சச்சின் அவுட்…டென்ஷனில் ரஜினி!
கிரிக்கெட் விளையாட்டின் மிகத் தீவிரமான ரசிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.
முக்கியப் போட்டிகளை, ஆர்வம் காரணமாக நேரில் போய் பார்த்து ரசிப்பது அவர் வழக்கம். அதன்படி இந்த முறை இந்திய – இலங்கை அணிகளுக்கிடையே மும்பையில் இன்று நடக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை, வான்கடே ஸ்டேடியத்தில் அமர்ந்து பார்த்து வருகிறார் ரஜினி.
தனது இளைய மகள் சௌந்தர்யாவுடன் வந்துள்ள ரஜினி, கிரிகெட் வீரர்கள் அணியும் சீருடையை அணிந்து விஐபிக்கள் பகுதியில் அமர்ந்துள்ளார்.
ரஜினி வந்திருப்பது தெரிந்ததும், ரசிகர்கள் உற்சாகம் கரை புரண்டது. ஆர்வ மிகுதியால் ஆரவாரம் செய்தனர்.
இந்தியா பேட்டிங்கைத் துவங்கியதும் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்த ரஜினியை, சேவாக்கின் டக் அவுட் அப்செட்டாக்கியது. அடுத்து வந்த கம்பீரும் டெண்டுல்கரும் ஓரளவு தாக்குப் பிடித்த ஆடியதால் உற்சாகமடைந்த ரஜினி, டெண்டுல்கர் அவுட்டானதும் மிகுந்த டென்ஷனாகிவிட்டார்.
அவர் முகத்தில் கோபமும் ஏமாற்றமும் தெரிந்தது. தொடர்ந்து இந்திய வீரர்கள் ஆடி வருகிறனர். இரண்டு விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை எடுத்துள்ளது இந்திய அணி.
-என்வழி
No comments:
Post a Comment