வாங்கடே ஸ்டேடியத்தில் ரஜினி… உலகக் கோப்பைப் போட்டி அவரையே பார்த்துக் கொண்டிருந்தது” – இது ஒரு லேட்டஸ்ட் ரஜினி எஸ்எம்எஸ் வட இந்தியாவில்.
ரஜினி எந்த நிகழ்வுக்குப் போனாலும், அதன் மையப்புள்ளியாக அவரே மாறிவிடுவது பல வருடங்களாக நாம் பார்த்து வருவது.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபைத் தேர்தலும் இதற்கு விலக்கல்ல. ஏப்ரல் 13-ம் தேதி நடந்த தேர்தலை விட, அந்தத் தேர்தலில் ரஜினி வாக்களித்ததுதான் நாட்டின் அத்தனை மீடியாவிலும் பிரதான செய்தியானது. இன்னும் ஒரு வாரத்துக்கு இதுவே ஓடும் போலிருக்கிறது.
நேற்று ரஜினி வாக்களிக்க வந்தபோது, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகமே ரசிகர்கள், ரசிகர்களாக மாறிய மீடியாக்காரர்கள், பாதுகாப்புக்கு வந்த பின் அதை மறந்து ரசிகர்களுடன் ஐக்கியமாகிவிட்ட போலீசார்… இப்படித்தான் அந்த சூழலை வர்ணிக்க வேண்டும்.
வேறு வழியில்லாமல் இவர்கள் அனைவரையும் அமைதியாகப் பொறுத்துக் கொண்டு வாக்களிக்கப் போனார் ரஜினி (ரஜினி வாக்களித்த சில நிமிடங்களுக்குள் இதுகுறித்த விரிவான செய்தியை என்வழி அளித்திருந்தது).
தேர்தலில் வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. அதேநேரம் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதைக் காப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை. இந்த ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமும் கூட. அதற்காகத்தான் வாக்குச் சாவடிக்குள் தனியாக ஒரு இடத்தைத் தடுத்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால் நேற்று ரஜினி வாக்களித்தபோது, இந்த ரகசியம் காக்கப்படவில்லை. ரஜினி வாக்களிக்கும்போது, சுற்றிலும் எக்கச்சக்க புகைப்பட கேமராக்கள், வீடியோ கேமராக்கள் அவரது விரல் எந்த பட்டனை அழுத்துகிறதென்பதை குறிவைத்துக் காத்திருந்தன.
நேரமாகிக் கொண்டிருக்க சட்டென்று ரஜினி ஒரு பட்டனை அழுத்தினார். உடனே பின்னால் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ‘வாவ் தலைவா’ என குரல் கொடுக்க, சட்டென்று திரும்பினார் ரஜினி. ஆனால் “சார் ப்ளீஸ்… இன்னொரு முறை.. ஒரு டேக் எடுத்துக் கொள்கிறோம்” என புகைப்படக்காரர்கள் கேட்க, மறுக்காமல் ஒரு பட்டனை அழுத்துவது போல கை வைத்துக் காட்டினார். ஆனால் அழுத்தவில்லை.
ஆயிரம் விளக்கு தொகுதிக்கான வாக்குப் பதிவு எந்திரத்தில் முதலில் உதய சூரியன் சின்னமும், அதற்கு அடுத்து இரட்டை இலையும், அதற்கடுத்து மற்ற கட்சி, சுயேச்சை சின்னங்களும் வருவது போல அமைக்கப்பட்டிருந்தது. எனவே உதயசூரியனும் இரட்டை இலையும் அடுத்தடுத்து இருந்ததால், கூட்ட நெரிசலில் அவர் எதையும் கவனிக்காமல் சும்மா கைவைத்து போஸ் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.
முதல்வர் கருணாநிதி வாக்களித்தபோதும், தலைவரே மீண்டும் ஒரு போஸ் கொடுங்க என போட்டோகிராபர்கள் கேட்க, அவர் சிரித்தபடி, உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் மையமாக கையை வைத்துக் காட்டியது குறிப்பிடத்தக்கது (பார்க்க: படம்).
அடுத்த நிமிடம் ரஜினி இரட்டை இலைக்கு வாக்களித்துவிட்டதாக செய்திகளைப் பரப்ப ஆரம்பித்துவிட்டனர். உண்மையில் அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை வெளியில் அவரும் சொல்லக் கூடாது, பார்த்தவர்களும் சொல்லக் கூடாது. அதை வெளிப்படுத்த எந்த முயற்சி எடுத்தாலும் அது சட்டப்படி குற்றமே, செய்தியாக வெளியிடுவது உள்பட.
ரஜினி என்ற ஒரு மிகப் புகழ்பெற்ற மனிதர் வாக்குச் செலுத்த வரும்போது கூடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதும் அவருக்கான ‘பிரைவஸியை’ ஏற்படுத்தித் தருவதும் தேர்தல் அதிகாரிகளின் கடமை. வரிசையில் நின்று வாக்களிப்பது உள்பட அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று அதன்படி வாக்களிக்கும் ஒருவரை, தேவையே இல்லாமல் பெரும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறது மீடியாக்காரர்களின் ‘ஆர்வக் கோளாறு!’
ரஜினி யாருக்கு வாக்களித்தார் என்பதைக் காட்டுவது போன்ற வீடியோக்கள் ஒளிபரப்பாக ஆரம்பித்த சில நிமிடங்களில், ‘இது தண்டனைக்குரிய குற்றச்செயல். இந்த வீடியோவை எடுத்தவர்கள் மற்றும் வெளியிட்டவர்கள் கடும் தண்டனைக்குள்ளாவார்கள்’ என தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் அறிவித்ததும், ஒளிபரப்பை நிறுத்திக் கொண்டனர்.
ரஜினியின் விளக்கம்…
இதுகுறித்து பின்னர் ரஜினி ஒரு விளக்கம் அளித்திருந்தார்.
அதில், “நான் வாக்களித்து முடித்த பிறகு ஒரு தொலைக்காட்சி வீடியோகிராபர், வாக்களிப்பது போல மீண்டும் போஸ் தரச் சொன்னார். நான் எந்த சின்னம் என்று பார்க்காமல் விரல்களை வைத்துக் காட்டினேன். தற்செயலாக அது இரட்டை இலையாக இருந்திருக்கிறது”, என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவரது இந்த விளக்கம் எந்த மீடியாவிலும் பெரிதாகக் காட்டப்படவில்லை. இந்த நிலையில்தான் மாலையில் அவர் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் படம் பார்க்கச் சென்றார்.
ரஜினி வாக்களித்த வீடியோ காட்சி முதல்வரிடம் முன்பே சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. நடந்தது என்ன என்று தெரியாத முதல்வர், ரஜினியைப் பார்த்ததும் அவர் வாக்களித்தது மற்றும் அவரது பேட்டி குறித்து சிரித்தபடி வைரமுத்துவிடம் சொல்லிக் கொண்டிருக்க, ரஜினி வாக்களித்த போது நடந்ததை மட்டும் அவரிடம் கூறினார். பின்னர், படம் முடிந்ததும், தியாகராஜன், பிரசாந்த் மற்றும் முதல்வருடன் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த பிறகே புறப்பட்டுச் சென்றார்.
குறிப்பு: இது ஒரு பெரிய விவகாரமில்லை. எனவே இதைப் பற்றி மீண்டும் மீண்டும் அலசுவதில் அர்த்தமும் இல்லை. அவர் எந்த சின்னத்துக்குப் போட்டார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதைச் சொல்ல முடியாது. அதெல்லாம் ஒருபக்கமிருக்கட்டும்…, அன்று மாலையிலேயே முதல்வருடன் அமர்ந்து அவர் படம் பார்க்கப் போகிறார் என்றால் அவர் மனது எந்த அளவு நேர்மையானது எனப் புரிகிறதல்லவா!
-வினோ
என்வழி ஸ்பெஷல்

No comments:
Post a Comment