
இந்தியாவே பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரே நேரத்தில் நடந்தது.
ரூ 190 கோடி செலவில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தியாவின் மிகப் பிரமாண்டமான படம் 'எந்திரன்'. ரஜினிகாந்த்
ரஜினியின் ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்துள்ளனர்.
ஹாலிவுட்டுக்கு ஒரு இந்தியக் கலைஞர் சவால் என்று வர்ணிக்கும் வகையில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ஷங்கர். சமீபத்தில் வெளியான எந்திரனின் இந்திப் பதிப்பான ரோபோவின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்த அனைவரும் பெரும் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்தப் படம் இந்தியக் கலைஞர்கள் உருவாக்கியதுதானா என்ற வியப்பு இன்னும் அகலவில்லை.
ஏ.ஆர்.ரகுமான் இசையில், எந்திரன் பாடல்கள் மலேசியாவில் மிகப் பிரமாண்ட முறையில் வெளியிடப்பட்டது. மலேசியாவில் நிகழ்ந்த முதல் தமிழ்ப் பட இசை வெளியீட்டு விழா என்ற சிறப்பு எந்திரனுக்கே கிடைத்தது. இந்த நிகழ்ச்சியை ரஜினி, ஐஸ்வர்யா ராய், சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பங்கேற்று சிறப்பித்தனர்.
எந்திரன் இந்திப் பதிப்பான ரோபோவின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஹைதராபாத்தில் தெலுங்குப் பதிப்பான 'ரோபோ' படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, மோகன்பாபு கலந்து கொண்டனர்.
இந்த மூன்று மொழிகளிலுமே எந்திரன் பாடல்கள் விற்பனையில் புதிய சரித்திரம் படைத்துள்ளன. ஆடியோ விற்பனையில் இனி இப்படியொரு சாதனை நிகழுமா என்று கேட்க வைக்கும் விதத்தில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது எந்திரன்.
இந்த நிலையில் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.
காலை 10 மணிக்கு சென்னையில் சத்யம் தியேட்டரில் நடந்த இந்த விழாவில் படத்தின் நாயகன் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன், இயக்குனர்
சென்னை கே.கே.நகர் காசி, அம்பத்தூர் ராக்கி, மதுரை குரு, தமிழ் ஜெயா, கோவை சாந்தி, சாரதா, திருநெல்வேலி
No comments:
Post a Comment