பெருந்தன்மையே உனது மறுபெயர் தான் ரஜினியா? தலைவரின் இசை வெளியீட்டு விழா உரை!! – VIDEO!!


லேசியாவில் நடைபெற்ற எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டாரின் உரையை கேட்டு அந்த வியப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை நான்.


எப்படியா… இந்த மனுஷனால மட்டும் இப்படியெல்லாம் பேச முடியுது… அவரது பேச்சில் அலங்காரமில்லை, அடுக்குமொழியில்லை… வார்த்தை ஜாலங்கள் இல்லை.. இருந்தும் எப்படி அவரது பேச்சு இப்படி நம்மை வசீகரிக்கிறது? யோசித்து பார்த்தபோது புரிந்தது: அவரது பேச்சில் உண்மை இருக்கிறது. அடி மனதில் இருந்து எழும் சத்தியம் இருக்கிறது.




எந்திரன் திரைப்படம் இன்று இந்தளவில் வளர்ந்து நின்று சாதனைகளை புரட்டி போட தயாராக இருக்கிறதென்றால் அதற்க்கு சூப்பர் ஸ்டார் எந்தளவு முக்கிய காரணம் என்பதை இந்த உலகமே அறியும். சன் பிக்சர்ஸ் இந்த படத்தின் கதை கூட கேட்காது தயாரிக்க முன்வந்ததேன்றால் அதற்க்கு காரணம் சூப்பர் ஸ்டார் என்னும் ஒருவர் இந்த படத்தில் இருப்பது தான். அப்படியிருக்கையில், நான் இந்தப் படத்தில் ஒன்றுமே இல்லை. ஒரு குழந்தை தான். என்று தன்னை UNDERPLAY செய்து மற்றவர்களின் பங்கை பிரதானமாக பேச எந்தளவு ஒரு பெருந்தன்மை வேண்டும்?


படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரை பற்றியும் அவர் பேசிய விதம் அபாரம்.


அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, மாடிப்படி ஏறும் கதையை கூறி, மேலே செல்லும் ஒவ்வொருவரும் ஏதாவது காரணத்துக்காக கீழே நிச்சயம் வரத்தான் வேண்டும். வரவில்லைஎன்றால், காணாமல் போய்விடுவார்கள் என்ற மிகப் பெரிய வாழ்க்கை தத்துவத்தை எத்துனை அருமையாக எடுத்துக் கூறியிருக்கிறார் தலைவர்… திரும்ப திரும்ப ஒரு 50 முறையாவது இந்த கதையை கேட்டிருப்பேன். இனியும் கேட்பேன்.


இந்த பேர் புகழ் அனைத்திற்கும் காரணம் இறைவன் தான் என்பதை பேச்சை துவங்கும் முன்னரே அறிவித்துவிட்டு பேசிய பாங்கு… என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.


அடுத்து இந்த விழாவின் நாயகர்கள் என்று தன்னை தவிர்த்துவிட்டு பிறரை பட்டியலிட்டபோது அந்த பிரமிப்பு இன்னும் அதிகமானது. பெருந்தன்மையே உனது மறுபெயர் தான் ரஜினியா? என்று மனம் கேள்வி கேட்டது.


இறுதியாக “எம்.ஜி.ஆர்.க்கு எப்படி வாலியோ அப்படி தான் எனக்கு கவியரசு வைரமுத்து சார்” என்ற உண்மையை போட்டுடைத்தபோது என்னையறியாமல் கைத்தட்டிவிட்டேன். (நீங்களும் தானே?)


மலேசியாவிலிருந்து நண்பர் ஒருவர், கீழ் கண்ட பேப்பர் கட்டிங்கை நமக்கு அனுப்பியிருந்தார். நம் பலர் மனதில் இருந்த கேள்விக்கு பதில் இதி உள்ளது. (பதிலின் இறுதி வரிகள் சூப்பர்.!)


சூப்பர் ஸ்டாருக்கு இந்தளவு இருக்கும் மக்கள் ஆதரவிற்கு காரணம் என்ன?
மலேசிய பத்திரிகையில் கண்ட ருசிகர தகவல்…




Superstar’s Speech – Video Part 1


Video has been removed by Youtube on request from Sun tv. We also like to abide the same.


Superstar’s Speech – Video Part 2


Video has been removed by Youtube on request from Sun tv. We also like to abide the same.


(Papercutting courtesy: Ganesan, Malaysia / Video Courteys: Rajesh, hsejar84)



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...