியாக பார்த்துக்கொண்டிருப்பதால், நிச்சயம் நாம் கோப்பையை வென்றே ஆகவேண்டும் என்று பல ரசிகர்கள் பிரார்தித்த வண்ணமிருந்தனர்.
டெண்டுல்கர் அவுட் ஆனபோது, “ரஜினி இங்கே இருக்கிறார். இந்தியா தோல்வியடைய வாய்ப்பேயில்லை” என்று விமர்சகர் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் வினோத் கண்ணாவுடன் காணப்பட்ட தலைவர், பிறகு ஆமீர் கான் பக்கத்தில் இருந்தார். மேட்ச்சை பார்க்க தலைவரின் குடும்பத்தினர் வந்திருந்தாலும், அவர்களை ஆரம்பத்தில் பார்க்கமுடியவில்லை. இறுதியில் தன் கைகளில் இந்திய கொடியை அசைத்தபடி திருமதி. லதா ரஜினியை மகள் சௌந்தர்யாவுடன் பார்க்க முடிந்தது.
[Continued in PART II]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...