எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனுபவங்களை மனோஜ் கே. பாரதி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
மனோஜ். இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகன். நடிகை நந்தனாவை காதலித்து கரம்பிடித்தார் மனோஜ். மனோஜ்ஜுக்கு தான் விரும்பியபடி மண வாழ்க்கை அமைந்தாலும் திரை வாழ்க்கை அப்படி அமையவில்லை. மிகப் பெரிய இயக்குனரின் வாரிசாக இருந்தும் நடிகராக பெரியளவு சோபிக்க முடியாது போன இவர், அத்தோடு மனம் தளர்ந்துவிடவில்லை. தன் தந்தையின் நிழலிலேயே காலத்தை கழிக்க நினைக்காது, தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்த முனைந்தார். அதன் விளைவு தான் INDIAN CINEMA’S MOST PRESTIGIOUS PROJECT ஆன எந்திரனின் அசிஸ்டென்ட் டைரக்டராக பணிபுரிய கிடைத்த வாய்ப்பு.
தனது எந்திர அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மனோஜ்.
அசிஸ்டென்ட் டைரகடராக பணிபுரிவது மனோஜுக்கு ஒன்றும் புதிதல்ல. இருப்பினும் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் மற்றும் நம்பர் ஒன் இயக்குனர் மற்றும் நம்பர் ஒன் இசையமைப்பாளர் ஆகியோருடன் பணிபுரிவது ஒரு மகத்தான அனுபவம் என்று கருதுகிறார்.
“எந்திரனுக்கு ஷங்கர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலிருந்து ஆட்களை தேர்வு செய்கிறார் என்று கேள்விப்பட்டவுடன், அவரை அணுகி என் விருப்பத்தை சொன்னேன். என் அப்பாவுக்கு என் விருப்பம் பரிபூரண சம்மதம். இது நடந்து 2008-9 ஆம் ஆண்டு. ஷங்கர் சாரிடம் பணிபுரியும்போது, படத்தின் ஸ்க்ரிப்ட் பற்றி நமக்கு முழுமையாக தெரிந்திருக்கவேண்டும் என்று விரும்புகிறார்.
எந்திரனில் உங்கள் பணி என்ன? என்னவெல்லாம் செய்தீர்கள்?
“படத்தில் ரஜினியின் வீட்டுக்கான லொக்கேஷனை தேர்வு செய்யவேண்டிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார் ஷங்கர். அவர் எதிர்பார்த்ததைப் போல ஒரு வீட்டை தேர்வு செய்வது அத்துணை சுலபமாக இல்லை. அவருக்கு என்ன வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர் அதிலிருந்து இறங்கிவரவே மாட்டார். அவருக்கு வேண்டியதெல்லாம் “இதுவரை பார்த்திராத ஒரு லோக்கேஷனிலிருந்து ஒரு அற்புதமான வீடு.” சென்னை மற்றும் புதுச்சேரி முழுதும் நான் சல்லடையாக தேடியதில் கடைசீயில் ஈ.சி.ஆர். ரோட்டில் ஒரு வீட்டை பிடித்தேன்.”
இப்படி படத்துக்காக வீடு தேடி தேடி இப்போ நான் ஒரு ரியல் எஸ்டேட் எக்ஸ்பர்ட் ஆக மாறிவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கலேன். ரியல் எஸ்டேட் மற்றும் அசையா சொத்து பற்றிய அத்துணை விபரங்களும் இப்போ என் விரல் நுனியில். (சிரிக்கிறார்.)
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி?
உள்ளத்தை பொறுத்தவரை அவர் ஒரு பச்சை குழந்தை. எளிமையான ஒரு ஆன்மா. இப்போது கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது… என்னை ஐஸ்வர்யா ராயிடம் அறிமுகப்படுத்தி வைத்த பொது, “மீட் மிஸ்டர் மனோஜ். புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே வாரிசு. என் கைகளில் சிறு குழந்தையாக தவழ்ந்தவர் இப்போ எப்படி வளர்ந்திருக்கிறார் பாருங்கள்” என்று எனக்கு அறிமுகம் கொடுத்தார் ரஜினி சார். அவரை எப்போதும் “என் தலைவர்” என்றே கூறி மகிழ்வேன்.
ஐஸ்வர்யா ராய் பற்றியும் உருகுகிறார் மனோஜ். “தமிழில அவரது டயலாக் டெலிவரி அபாரம். அட்சர சுத்தமாக துல்லியமாக இருக்கும் அது. அவருக்கு யாரும் எதுவும் சொல்லி தரத் தேவையில்லை. அவராகவே அனைத்தையும் கற்றுக்கொண்டு விடுவார். சுருங்க சொன்னால் அவர் பக்கா ப்ரொபஷனல். அவர் நடிக்க வேண்டிய காட்சிகளில் முழுமையாக கவனம் செலுத்துவார். படப்பிடிப்பு இடைவெளிகளில் அவர் புஸ்தகங்கள் படிப்பதையும் ம்யூசிக் கேட்பதையும் பார்த்திருக்கிறேன்.”
வில்லன் டேனி டொங்சப்பா ?
“அவருடன் இரு நாட்கள் பணிபுரிந்திருக்கிரேன். டேனி ரோலுக்கு முதலில் ‘காந்தி’
படத்தில் கலக்கிய பென் கிங்க்ஸ்லியை தான் ஒப்பந்தம் செய்வதாக இருந்தோம். ஆனால், டேனி அற்புதமாக பெர்பார்ம் செய்திருக்கிறார்.
தற்போது இரு புதிய படங்களில் பணிபுரிந்துவருவதால், எந்திரன் இறுதிகட்ட படப்பிடிப்பு வரை இருக்க இயலவில்லை மனோஜுக்கு. ஒரு எதிர்ப்பார்ப்புக்குரிய SURE FIRE BLOCKBUSTER படத்துக்கு தன்னால் இயன்ற பங்கை தந்திருக்கிறார் மனோஜ்.
வழக்கம் போல தலைவர் மற்றுமொருமுறை கலக்குவார் என்று நம்புகிறார் மனோஜ்.
வாழ்த்துக்கள் மனோஜ்.
Source : Indian Express 14 September 2010
Original Article
No comments:
Post a Comment