Rajinikanth, Shankar At Stanwinston Studios in Endhiran Shooting Photo Gallery
















































எந்திரன் படப்பிடிப்பு மற்றும் இறுதி கட்ட பணிகளில் பிசியாக இருக்கும் இயக்குனர் ஷங்கர், இரு வாரங்கள் கழித்து மீண்டும் தனது ப்ளாக்கை அப்டேட் செய்திருக்கிறார். அசத்தலான படங்களோடு. ஆனால், இம்முறை On-screen படங்கள் அல்ல.
சூப்பர் ஸ்டாருடன் ஷங்கர் தலைமையில் எந்திரன் குழுவினர் PRE-PRODUCTION மற்றும் மேக்கப் டெஸ்ட்டுக்காக லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டூடியோவிற்கு எந்திரன் துவங்குவதற்கு முன்பு சென்று வந்ததை பற்றி தனது அனுபவங்களை சொல்லியிருக்கிறார்.
புகழ் பெற்ற அந்த ஸ்டூடியோவில், சூப்பர் ஸ்டார் மற்றும் எந்திரன் குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இது தான் தொழில் பக்தி!
இன்னொரு சேதி அவர் சொல்லியிருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் தொழில் பக்தியை பறைசாற்றும் செய்தி அது. ஊரெல்லாம் விடுமுறையில் பொங்கல் திருநாளை கொண்டாடிக்கொண்டிருக்க, சூப்பர் ஸ்டாரோ இன்று எந்திரன் படப்பிடிப்பில் இருக்கிறாராம். எந்திரன் குழுவினருடன் தான் அவருக்கு இன்று பொங்கல். தொழில் பக்திக்கு இதைவிட சிறந்த சான்று இருக்க முடியுமா?
ஷங்கர் தனது ப்ளாக்கில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பதிவின் தமிழாக்கம் இது.Over to ஷங்கர் @ www. directorshankaronline.com
ஹாய்,
உபயகுசலோபரி (நலம் நலமறிய அவா),
உங்களில் நிறைய பேர், ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டூடியோ பற்றி கேட்டிருக்கிறீர்கள்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டூடியோவின் அனிமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தை இன்டிஹியாவில் முதன்முதலில் பயன்படுத்துவது நம் எந்திரன் படம் தான். ஜூராசிக் பார்க், Terminator, Predator உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்தது இந்த ஸ்டூடியோ தான்.

ஜூலை 2008 ஆம் ஆண்டு, நானும் சூப்பர் ஸ்டார் ரஜினியும், எந்திரன் குழுவினரும் ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டூடியோவிற்கு ஸ்கேனிங், மேக்கப் டெஸ்ட் மற்றும் படத்தின் Pre-Production பணிகளுக்காக சென்றிருந்தோம். இதற்காக சில வாரங்கள்அங்கு செலவிட்டோம். ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன், அர்னால்ட் போன்றோர் பணிபுரிந்த ஸ்டூடியோவில் நாமும் பணிபுரிவது எங்களுக்கு உண்மையில் மிகப் பெறும் பெருமை.
ஒன்றரை வருடங்களாக நடந்த பயிற்சிக்கு பிறகு, ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டூடியோவில் இருந்து இங்கு சன் ஸ்டூடியோஸ் செட்டுக்கு வந்து கிட்ட தட்ட நான்கு மாதங்கள் பணிபுரிந்தனர். எந்திரன் படத்தின் கிட்டத்தட்ட 22 காட்சிகள் இந்த அனிமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சூட் செய்யப்பட்டது. இதற்காக சூப்பர் ஸ்டாருக்கு விஷேஷ மேக்கப் போடப்பட்டது. பெருமபாலான காட்சிகள் ரஜினி சாரை வைத்து ரியல்லாக ஷூட் செய்தோம். காட்சிகள் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த காட்சிகளில் கிராபிக்ஸை பயன்படுத்தாது இந்த அனிமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினோம்.
முடிவில், ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டூடியோ ஊழியர்கள், அசந்து போய் “அனிமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தை மிக சரியாக, அநேக இடங்களில் பயன்படுத்தியிருக்கிறீர்கள்” என்று எங்களுக்கு பாராட்டு தெரிவித்தீர்கள். ஹாலிவுட்டில் கூட இது அரிது.
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட எந்திரன் குழுவினருடன் தான் என்னுடைய பொங்கல் இருக்கும். ஆம்.. இன்று எங்களுக்கு படப்பிடிப்பு இருக்கிறது.
கூடுமானவரை உங்களை மறுபடியும் சீக்கிரம் சந்திக்கிறேன்.
உங்கள் அன்புள்ள,ஷங்கர்.

Hi Everyone…
Ubhayakusalobhari!!! (UBKS)(Its a Sanskrit word used by Ambi in ANNIYAN. Meaning: – I am fine… Everything ok here… Hope you and your family doing well… etc… etc…)
Most of you have asked about Stanwinston Studios role in Endhiran.
Yes. Endhiran is the first Indian movie to use Stanwinston Studio’s Animatronics technology. We all are proud and happy to be associated with No.1 Hollywood studio who did a great job in movies like Jurassic Park, Predator, Terminator, Ironman and the recent Avatar.
Myself, Rajini sir and our Technical crew have been at Los Angeles for couple of weeks at Stanwinston Studios for scanning, make-up test and preproduction works in July 2008. We all are excited that we are working at the place where Steven Spielberg, James Cameron and Arnold Schwarzenegger have worked.
After 1½ half years of preparatory work a group of top technicians came to Sun Studio’s Chennai sets and worked around for 4 months. 22 scenes of Endhiran Movie have been shot using Animatronics and Special Make-ups. Most of Important scenes was shot lively with Rajini sir using Animatronics without CGI.
At the end of the day Stanwinston people told that they are very happy that Endhiran movie utilized maximum animatronics techniques in so many scenes in all possible ways, which is very rare in Hollywood too… Cool….
Wish you all a very very Happy Pongal…!!!
And my pongal is on the sets with Rajini Sir, Ash and Endhiran crew.Today we are having shooting.








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...