எந்திரன் இன்று சென்சாருக்கு செல்கிறது ?


ந்திரன் படத்தின் முழு பணிகளும் முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இதையடுத்து சென்சார் போர்டுக்கு அனுப்பி சான்றிதழ் வாங்கும் பணிகள் துவங்கியிருக்கின்றன.

பொதுவாக ஒரு படத்தை சுழற்சி முறையில் நான்கு முதல் ஐந்து உறுப்பினர்கள் வரை படத்தை பார்ப்பார்கள். பிறகு சர்டிபிகேட் தருவார்கள்.

இருப்பதிலேயே கடினமான பணி சென்சாரில் இருப்பவர்களுக்கு தான். மகா மொக்கை படங்களை கூட ஒரு இன்ச் விடாமல் பார்த்து சர்டிபிகேட் தரவேண்டுமே… ஆனால் எந்திரனை பொறுத்தவரை அதிகாரிகளிடையே படத்தை பார்ப்பதற்கு கடும்போட்டி நிலவுகிறது. யார் யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை. (இது பற்றிய விபரத்தை சேகரித்து கொண்டிருக்கிறேன். விரைவில் சொல்கிறேன்!)

எந்திரன் நேற்றே சென்சார் செல்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று சென்சாருக்கு செல்லும் என்று தெரிகிறது. (தவறினால் நிச்சயம் நாளை செல்லும்).

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் வண்ணம் படத்தை எடுத்திருப்பதால் நிச்சயம் எந்த விதம் சிக்கலுமின்றி படத்திற்கு ‘U’ சர்டிபிகேட் கிடைககும் என்று தெரிகிறது.

எந்திரன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2750 பிரிண்ட்டுகள் போடப்படவிருக்கின்றன.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...