Endhiran Scoop 4 : எந்திரன் ட்ரைலர் – சில ருசிகர தகவல்கள்!


ஷங்கர் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருக்கிறார். எந்திரன் ப்ரோமோ மற்றும் விளம்பரங்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று. அதற்காக அவரே களமிறங்கி இருக்கிறார். அதில் அவர் எடுத்திருக்கும் அடேங்கப்பா முயற்சிகள் ஒவ்வொன்றாக மெதுவாக பகிர்ந்துகொள்கிறேன். இப்போதைக்கு ட்ரைலர் பற்றி சில தகவல்கள்.
ஒரு படத்திற்கு ரிலீசுக்கு முன்பு மக்களுக்கு வெள்ளோட்டம் விடும் ‘ட்ரைலர்’ மிக முக்கியமான ஒன்று. சிவாஜி படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதற்கு அதன் ட்ரைலர் பெருமளவில் உதவியது என்றால் மிகையாகாது. திரையரங்குகளில், மற்ற படங்களின் ஊடே காட்டப்பட்ட சிவாஜி ட்ரைலர் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தோற்றுவிக்க காரணமாக அமைந்தது. அந்த உற்சாகம் கடைசி வரை நீடித்தது.

உதாரணத்திற்கு “ஏம்மா என்னை கருப்பா… பெத்தே?” “வெள்ளையா இருந்தா அழுக்காயிடுவே பா… அதனால தான்” என்ற டயலாக்குக்கு தியேட்டரில் ட்ரைலர் ஓடும்போது கிடைத்த விசில் சத்தம் படத்தின் நூறாவது நாள் காட்சி வரை தொடர்ந்து கிடைத்தது. (யாராவது அதை கவனிச்சிருக்கீங்களா?) அதாவது ட்ரைலர் காட்சிகள் படத்தில் வரும்போது, ரசிகர்களிடம் கூடுதல் உற்சாகம் தோன்றும். அது படத்தன் இறுதி ஓட்டம் வரை நீடிக்கும். எனவே, ஒரு படத்தின் வெற்றியில் ட்ரைலருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.
*கிட்டத்தட்ட ஆங்கிலப் படங்களின் ட்ரைலருக்கு இணையாக எந்திரன் ட்ரைலரில் ‘FAST EDITITING’ முறை கையாளப்பட்டுள்ளது.
*மூன்று ட்ரைலர்கள் சுமார் இரண்டரை நிமிடங்கள் DURATION இல் தயார் செய்யப்பட்டுள்ளன. (சிவாஜி ட்ரைலர் 2 நிமிடங்கள் 25 செக்கண்டுகள்).
*ட்ரைலரை பார்த்தால், இது தான் கதை என்று யூகித்துவிட முடியாது. அதே சமயம் படத்தை பார்க்கும் ஆவல் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது மட்டும் உறுதி.
*குழந்தைகளை கவரும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் மூவ்மெண்ட்டுகள் ட்ரைலரில் சேர்க்கப்பட்டுள்ளன. அதிரடி சண்டை காட்சிகள், மற்றும் EXPLOSIONS குறித்த காட்சிகளும் ட்ரைலரில் உண்டு.
*சுமார் ஆறு நாட்கள் இரவு, பகல், உறக்கம் பாராது ட்ரைலரை தயார் செய்வதில் எடிட்டர் ஆண்டனியும் இயக்குனர் ஷங்கரும் ஈடுபட்டார்கள்.
*ட்ரைலரை பார்த்துவிட்டு அசந்துபோன இசைப் புயல் ரஹ்மான், ஆண்டனியிடம் கூறியது, “என்னப்பா… இப்படி மிரட்டி வெச்சிருக்கீங்க. உங்க ட்ரைலருக்கு BGR போடுறதுக்கு நான் ஸ்பெஷலா ஒரு ஆர்கெஸ்ட்ரா ரெடி பண்ணனும் போலருக்கே…. அப்படி கட் பண்ணி பின்னியிருக்கியே….” என்பது தான்.
*ட்ரைலரை பார்த்த பின்பு, நீங்கள் கூறப் போகும் ஒரே வார்த்தை, “வாவ்… பின்னி பெடலேடுத்துட்டாங்க…பா” என்பது தான். “தமிழில் இதுவரை இப்படி ஒரு ட்ரைலர் வந்ததில்லை இனியும் வரப்போவதில்லை.” என்ற வார்த்தைகளும் கேட்கும். (ட்ரைலர் பார்குற அன்னிக்கு இங்கே சொல்லுங்கப்பா!) ட்ரைலர்வெளியாகும் நாளன்று “talk of the town” ஆக அது தான் இருக்கும்.
எந்திரன் டீமுக்கு நாம் விடுக்கும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால், ட்ரைலரை தொலைகாட்சிகளில் வெளியிடும்போது, அடிக்கடி காட்டாமல், அதற்காக காத்திருந்து நாம் பார்ப்பது போல, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை தான் ஒளிபரப்பவேண்டும். பட ரிலீஸ் நெருங்க… நெருங்க… இந்த கட்டுப்பாட்டை தளர்த்தலாம்.
ட்ரைலர் ஆடியோ ரிலீசின்போது வெளியாகுமா… அல்லது பிற்ப்பாடு வெளியாகுமா என்று தான் தெரியவில்லை. (ரொம்ப EARLY யா விடக்கூடாது. சிவாஜி ட்ரைலருக்கு விட்ட கேப் ஓ.கே.!)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...