2009 ஆம் ஆண்டு இறுதியில் சூப்பர் ஸ்டாரின் துனைவியார் திருமதி.லதா ரஜினிகாந்த் அவர்கள் IBNLIVE தொலைகாட்சிக்கு ஆங்கிலத்தில் அளித்த பேட்டியின் முழு எழுத்துரு இது. சுமார் ஒரு மணிநேரம் மேடம் அவர்கள் அளித்த பேட்டியின் ஒரு சில நிமிடங்கள் மட்டும் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. முழு தொகுப்பை நமது தளத்தில் வெளியிடுவதற்காக உரிய அனுமதி பெற்று இங்கு தந்திருக்கிறேன். இதுவரை இது வேறு எங்கும் வெளியாகவில்லை. ஓராண்டுகள் ஆகியும் நேற்று எடுத்த பேட்டி போல மேடம் கூறிய கருத்துக்கள் புதிதாகவே தோன்றுவது இதன் சிறப்பு.
மிகப் பெரிய பேட்டியாதலால் இரு தொகுப்பாக தருகிறேன். மொழிபெயர்ப்பதற்கு நேரம் இன்றி இத்துனை நாள் இதை வெளியிடாது வைத்திருந்தேன்.
நான் திட்டமிட்ட பொங்கல் ஸ்பெஷல் பதிவுகளில் இதுவும் ஒன்று. (மற்றவை ஒன்றன் பின் ஒன்றாக வரும்.)
இத்துனை ஆண்டுகளில் இதுவரை மேடம் இப்படி ஒரு விரிவான பேட்டியை அளித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பம், ரசிகர்கள், அரசியல், என அனைத்து கேள்விகளுக்கும் மிக அழகாக பதிலளித்துள்ளார். இதை நமக்காக முழுமையாக மொழி பெயர்த்து தந்திருப்பவர் நண்பர் சிட்டி. அவருக்கு நம் தள வாசகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி.
சுவாரஸ்யத்திர்க்காக தலைவரின் பொருத்தமான அரிய புகைப்படங்களை நமது தொகுப்பிலிருந்து தந்திருக்கிறேன். பதிவை அவை நிச்சயம் மெருகூட்டும் என்று நம்புகிறேன்.
—————————————————————
கேள்வி 1 : “ரஜினிகாந்த் அபூர்வ ராகங்களில் அறிமுகம் ஆவதர்க்கு முன்பு அவரது வாழ்க்கை எப்படி இருந்தது? அவர் படங்களில் நடிப்பதையே குறிக்கோளாக கொண்டு இருந்தாரா?
மேடம்: “அவர் ஒரு பிறவி கலைஞன் அப்படின்னு சொல்லலாம். ஆனால் அவரின் ஆரம்ப கால வாழ்க்கை ரொம்ப கடினமானது. அவரின் சிறு வயதில் நடிப்பு ஆர்வம் வந்திருக்க முடியாது. அவரின் பள்ளி மேல்படிப்பு மற்றும் கல்லூரியில் தான் அவருக்குள் இருக்கும் அந்த பிறவி கலைஞன் மெல்ல மெல்ல அந்த நாடகங்களில் உருவெடுத்திருக்கிறான் என்று சொல்லலாம்.
குடும்ப சூழ்நிலை காரணமாக, அவர் நடத்துனராக பணியாற்ற வேண்டிருந்தது. அவரின் நண்பர்கள் தான் அவரை நாடகத்தில் நடிக்க வைத்தனர். அதில் தான் ரஜினிகாந்த் உருவானார், அதில் தான் அவரது நண்பர்கள் அவருக்குள் இருக்கும் அந்த நடிகனை களை எடுத்தனர். அவருக்கு அமைந்த நண்பர்கள், அருமையான நண்பர்கள். அவர்கள் அனைவரும் அவர்க்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் ஊட்டி, சென்னைக்கு அவரை அனுப்பி, அவருக்கு திரைப்பட நடிப்பு பயிற்சி மையத்தில் சேர உறுதுணையாகவும் இருந்தனர்.
பின்பு, அவரது குருநாதர் கே. பாலச்சந்தர் சார் தான் அவரை பார்த்தார். பாலச்சந்தர் சாரிடம் ஒரு சக்தி இருக்கு. அவருக்கு எல்லையற்ற கடவுளின் ஆசி இருக்கு. அதனால் தான், அவர் அறிமுகபடுத்ர எல்லாருமே மிக பெரிய வெற்றியை சாதித்து விடுகிறார்கள்.
கேள்வி 2: “அவர் நடிக்க ஆரம்பித்து ஒரு சில காலமாக வில்லன் வேடத்திலேயே நடித்தார். அந்த காலங்களில் வில்லன் வேடத்தில் நடிப்பது அவருக்கு எப்படி இருந்தது?”
மேடம்: “வேறு ஒரு மாநிலத்தில் இருந்து, வேறு ஒரு மொழியில் இருந்து, ஒரு புது விதமான இடம், மொழி, மக்களுடன் பழக வேண்டும். எந்த ஒரு வழிகாட்டியும் இல்லாமல், வாழ்க்கைக்கு தேவையான பணம் இல்லாமல் வந்து நடிப்பது எனது ஒரு சுலபமானதாக இல்லை. ஏன் எனில், அவர் அவரின் அன்றாட தேவைகளையும், தங்க வேண்டிய இடம், உணவு, அவரின் உடல் நலம் இவை எல்லாவற்றையும் பார்த்து கொண்டு அவரின் இலட்சியத்தை அடைய வேண்டும்.
அது மிக கடினமான ஒன்று – அவர் படுத்து உறங்கிய இடங்களை காட்டினார் – திரை அரங்குகளுக்கு வெளியே உள்ள கட்டாந்தரையில் கூட தூங்கி உள்ளார். இப்போது உள்ள தென்னிந்திய நடிகர்கள் பல பேரின் மாபெரும் வெற்றிகளுக்கு பின், அவர்களின் எதிர் கொண்ட சவால்களும், துயரங்களும் அடங்கிய வாழ்கையின் சரித்திரம் இருக்கும்”.
கேள்வி 3: “அவர் கஷ்டபட்ட காலங்களில் நடந்த சில விஷயங்கள் ஏதாவது நினைவிருக்கிறதா?”
மேடம்: “அவர் நடிக்கும் போது அவரின் தேவையாக அவர் கூறியது – அவருக்கு ஒரு ஸ்கூட்டர் தேவை என்றார். அந்த அந்த மாதத்திற்கான செலவிற்கும், அடிப்படை வசதிகளை கவனித்து கொள்ளவும், அவர் ஸ்கூட்டர் வாங்குவதிலும் உறுதியாக இருந்தார். ஆனால், அதன் பின்பு அவருக்கு ஒரு மிக பெரிய வாழ்க்கை அமையும் என்று அப்போது அவருக்கு தெரியவில்லை.
அவர் வில்லனாக அறிமுகம் ஆகி, பின்பு ஹீரோவாகி பல பல நல்ல கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடித்தார். ஆரம்ப காலத்தில் எல்லோரும் அவர் அவர் தங்களின் நடிப்பு திறமையை வெளிபடுதினார்கள். பல வருடங்களுக்கு பின்பு தான் அவர் நட்சத்திர அந்தஸ்தும், உச்ச நட்சத்திர அந்தஸ்தும் பெற்றார்.
அவர் ஆரம்ப காலத்தில், தன்னை ஒரு நடிகனாக வெளிபடுத்தினார். அவரின் மிக சிறந்த நடிப்பாற்றலை வெளிபடுதியவை அவரின் ஆரம்ப கால படங்களே. ‘முள்ளும் மலரும்’, ‘புவனா ஒரு கேள்விகுறி’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘மூன்று முடிச்சு’ மற்றும் பாலசந்தர் சாரின் எல்லா படங்களுமே மிக சிறந்த படங்கள். பின்பு தான் அவர் பைரவியில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி, அவரின் வாழ்க்கை தரம் உயர்ந்தது”.
கேள்வி 4: ” அந்த கால கட்டங்களில், எம்.ஜி.ஆர், சிவாஜி, கமலஹாசன் – இவர்களின் அதிகம் தான் இருந்தது. அவர்களை, அந்த தடைகளை எல்லாம் மீறி, ஒரு மிக பெரிய ஹீரோவாக வருவது எப்படி இருந்தது?
மேடம்: “அவர் எல்லா நடிகர்களை போல் இல்லை. அவரின் தோற்றம், நடிப்பு, ஸ்டைல், எல்லாவற்றிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். நடிப்பிற்கு ஒரு புதிய முகவரியை கொடுத்தார். அதில் தான் அவரின் தனித்துவம் இருந்தது – ஆனால், அது கோட்பாடுகளை உடைத்து முன்னேறுவது ஒரு கடினமான ஒன்று.
முழுவதுமாக, மொழி தெரியாமல், இதற்க்கு முன்பு இப்படி இல்லாமல், ஹீரோவுக்கே உரிய அந்த நிறம் இல்லாமல், ஒரு சாதாரண மனிதனை போல் இருந்தார். எல்லா வகையிலும் அந்த கோட்பாடு உடைத்தெறிய பட்டது”.
கேள்வி 5. “ரஜினி ஹீரோவாக உருவான பிறகு மற்ற நடிகர்களுடன் பிரச்சனைகள் வந்ததாக நீங்கள் நினைகிறீர்களா?”.
மேடம்: “இல்லை. தென்னிந்தியாவில் இது மிக பெரிய விஷயம்- அதுவும் தமிழ் திரை உலகும் தமிழ் மக்களும். அவர்கள் தங்களின் உள்ளம்போடு ஏற்று கொண்டனர். அவர்கள் மற்றவற்றோடு ஒப்பிடாமல் அவரை ஏற்று கொண்டனர். பின்பு, அவருடன் வேலை பார்த்த அனைவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர்.
அவர் கமல் சாரின் விழாவில் கூட அவர்கள் அனைவரும் நண்பர்களாக பழகியது; ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தது; ஒன்றாக சேர்ந்து நடித்தது; பின்பு ஒருவர் வளர்ச்சியை பற்றி ஒருவர் பாராட்டியது பற்றி சொல்லி இருப்பார்..
இன்னும் சொல்ல போனால் அவரும், கமல் சாரும் தங்களின் தொழிலில் எந்த ஒரு பிரட்சனையும், பொறாமையையும் வளர விட கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.
கேள்வி 6: “கமல் மற்றும் ரஜினியின் தொழில் மற்றும் நட்புறவை பற்றி என்ன நினைகிறீர்கள்?”
மேடம்: “அவர்கள் இருவரும் ஒரே இடத்தில இருந்து தங்களின் திரையுலக பயணத்தை ஆரம்பித்தனர். பின்பு, இருவரும் அவரவர் பாதையில் நன்றாக வளர்ந்து, முதல் இடத்தில இருக்கின்றனர். அதே சமயத்தில் இருவரும், தங்கள் கொள்கைகளை உணர்ந்து, வளர்ந்தனர். இருவரும் நட்பினை நேசித்து, மதித்து ஒருவருக்கொருவர் மனதார வாழ்த்தினர். (மற்றவர் வளரும் போது).
ஆரம்பத்தில், இருவற்குள்ளும் அவரவர் வழியில் ஒரு நல்ல போட்டி இருந்தது – நடிப்பிலும், படம் பண்ணுவதிலும். ஆனால், இருவருக்கும் அவர்களது நட்பே எல்லாவற்றை விடவும் பெரிதாக இருந்தது.
கேள்வி 7: “ ரஜினி நடிகர் ஆன பின்பு, அவரின் மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்து பார்க்கும் போது, அவரின் வளர்ச்சியை எப்படி பார்கிறீங்க?”
மேடம்: “ எல்லா மாபெரும் விஷயத்திற்கும், அந்த கடவுள் அருளும், மக்களின் எல்லையற்ற அன்பும் தான் காரணம் என்று நினைகின்றேன். நான் தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும், பின்பு உலகின் பல இடங்களில் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் நன்றி சொல்ல கடமை பற்று இருக்கின்றேன். இன்று அவருக்கு ரசிகர்கள் தமிழ் மக்கள் மட்டும் இல்லை, ஜப்பானிலும், நாடு முழுவதும் இருக்கிறார்கள். அதற்க்கு கடவுளின் எல்லையற்ற அருளும், பேரன்பு கொண்ட மக்களும் தான் காரணம் என்று நினைக்கிறன்.
அவர் இந்தியாவில் உருவானவர்களில் ஒரு மிக பெரிய மாறுபட்ட, எல்லா வற்றையும் செய்ய கூடிய ஒருவராக இருக்கிறார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, எந்த உடையாக இருந்தாலும் சரி, நன்றாக செய்கிறார். வயதானவர் வேடமாக இருந்தாலும் சரி, இளைஞன் ஆகவும் சரி, நன்றாக பண்ணுவார்.
வில்லன் வேடத்தில் இருந்து, காமெடியனா இருந்து, நல்ல கதாபாத்திரங்களில் நடித்து, இப்போது ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்று இருக்கிறார். ஆனால், அவருக்குள் ஒரு அசாத்திய திறமை அவர் நடிகர் ஆவதற்கு முன்பே இருந்திருக்கின்றது. அது, இன்னும் வெளிப்படவேண்டும் நினைக்கிறன்.
கேள்வி 8: “அவரின் ஆரம்ப காலத்தில் அவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் வந்ததாக சொல்கிற நீங்கள், அவர் இப்போது எந்த அளவிற்கு வளர்ந்திக்கிறார் என்று நினைகிறீர்கள்?”
மேடம்: “இல்லை, அவர் நல்லதொரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், அவரின் நடிப்பாற்றலை வெளிபடுத்தினார். ஏன் எனில், பாலச்சந்தர் சார் அப்படி தான் உருக்கொனர்ந்தார். அவர் மிக கடினமான கதாபாத்திரங்களை ஆரம்பத்தில் கொடுத்தார். அதனால், அவர் அறிமுகங்கள் எல்லோரும் அப்போது நல்ல நடிகர்களாகவே உருவாகினர்.- பாலச்சந்தர் சார் எதிர்பார்த்தபடியே. பாலச்சந்தர் சார் அவர்களின் நல்ல நடிப்பினை கொண்டு வந்தார். அதனால், அவர்கள் நல்ல நடிப்பினை வெளிக்கொண்டு வரும் கலையை கற்றுகொண்டுவிட்டனர். இப்போது கூட எந்த கதாபாத்திரங்களில், அவர் நடித்தாலும், நன்றாக நடிப்பார் என்று அவர் மீது எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கின்றது.
கேள்வி 9: “அவரை சிறந்த நடிகர் என்று நினைகிறீர்களா? அல்லது அவரது நட்சத்திர அந்தஸ்தை பற்றி முதலில் நினைகிறீர்களா?
மேடம்: “அவர் ஒரு சிறந்த நடிகர், இயல்பாகவே. அவரே ஒரு கதையாளர், அவர் திரைக்கதையை நன்றாக செய்வார். அவருக்குள் ஒரு நல்ல இயக்குனர் இருக்கிறார். அவர் சிறந்த நடிகர் மற்றும் வியக்கதக்கும் வகையில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருப்பவர்ன்னு நினைக்கிறன் – அப்படின்னு சொல்லலாமா? அவர் சிறந்த நடிகரும் வியக்கத்தக்க ஸ்டாரும் ஆவார்.
கேள்வி 10: “உங்களுக்கு பிடித்த அவரின் படம் என்ன? அவரின் வளர்ச்சியில் எந்த படம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லுங்கள்?”
மேடம்: “எல்லா காலகட்டங்களிலும், ஒரு படம் இருக்கு. பைரவி – அவர் ஹீரோவான படம் – இங்கே ஒரு மிக பெரிய வெற்றி பற்ற படம் – மக்கள் எல்லோரும் வில்லின் கதாபாத்திரத்தில் இருந்து அவரை ஹீரோவாக ரசித்தனர். அதற்கப்புறம், பாலமகேந்திரா சாரின் “முள்ளும் மலரும்” மிக சிறந்த கதை, கதாப்பாத்திரம். பாலச்சந்தர் சாரின் அனைத்து படங்களும் சரித்திரத்தில் இடம் பெற்ற படங்களாக இருக்கும். பின்பு, ‘நெற்றிக்கண்’, ‘புவனா என் கேள்விகுறி’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’.
ஆரம்பத்தில் அனைத்து படங்களும் நடிப்பை பறைசாற்றிய படங்களாக இருந்தது. பின்பு வந்த அண்ணாமலை அவரின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தியது. அதற்க்கு பின்பு வந்த முத்து, பாட்சா..அனைத்தும் அப்படியே இருந்தது. இப்போது சிவாஜியும் சரித்திரத்தில் இடம் பெற்ற ஒரு படமாகும்..எந்திரனும் ஒரு மிக பெரிய சரித்திர படமாக வாய்ப்புகள் அதிமாக இருக்கிறது. எனவே, எல்லா காலத்திலும் ஏதாவது ஒரு படம் இருக்கும்.
நாங்கள் அனைவரும் முதல் நாள், முதல் ஷோ தான். நான் முப்பது வருடங்களாக இப்படி தான் திரையருங்குக்கு சென்று கொண்டிருக்கின்றேன்.ரசிகர்களுடன் பார்த்து ரசிப்பேன். அவர்களின் எல்லையற்ற அன்பும், உத்வேகமும் கண்டு ரசிப்பேன். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒருவர் அதை காண வேண்டும்”.
கேள்வி 11 & 12: “ரஜினி அனேக வெற்றிகளை ருசித்துள்ளார். வாரி குவித்துள்ளார். ஆனால் பாபா போன்ற தோல்வி படங்களும் உண்டு. அந்த வெற்றிகளையும், தோல்விகளையும் எப்படி எடுத்து கொள்கிறார்?”
மேடம்: “நான் பாபா தோல்வியடைந்ததாக எடுத்து கொள்ளவில்லை. பாபாவிற்கு ஒரு சில பிரச்சனைகள் வந்தது. அது எதுவும் எதிர்பாராதது. மற்ற படங்களை போல அதுவும் நல்ல லாபத்தை பெற்று தந்தது. ஒரு வேளை,எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காமல் இருக்கலாம். அது அப்போது வந்த பிரச்சனையால் கூட இருக்கலாம். எல்லோருக்கும் தெரியும் அப்போது என்ன நடந்தது என்று. அந்த படம் பல பிரச்சனைகளை சூழ்நிலை காரணமாக சந்தித்தது. ஆனால், அதை கண்டு அவர் வருத்த படவில்லை. எல்லாவற்றையும் ஒரு பாடமாக எடுத்து கொண்டார். அந்த தோல்வியை ஒரு மிக பெரிய திருப்புமுனையாக எடுத்து கொண்டார்”.
கேள்வி 13: “அப்போ குசேலன் போன்ற படங்களை எப்படி எடுத்து கொண்டீர்கள்?”
மேடம்: ஒரு நடிகராக அவர் கடமையை அவர் செய்ய வேண்டும். அதுவும் சிறப்பாக செய்து தர வேண்டும். அவர் நல்ல ஒரு businessman அவரது படங்களை, தனிமனிதனாக வைத்து பார்க்கும் போது. அவர் எல்லா விஷயங்களையும் நன்கு ஆராய்வார். எப்பவும் தயாரிப்பாளர்கள் வருத்தப்பட கூடாது என்றும் தன்னுடைய படங்களால் அவர்கள் லாபம் அடைய வேண்டும் என்பதையே குறிக்கோளாக செயல்படுவார். ஒரு நடிகனாக அவர் தன்னுடைய திறமை எல்லாவற்றையும் வெளிப்படுத்தி, எல்லோரும் லாபம் அடைய வேண்டும், அதனால் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்பார். அப்படிதான் எல்லாவற்றையும் ஆரம்பிப்பார். அந்த ஒரு வேகமும், ஆற்றலும்,அங்குதான் ஆரம்பிக்கிறது.
அவர் என்னதான் நன்றாக நடித்தாலும், சில சமயங்கள், ஒரு நடிகனையும் தாண்டி, எல்லாம் நடந்து விடும். நீங்கள் கூறும் படங்கள் எல்லாம் அந்த இடத்தில் தான் வரும்.
கேள்வி 14: “தன் சொந்த வாழ்கையில் வரும் இன்ப, துன்பங்களை எப்படி எடுத்து கொள்கிறார்?”
(to be continued in next part….)