
'எந்திரன் படம் விரைவில் வரும் என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்களே தவிர, என்ன தேதி என்று மட்டும் சொல்ல மாட்டேங்குறாங்களே', என ரஜினி ரசிகர்கள்
இப்போது அவர்களின் சலிப்பை களிப்பாக்கும் விதத்தில் அக்டோபர் 1-ம் தேதி எந்திரனை உலகம்
ஆரம்பத்தில் செப்டம்பர் 24-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்தி
ஆனால் தமிழ் ட்ரைலரில் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல், "விரைவில் வருகிறது" என்று மட்டும் குறிப்பிட்டிருந்தனர்.
இப்போது கிராபிக்ஸ் பணிகளின் இறுதிக் கட்டத்தில் உள்ளது எந்திரன் டீம். செப்டம்பர் 24-ம் தேதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்துவிடும் என்றும், அக்டோபர் முதல் தேதி உலகம் முழுக்க எந்திரன் வெளியாகும் என்றும் சன் பிக்சர்ஸ் தரப்பில் விநியோகஸ்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி ரோபோவை மிகப் பிரமாண்டமாக வெளியிடுகிறார்கள். 1000-க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் இந்தியில் வெளியாகின்றன. இந்தி ரோபோவுக்கு போட்டியாக வேறு எந்த இந்திப் படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment