படையப்பா (1999) Vs எந்திரன் (2010) – ரிலீஸ் சென்டர்கள் – ஒரு ஒப்பீடு!

ரு காலத்தில் நம் படங்கள் சென்னை நகரில் நான்கு ஸ்க்ரீன்களில் மட்டுமே ரிலீஸ் ஆகும். படிப்படியாக ரிலீஸ் சென்டர்கள் 5, 8, 12, 16 என அதிகரித்துக்கொண்டே வந்தது. 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜியில் அது உச்சத்தை அடைந்தது. தற்போது எந்திரனில் அது எங்கோ சென்றுவிட்டது. (சென்னை சிட்டி மற்றும் செங்கல்பட்டு மட்டும் எந்திரன் 70 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது).

கூடிக்கொண்டே வந்த ரிலீஸ் சென்டர்கள்

விரிவடைந்துகொண்டே வந்த சூப்பர் ஸ்டாரின் மார்கெட், அதிகரித்துக்கொண்டே வந்த பட்ஜெட்டு இவற்றுக்கேற்ப வருடங்கள் செல்ல செல்ல, ரிலீஸ் சென்டர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. எப்போதும் இல்லாத அளவிற்கு பைரசி அச்சுறுத்தல் வேறு. (நம்மை அடியொற்றியே பிற நடிகர்களின் படங்களும் அதிக சென்டர்களில் ரிலீஸ் ஆக துவங்கியது.)

சூப்பர் ஸ்டாரின் ஆல்-டைம் ப்ளாக்பஸ்டர்களில் ஒன்றான படையப்பா, சென்னையிலேயே ஐந்து ஸ்க்ரீன்களில் தான் ரிலீசானது என்றால், கோவை, மதுரை போன்ற ஊர்களில் எத்துனை தியேட்டர்களில் ரிலீசாகியிருக்கும்? நினைத்து பாருங்கள்.

ஆனா எந்திரன் எத்துனை தெரியுமா? மதுரையில் 14 (சிவாஜி 5), கோவையில் 16 (சிவாஜி 7). இப்போ கொஞ்சம் கணக்கு போட்டு பாருங்க… படையப்பா, சந்திரமுகி, சிவாஜி போன்ற படங்களை விட எந்திரன் எவ்ளோ பெரிய ஹிட் என்று புரியும்.

உதாரணத்திற்கு, இணைக்கப்பட்டுள்ள ‘படையப்பா’ விளம்பரத்தில் உள்ள ரிலீஸ் சென்டர்களை பாருங்கள்.

சென்னை சிட்டி மற்றும் செங்கல்பட்டு மொத்தமே 17 தான் ரிலீஸ் சென்டர். அன்றைய காலகட்டத்தில் அது தான் அதிகபட்சம். இதோ, தற்போது எந்திரனின் ரிலீஸ் சென்டர்களையும் பாருங்கள். சுமார் 91. கவுண்டிங் கூட செய்ய முடியாத அளவிற்கு தியேட்டர்கள் அதிகரித்துள்ளன. (இவற்றில் 60 – 70 ஷோக்கள் கண்ட மாயாஜால், அம்பத்தூர் ராக்கி காம்ப்ளெக்ஸ், வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ். காம்ப்ளெக்ஸ், விருகை தேவி கருமாரியம்மன் காம்ப்ளெக்ஸ் ஆகிய தியேட்டர்களை முழுமையாக கணக்கில் கொண்டால் 100 தியேட்டர்களுக்கு மேல் சென்றுவிடும்.) நான் பக்கம் பக்கமாக எழுதி புரிய வைக்க வேண்டியதை இந்த விளம்பரங்கள் புரிய வைத்துவிடும்.

For high res image of the above Padayappa vs Enthiran ad, pls check:
http://i234.photobucket.com/albums/ee96/simple_sundar/Nostalgia/PadayappavsEnthiran.jpg
IMG 5153 640x480  படையப்பா (1999) Vs எந்திரன் (2010) –  ரிலீஸ் சென்டர்கள் – ஒரு ஒப்பீடு!
எந்திரனின் வெளியீட்டு உரிமையை வாங்கிய பல விநியோகஸ்தர்கள், தாங்கள் ரிலீஸ் செய்யும் ரெகுலர் தியேட்டர்கள் மட்டும் அல்லாது, வேறு சில திரையரங்குகளையும் வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் போட்டு கூடுதல் தியேட்டர்களில் ரிலீஸ் செய்தனர். (உதாரணத்திற்கு தூத்துக்குடி, பொள்ளாச்சி etc.) இதன் மூலம் முதல் வாரத்திலேயே அனைவருக்கும் தாங்கள் முதலீடு செய்த தொகை திரும்ப கிடைத்து விட்டது. முதலீடு திரும்பப் பெற்று, சற்று லாபமும் ஈட்டியவுடன் – ஒப்பந்தப்படி – கூடுதலாக வாடகை அடிப்படையில் ரிலீஸ் செய்யப்பட்ட திரையரங்குகளில்ருந்து படத்தை திரும்பபெற்றனர். இது தான் நடந்தது. அப்படி பெறவில்லைஎன்றால், எந்திரனுக்கு பிறகு ரிலீசாகி (உடனே பெட்டிக்கே திரும்பிய) பல படங்களுக்கு ரிலீஸ் செய்ய தியேட்டர்களே கிடைத்திருக்காது. அது மட்டுமா? பச்சான், குச்சான் போன்றவர்களின் “எந்திரனால், trens-setting திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைக்கலே” ரீதியிலான புலம்பல்கள் அதிகம் கேட்டிருக்கக்கூடும். இப்போ தான் வழி விட்டாச்சே…. பார்க்கலாம்.

சரி, மற்ற எல்லா திரைப்படங்களுக்கும் இப்படி WIDE ரிலீஸ் செய்ய முடியுமா?

மிகவும் கஷ்டம். காரணம், விநியோகஸ்தர்கள் தங்கள் வருவாய் SPLIT ஆகிவிடும் என்பதால் ஒப்புகொள்ள மாட்டார்கள். (தயாரிப்பாளரே சொந்தமா ரிலீஸ் செய்தால் உண்டு!). சூப்பர் ஸ்டாரின் படங்களின் கதையே வேறு. எந்திரனை தமிழகம் முழுதும் விநியோகித்த ஜெமினி பிக்சர்ஸ் தாங்கள் நிர்ணயித்த விலையில் படத்தை விற்றுள்ளனர். படத்தை அதிகபட்ச விலைக்கு – டெப்பாசிட் அடிப்படையில் – வாங்கிய விநியோகஸ்தர்களும், சூப்பர் ஸ்டாரின் மீதுள்ள நம்பிக்கையால் தான் இந்த WIDE ரிலீசுக்கு இடையிலும் படத்தை தயங்காது வாங்கினர். எந்திரன் படம் சிறிய சரிய ஊர்களில் டபுள்ஸ், ட்ரிபிள்ஸ் என ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. ஆகையால், 50 நாள் மொத்த சென்டர்கள் குறைந்திருப்பது யதார்த்தமே. அப்படி பார்க்கிலும், சிவாஜிக்கு பிறகு – 55 வது ரன்னிங் நாளில் 75 திரையரங்குகளில் – ஓடும் ஒரே படம் எந்திரன் தான்! எந்திரன் தான்!! எந்திரன் தான்!!!

IMG 5152 640x480  படையப்பா (1999) Vs எந்திரன் (2010) –  ரிலீஸ் சென்டர்கள் – ஒரு ஒப்பீடு!

சிவாஜி வெளியான பிறகு, அதற்கடுத்து இந்த மூன்று ஆண்டுகளில் எத்துனையோ படங்கள் வெளியாகின. ஆனால் எந்த படமும் சிவாஜின் சாதனையை விஞ்சமுடியவில்லை. தற்போது எந்திரனின் சாதனையையும் நெருங்கமுடியவில்லை. (75 SCREENS IN 55TH DAY).

சிவாஜி Vs எந்திரன்

சிவாஜி உலகமெங்கும் 800 திரையரங்குகளுக்கு மேல் ரிலீசானது. தமிழகத்தில் மட்டும் சிவாஜி ரிலீஸ் ஆன தியேட்டர்கள் எத்துனை தெரியுமா? 254.

எந்திரன் (Tamil, Telugu, Hindi) உலகமெங்கும் ரிலீஸ் ஆன தியேட்டர்கள் எண்ணிக்கை 3000 க்கும் மேல். தமிழகத்தில் மட்டும் 430. (அடேங்கப்பா! தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளே மொத்தம் 234 தான்.) So, எந்திரன் தமிழகத்தில் சராசரியாக தொகுதிக்கு இரண்டு தியேட்டர் வீதம் ரிலீசாகியுள்ளது. இது வரை முதல் ரிலீசே கண்டிராத பல சிறிய சிறிய ஊர்களில் எந்திரன் ரிலீசானது. இது மிக மிக பெரிய விஷயம். இத்துனை தியேட்டர்களில் ரிலீசாகிவிட்டு, எட்டு வெள்ளிக்கிழமைகளை தாண்டி தற்போது தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. (மத்த படங்கள் எத்தனை வெள்ளி தாண்டுதுன்னு பார்க்கத்தானே போறோம்!).

இப்போ தெரிஞ்சிருக்குமே… தன்னுடன் ஒப்பிடப்படக்கூட ஆளின்றி சூப்பர் ஸ்டார் தனி ராஜாங்கம் நடத்திக்கொண்டிருப்பது…!

[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...