அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ரஜினி ரசிகர்களின் ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள்!

ந்திரன் ஆடியோ விற்பனை, அங்கிங்கெனாதபடி இந்த புவி எங்கும் சக்கை போடு போட்டுவருகிறது. ஆடியோ விற்பனை சாதனை குறித்து பதிவெழுதிய நமக்கு வற்றாத சுரங்கமாக தகவல்கள் எட்டுதிக்கிலிருந்தும் கிடைத்துவர, சென்னை நகரில் எந்திரனின் ஆடியோ சாதனையை மட்டுமே வைத்து முதல் பகுதியை வெளியிட்டோம். தற்போது இரண்டாம் பகுதியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிவருகிறேன். சென்னைக்கு வெளியே அதாவது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் எந்திரனின் சாதனையை அது பறைசாற்றும்.
Seattle Enthiran audio  Cele 640x480  Audio release Coverage 5: அமெரிக்காவின் சியாட்டில் நகரில்  ரஜினி ரசிகர்களின் ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள்!
இது தவிர, மூன்றாம் பகுதியும் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆம்… அயல்நாடுகளில் எந்திரன் ஆடியோவின் சாதனை குறித்த ஆதாரப்பூர்வமான செய்திகளின் தொகுப்பு அது.

எந்திரன் ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள் பற்றி இதுவரை நாம் நான்கு பகுதிகள் வெளியிட்டுவிட்டோம். கடைசீயாக Coverage 4 இல் நாம் பார்த்தது சூப்பர் ஸ்டாரின் பூர்வீகமான கிருஷ்ணகிரி. அடுத்து மதுரை மாநகர கொண்டாட்டங்கள் Coverage 5 இல் இடம்பெறும் என்று தெரிவித்திருந்தோம். ஆனால், எந்திரன் ஆடியோவின் Exclusive Audio Sales Report – Part 2 வெளியான பிறகு மதுரை கொண்டாட்டங்கள் பற்றிய பதிவு வெளியாகும். மதுரை ரசிகர்கள் சற்று பொறுமை ப்ளீஸ்.

தற்போது அமெரிக்காவின் சியாட்டில் நகரில் எந்திரன் ரிலீஸ் கொண்டாட்டங்கள் பற்றிய செய்தியை பார்ப்போம்.

Seattle B 640x480  Audio  release Coverage 5: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ரஜினி ரசிகர்களின்  ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள்!

முதலில் சியாட்டில் பற்றியும் சியாட்டில் ரசிகர்கள் பற்றியும் ஒரு குறிப்பு…

சியாட்டில் அமெரிக்காவின் வடகோடியில் உள்ள வாஷிங்க்டன் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரமாகும். இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் இங்கு பெருமளவில் வசிக்கின்றனர். இவர்களின் பெரும்பாலானோர் கணிப்பொறி வல்லுனர்களாக அந்த பகுதியில் உள்ள முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

தமிழகத்தில் எப்படி திருச்சி சூப்பர் ஸ்டாரின் கோட்டையோ அதுபோல அமெரிக்காவில் சியாட்டில் நகரம் நமது கோட்டை. சிவாஜி இங்கு படைத்த சாதனை வேறு எந்த படத்தாலும் இன்னும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நமது பட ரிலீசுக்கு யூ.எஸ்.இன் பிற பகுதிகளிலிருந்து ரசிகர்கள் இங்கு வருவார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்களேன், இங்கு திருவிழா எப்படி களைகட்டும் என்று… அந்தளவு சியாட்டில் நமது கோட்டை.

இங்கே இருக்கிற ரசிகர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. நம்ம படம் ரிலீசானா, பார்த்தவங்களே திரும்ப திரும்ப பார்க்கிறதால, மத்தவங்க யாரும் படம் பார்க்க முடியலேங்குறது தான் அது. சிவாஜிக்கு உண்மையிலேயே நடந்துச்சுங்க இப்படி. ஆகையால் சியாட்டில் ரசிகர்களே எந்திரனை மத்தவங்க பார்க்க கொஞ்சம் வழி விடனும். ஓகே?

Seattle 3 640x480  Audio  release Coverage 5: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ரஜினி ரசிகர்களின்  ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள்!

இத்துனை சிறப்புக்கள் பெற்றுள்ள சியாட்டில் நகரில் எந்திரன் ஆடியோ ரிலீஸ் எப்படி இருந்திருக்கும்… கொஞ்சம் நினைத்து பாருங்களேன்.

எந்திரன் சி.டி. விற்பனைக்கு இங்கு வரும்போது, அவர்கள் பாணியில் எந்திரன் இசையை வரவேற்க ரசிகர்கள் திட்டம் தீட்டியிருந்தனர்.

சியாட்டில் நகரில் இந்த கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்து பிராமதப்படுத்தியவர் நம் ரசிகர் சஹாநாதன்.

Seattle 7 640x480  Audio  release Coverage 5: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ரஜினி ரசிகர்களின்  ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள்!

கடும் எதிர்பார்ப்புக்கிடையே ரெட்மான்ட்டில் உள்ள இந்திய ஸ்டோர் ஒன்றில் ஆகஸ்ட் 16, திங்கட்கிழமை எந்திரன் சி.டி. விற்பனைக்கு வந்து இறங்கியது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இங்குள்ள Mayuri Food & Videos store என்ற வணிக நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தனர். கடையெங்கும் எந்திரன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதேபோல, எந்திரன் ட்ரெய்லரின் hi-definition video அங்கிருந்த பெரிய ஸ்க்ரீன்களில் திரும்ப திரும்ப ப்ளே செய்யப்பட்டது. இதன் மூலம் ரசிகர்களில் excitement கூடிக்கொண்டே இருந்தது.

சியாட்டிளில்ருந்து மட்டுமல்லாது, பக்கத்து மாநிலங்களான போர்ட்லாந்து, ஒரீகான், இடாஹோ போன்ற இடங்களிலிருந்தும் ரசிகர்கள் திரண்டு வந்து வாங்கி சென்றனர்.

சி.டி.க்கே இப்படி என்றால் எந்திரன் பட ரிலீஸ் எப்படியிருக்கும்?

[புகைப்படங்கள் மற்றும் செய்திகளை ஒருங்கிணைத்து அனுப்பிய நம் ரசிகர்கள் இளங்கோ மற்றும் ஷாநோக்கியா இருவருக்கும் நம் மனமார்ந்த நன்றி!]

Endhiran audio release celebrations at Seattle, US

Seattle has been tradionally one of the bastions of fort for Super Star Rajnikanth fans in the USA. Case in point – Seattle was one of the few cities that celebrated the 50th and 100th days of Sivaji – The Boss by having special screenings for the local fans. So, needless to say, the excitement leading upto the audio release of Enthiran was unprecedented, to put it mildly. The fact that the CDs arrived means that the fans had ample time to plan for the launch in their own unique way.

Super star Rajni Fans from Seattle and Portland joining and celebrating the Enthiran audio cds release in Seattle.This celebration was presided by Seattle Rajni Fans Lead volunteer Mr.Sahanathan.

Seattle 5 640x480  Audio  release Coverage 5: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ரஜினி ரசிகர்களின்  ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள்!

The much-awaited CDs arrived at the local Indian store here in Redmond on Monday, 16th August, a good 2 weeks after the CDs were released elsewhere in the world. Around 50 of the fans gathered at Mayuri Food & Videos store here in Redmond, to receive the CD and buy the same as the CDs were being unloaded. Posters of the movie were plastered all over the store while at the same time, the consolidated HQ version of the trailers was playing in a non-stop loop on the big-screen TV, as the fans bought the CDs from the store. Fans from the adjoining states of Oregon & Idaho also joined in the festivities. The audio CDs release has served as the perfect platform for the impending explosion – the actual release of the what is undoubtedly the biggest ever movie in the history of Tamil cinema.

Our sincere thanks to Elango, Shanokia – our fans in US.

…………………………………………………………………………….
(அடுத்து : மும்பை தலைமை மன்றத்திலிருந்து, மும்பை ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள் பற்றிய செய்திகள் + புகைப்படங்கள்!)

E-mail: simplesundar@gmail.com
Mobile: +91-9840169215
…………………………………………………………………………….

Full Gallery of Seattle Audio Celebrations

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...