பொதுவாக அனைவரும் வாக்குச் சாவடிக்கு நடந்து சென்று தான் வாக்களிப்பார்கள். ஆனால் சரித்திரத்திலேயே ரசிகர்கள் வெள்ளத்தில் நீந்தி சென்று வாக்களித்தவர் ரஜினி ஒருவராகத் தான் இருக்கமுடியும். அந்தளவு, இந்த சட்டப் பேரவை தேர்தலில் அவர் ஜன சமுத்திரத்தில் நீந்தி சென்று தன் வாக்கை பதிவு செய்ய வேண்டியிருந்தது.
இத்துணைக்கும் சூப்பர் ஸ்டாரின் வருகை நேரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. நாளிதழ்களில் கூட காலை 8.30 மணிக்கு ரஜினி வாக்களிக்கிறார் என்று தான் கூறப்பட்டிருந்தது. ஆனால், அவர் வரவில்லை. பல ஆண்டுகளாக அவர் வாக்களிக்கும் போது ஸ்டெல்லா மாரிஸ் வந்துவிடும் வழக்கம் உள்ள ரசிகர்கள் எதற்கும் மசிந்துகொடுக்கவில்லை. சுமார் 10 மணிக்கு அதிமுக தலைவர் ஜெயலலிதா வந்து வாக்களித்துவிட்டு சென்ற பின்னர், அடுத்து ரஜினி வருவார் என்று ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. ரசிகர்களுடன் சேர்த்து அந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த அந்தப் பகுதி பொது மக்களும் தலைவரை தரிசனம் செய்ய காத்திருக்க ஆரம்பித்தனர்.
அனைவரும் வாயிலில் ஆவலுடன் காத்திருந்தனர். அக்கம்பக்க வி.ஐ.பி. வாக்குச் சாவடிகளில் உள்ள பத்திரிக்கை புகைப்படக்கார்களுக்கு தகவல்கள் பறக்க, அனைவரும் முண்டியடித்து ஸ்டெல்லா மாரீஸ் விரைந்தனர். தேசிய தொலைக்காட்சிகள் அனைத்தும் தங்கள் ரிலே வேனுடன் தயாராக இருந்தனர். சரியாக, சுமார் 10.45 மணிக்கு சூப்பர் ஸ்டாரின் சில்வர் நிற டவேரா ஸ்டெல்லா மாரீஸ் வளாகத்துக்குள் நுழைய, ஸ்டெல்லாம் மாரீஸ் எங்கும் “தலைவா…தலைவா…சூப்பர் ஸ்டார் வாழ்க… சூப்பர் ஸ்டார் வாழ்க” போன்ற கோஷங்கள் தான் கேட்டது.
சூப்பர் ஸ்டார் காரிலிருந்து இறங்கவே மிகவும் கஷ்டப்பட்டார். ரசிகர்கள் நாலாபக்கங்களிலிருந்தும் முண்டியடித்து பாய்ந்தனர். ஆளாளுக்கு அவருக்கு கைகொடுக்க முண்டியடிக்க, அங்கிருந்த பி.ஆர்.ஒ. ரியாஸ் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாது திணறினார். (கவனிக்க முதல் புகைப்படம்).
கருப்பு பேண்ட், ப்ளு கலர் சட்டை, கூலிங் கிளாஸ் அணிந்து வந்திருந்த ரஜினி ஓட்டுச்சாவடிக்குள் செல்ல முயன்றபோது திடீரென அவரை, அவருடன் வந்தவர்கள் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டனர். கல்லூரிக்குள் நுழைந்து விட்ட ரஜினி அங்கு தனது ஓட்டுச் சாவடி இல்லாததால் திரும்பினார். இதையடுத்து அவரை 167-வது எண் ஓட்டுச்சாவடிக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள், உங்கள் பெயர் 169-வது வாக்குச்சாவடியில் உள்ளது. அது எதிர்புறம் உள்ளது. அங்கு செல்லுங்கள் என்றனர்.
இதையடுத்து ரஜினி அங்கிருந்து நடந்தே 169-வது வாக்குச்சாவடிக்கு வந்தார். அலைக்கழிக்கப்பட்ட அவர் விறுவிறுவென உள்ளே சென்றார். ரஜினி ஓட்டுப்போடுவதை படம் பிடிக்க தொலைக் காட்சி, பத்திரிகை ஃபோட்டோகிராபர்கள் நூற்றுக்கும் மேல் திரண்டிருந்தனர். இதனால் ரஜினி சற்று சிரமத்துக்குள்ளானார். அவருடன் எண்ணற்ற ரசிகர்களும் உள்ளே ஒரு சேர நுழைந்தனர்.
காவலுக்கு நின்றிருந்த போலீசார் ஒன்றும் செய்ய இயலாது தவித்தனர். அவர்களும் ரசிகர்களோடு ரசிகராக அனைத்தையும் பார்க்க தான் முடிந்ததே தவிர ரசிகர்களின் உற்சாகத்துக்கு இடையே எதையும் செய்ய இயலவில்லை. (கவனிக்க புகைப்படம்).
அரசியல துறை முதல் சினிமா வரை பலவேறு முக்கியப் பிரமுகர்கள் இன்று பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். ஆனால் யார் வாக்களிக்கும்போது இப்படி ஒரு கூட்டமோ பரபரப்போ இல்லை. சூப்பர் ஸ்டாருக்கு தான் அது அதிக பட்சமாக இருந்தது.
ஹால் திணறியது
ரசிகர்களுடன் 20 க்கும் மேற்பட்ட தனியார் தொலைக்காட்சிகளின் புகைப்படக்காரர்களும் வீடியோக்ராபர்களும் ஒரு சேர உள்ள நுழைய அந்த சிறிய ஹால் இடமில்லாது பிதுங்கியது. ஆளாளுக்கு அவரை கேமிராவிலும் மொபைலிலும் புகைப்படம் எடுக்க முயன்றனர். ஒருவர் பின்னால் இருந்த ஜன்னலிருந்து பின்பக்கம் ஏறி மொபைலில் புகைப்படம் எடுப்பதை கவனியுங்கள்.
சூப்பர் ஸ்டார் வாக்களித்த போது, அவருக்கு அருகிலும் அவரை சுற்றியும் பலர் நின்றுகொண்டிருந்தனர். இதை தொலைக்காட்சியிலும் புகைப்படங்களிலும் பார்த்தபோது என்னவோ போலிருந்தது. தலைவர் ரசிகர்களிடமும் மீடியாவிடமும் மென்மையாக நடந்துகொள்வதை அவர்கள் OVER ADVANTAGE எடுத்துக் கொள்கிறார்களோ என்ற எண்ணம் வராமல் இல்லை.
சில கேள்விகள்
பாதுகாப்பு மற்றும் கெடுபிடி மிகுந்த ஒரு வி.வி.ஐ.பி. வாக்குச் சாவடியில் தேர்தல் கமிஷன் எப்படி இத்துனை பேரை உள்ளே அனுமதித்தது…? போலீசார் ஏன் அதிகளவு பணியில் அமர்த்தப்படவில்லை? போன்ற கேள்விகள் டி.வி.பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் பலருக்கு எழுந்தது. நாடே போற்றும் ஒரு மாபெரும் நடிகர், தனியாக, சுதந்திரமாக சென்று வாக்களிக்க முடியாது போனது ஏன்? தவறு எங்கே நிகழ்ந்தது…? தயவு செய்து இனி இது போல நடக்காது பார்த்துக்கொள்வது சம்பந்தப்பட்டவர்கள் கடமையாகும்.
அதே போல, அவர் உள்ள நடந்து வந்த போது, சில ரசிகர்கள் (வழக்கமாக வருகிறவர்கள் அல்ல) அவரை தொட்டுப் பார்க்க முயன்று, அவரை கிள்ளி, முத்தம் கொடுத்து, கசக்கி. பிழிந்து ஒரு வழி செய்துவிட்டனர். ஆனால் சிறிது கூட தலைவர் முகம் சுளிக்கவில்லை. “இருங்கப்பா… தள்ளிவிட்டுதாதீங்க…” என்று ஒரே ஒரு முறை சொன்னார்.
ரசிகர் அடித்த கமெண்ட்
நடந்த களேபரங்களை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்த நம் மூத்த ரசிகர் ஒருவர் சொன்னது : “இதுவே தலைவர் இடத்துல ‘வேட்பாளரை மொத்துன அந்த நடிகர்’ மட்டும் இருந்திருந்தா ரசிகர்கள் எல்லாருக்கும் செமத்தியா உதை விழுந்திருக்கும். தலைவரா இருக்கிறதால எல்லாத்தையும் சகிச்சுகிட்டு அவர் பாட்டுக்கு போயிட்டார். அந்தளவுக்கு அவரை படுத்திட்டாங்க” என்று குறிப்பிட்டார். உண்மை தான்.
——————————————————
Subscribe our twitter in your mobile and get free SMS updates on thalaivar!
Receive our instant updates & other flash news about thalaivar from twitter in your mobile for free.
You will get all our tweets absolutely free in your mobile. Never miss a hot happening about thalaivar.
(Abroad fans please refer our home page http://twitter.com/thalaivarfans for respective code numbers).
——————————————————
[END]

Just type ‘follow thalaivarfans’ and send to 53000
You will be charged Re.1 as one time charge. Then it is free.You will get all our tweets absolutely free in your mobile. Never miss a hot happening about thalaivar.
(Abroad fans please refer our home page http://twitter.com/thalaivarfans for respective code numbers).
——————————————————
[END]
No comments:
Post a Comment