நாம் அலுவலகத்துக்கு செல்லும் வழியில், விருகம்பாக்கத்தில், உள்ள பிரபல உணவகம் – ’2 இட்லி 1 வடை.’ இந்த உணவகத்தின் வாயிலில் ‘கருத்து கந்தசாமி’ என்ற பெயருள்ள கரும்பலகையில், தினசரி அர்த்தமுள்ள பொன்மொழிகளை எழுதி வைப்பார்கள். இதை படிக்காது நான் அதை தாண்டி செல்வதில்லை. என்னைப் போலவே இதற்க்கு பல ரசிகர்கள் உள்ளனர். (ஏற்கனவே என்னை கவர்ந்த சில பொன்மொழிகளை நமது தளத்தில் தந்திருக்கிறேன்.)
இந்த உணவகத்தை, இடம் மாற்றி, சற்று தள்ளி, புதிதாக திறக்கப்படவுள்ள FAME CINEMAS (பழைய நேஷனல் தியேட்டர்) எதிரே, விஸ்தாரமான புதிய கட்டிடத்தில் முழுக்க முழுக்க ஏ.சி. வசதியுடன் ‘கூட்டாஞ்சோறு’ என்ற பெயரில் திறந்திருக்கிறார்கள். இந்த உணவகத்துக்கு இரண்டு சிறப்புக்கள் உள்ளன. முழுக்க முழுக்க மண் மணக்கும் கிராமிய உணவுவகைகளான கேழ்வரகு கூழ், கம்பங்களி, சத்து உருண்டை உள்ளிட்ட உணவு வகைகள் கிடைக்கும் என்பது ஒன்று. மற்றொன்று சூப்பர் ஸ்டார் தனது பொற்கரங்களால், திறந்து வைத்தார் என்பது தான்.
விஷயத்தை கேள்விப்பட்டபோது மிகவும் ஆச்சரியமடைந்தோம். தவிர நாம் கேள்விப்பட்ட இன்னொரு விஷயம், பிரபல் ஆர்ட் டைரக்டர் ஜி.கே. அவர்களுக்கு இது சொந்தமானது என்பது. இவர் ‘அருணாச்சலம்’ உள்ளிட்ட படங்களில் சூப்பர் ஸ்டாருடன் பணிபுரிந்துள்ளார்.
இது தொடர்பாக அவரையே கேட்டுவிடலாம் என்றெண்ணி ஜி.கே. அவர்களை தொடர்புகொண்டோம்… “இது என் மருமகனுக்கு சொந்தமான ஓட்டல். ஓட்டலை சற்று விரிவுபடுத்தி புதிய இடத்தில் துவக்கலாம் என்றெண்ணியபோது ரஜினி சாரை வைத்து துவக்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ரஜினி சார் என் நெருங்கிய நண்பர். அவரை தொடர்பு கொண்டு, ‘எனக்காகவும் என் மருமகனுக்ககவும் நீங்கள் எங்கள் புதிய கிளையை திறந்துவைத்து ஆசீர்வதிக்கவேண்டும்’ என்று அவரிடம் கேட்டபோது, ‘நிச்சயம் செய்கிறேன்’ என்று சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.
ஆனால் அவரை அழைத்து வந்து அந்த இடத்தில் ஓபன் செய்வது என்பது இயலாத காரியம் என்பது அந்த ஏற்பாடுகளில் மூழ்கியபோது தோன்றியது. கடுமையான போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படக்கூடிய இடம் அது. ரஜினி சார் வந்தால் கேட்கவேண்டுமா? எனவே, “நீங்கள் ஜஸ்ட் bless பண்ணுங்க சார் போதும். நேரில் கூட வரத் தேவையில்லை” என்றேன். உடனே என் பிள்ளைகளிடம், “பாருங்கப்பா நான் வர்ரேன்னு சொல்றேன். இவரு வேணாம்னு சொல்றாரு…”என்றார் சிரித்துக்கொண்டே.
“நீங்க போர்டை மட்டும் ரிலீஸ் செய்றதா வெச்சிக்கிறோம். நீங்க ஜஸ்ட் உங்க கையால நேம் போர்டை மட்டும் கொடுங்க சார் அது போதும். அதுவே நீங்க நேர்ல வந்து ரிலீஸ் ” என்று சொல்லி, அவரை சந்தித்து அவர் கையால் எங்கள் புதிய கடையின் போர்டை அவர் வீட்டில் வைத்து ரிலீஸ் செய்தோம்.
எங்கள் வர்த்தகம் சிறப்பாக நடைபெற்று தழைத்தோங்க வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார். இது தான் நடந்தது என்றார்” என்று முடித்துகொண்டார் ஜி.கே.
சமீபத்தில் 2 இட்லி 1 வடை – கருத்து கந்தசாமியின் கரும்பலகையில் கண்டது….
சத்தியமான வார்த்தைகள்; இதை உணர்ந்துவிட்டால் போதும்… எந்த துன்பமும் நம்மை எதுவும் செய்ய முடியாது!
[END]

No comments:
Post a Comment