எந்திரனுக்காக லோனவாலாவில் ரஜினி; அமிதாப்பை சந்தித்து “பா” படத்திற்காக பாராட்டு !!



அபிஷேக் பச்சனுக்கு மகனாக 14 வயது சிறுவனாக அமிதாப் ஜி நடித்திருக்கும் “பா” திரைப்படம், அனைத்து தரப்பினரது பாராட்டையும் குவித்து வருகிறது. இந்த படத்திற்கு இசை, நமது இசைஞானி என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, படத்தை இயக்கியிருப்பது பால்கி என்னும் தமிழரே.
சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த படத்தின் விஷேஷ காட்சியை சென்னையில் சென்ற வாரம் அமிதாப் ஜி ஏற்பாடு செய்திருந்தார். படத்தை பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் அமிதாப் ஜி பற்றி அனைவரிடமும் பாராட்டி தள்ளிவிட்டாராம். “எனது இந்த பாராட்டை அவரிடம் நேரில் தெரிவிப்பேன். அது தான் முறை” என்று கூறி வந்த சூப்பர் ஸ்டார், அமிதாப் ஜியை கடந்தசனிக்கிழமை நேரில் சந்தித்து பாராட்டி குவித்துவிட்டாராம்.
பிக் பாஸ் தொலைக்காட்சி தொடருக்காக புனேயில் அருகில் உள்ள லோனவாலாவில் உள்ள ரிஸார்ட் ஒன்றில் முகாமிட்டிருந்த அமிதாப் ஜியை, எந்திரன் படப்பிடிப்பிற்காக லோனவாலா வந்துள்ள சூப்பர் ஸ்டார் சந்தித்தாராம்.
இது பற்றி அமிதாப் ஜி, தனது ப்ளாக்கில் (Bigb.bigadda.com) இல் கூறியிருப்பதாவது, “இன்றைய தினம் எனக்கு சற்று தாமதமாக துவங்கியது. இருப்பினும், எனக்கு நான் தங்கியிருந்த FARIYAS ஓட்டல் அறையில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. என்னை பார்க்க எனதருமை நண்பர் ரஜினிகாந்த் வந்திருந்தார். அவருக்கு லோனாவாலா மற்றும் அதன் சுற்றுப் புற பகுதிகளில் ஐஸ்வர்யாவுடன் எந்திரன் படப்பிடிப்பு இருந்தது. அப்படியே என்னை பார்த்துவிட்டு சில வார்த்தைகள் பேசிவிட்டு போகலாம் என்று வந்திருந்தார். பல வருடங்களுக்கு முன்பு நான் சென்னையில் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அவரை எப்படி பார்த்தேனோ அப்படியே தான் இன்றும் பார்க்கிறேன். அதே எளிமை, அதேபண்பு … ரஜினி துளியும் மாறவில்லை. எங்களுடைய இந்த உன்னதமான நட்பு பல ஆண்டுகளாக எங்களுக்குள் இருந்த புரிதலில் விளைந்த ஒன்றாகும். நானும் ரஜினியும் பல வெற்றிப் படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறோம். மாலை வேலைகளில் எங்களின் சினிமா மற்றும் கனவுகள் மற்றும் எதிர்காலம் பற்றி விவாதித்திருக்கிறோம்.

Big B, Ilayaraja and others in PAA premiere event
இன்றும் அப்படித்தான். அவர் நான் நடித்த “பா” படத்தை பார்த்திருக்கிறார். சென்னையில் அவருக்கு அப்படத்தின் விஷேஷ காட்சியை ஏற்பாடு செய்திருந்தேன். அதற்க்கு பிறகு இப்போது தான் அவர் என்னை பார்க்கிறார். படம் முடிந்தவுடனே என்னிடம் பேச முயன்றிருக்கிறார். ஏனோ அது முடியவில்லை. அவரது அழகு மனைவி லதாஜி என்னை தொடர்புகொண்டு படத்தை பற்றி மிகவும் ஸ்லாகித்து பேசினார். “பா” எத்தகைய உன்னதான ஒரு அனுபவமாக இருந்தது என்பதை வர்ணித்தார்.
ரஜினி இன்றைய பொழுது என்னை பார்க்கையில் உணர்ச்சிகளின் விளிம்பில் இருந்தார். ‘பா’ படத்தை பற்றி மட்டும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் நாங்கள் பேசினோம். ‘பா’ திரைப்படத்தை பார்த்துவிட்டு தான் மிகவும் அப்செட்டிலிருப்பதாக ரஜினி என்னிடம் கூறினார். காரணம் படத்தின் நெகிழ்ச்சியான கதையினாலோ அல்லது ட்ரீட்மென்ட்டினாலோ அல்ல. “நீங்கள் இப்படியெல்லாம் நடித்தால் நாங்கள் என்ன செய்வது, எப்படி நடிப்பது? தெரியவில்லை அமிதாப்ஜி” என்று என்னிடம் கூறினார் ரஜினி.
அன்றைய பொழுது எனக்கு இனிமையாக கழிந்தது. நம் துறையை சேர்ந்த ஒரு சிறந்த மனிதருடன் நேரத்தை கழிப்பது எத்துனை இன்பமான விஷயம். ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், வாழ்க்கை, மற்றும் நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் என எங்கள் பேச்சு அமைந்தது.
கற்பனைக்கு எட்டாத எப்படிப் பட்ட ஒரு வாழ்க்கை பயணம் அவருடையது! ஒரு சாதரான பஸ் கண்டக்டராக இருந்து இன்று எண்ணற்ற ரசிகர்களை கொண்ட ஒரு மிகப் பெரும் கலைஞராக, மிகுந்த செல்வாக்குள்ள ஒரு DEMIGOD போன்று அவர் பரிணாமம் எடுத்திருக்கும் விதம்… உண்மையில் AMAZING!! ரஜினி இஸ் க்ரேட்!!
English Transcript from BigB’s blog: Bigb.bigadda.com
//The morning began late. Obviously. But had a surprise visitor in RajniKant in my room at the Fariyas. He is shooting for ‘Robot’ with Aishwarya in and around Lonavala and dropped in for a chat. He still remains that most unassuming down to earth basic human, that I had the great pleasure of meeting at the AVM Studios in Chennai many many years ago. It has been a long association of friendship and professional camaraderie. Many films have we worked together in and been rewarded with success and many an evening has been spent together, talking about our craft and about life !
Today was no different. He had seen ‘Paa’. I had organized it for him to see it at a private theatre in Chennai and he was meeting me for the first time after that. He had wanted to speak immediately after the film got over, but somehow we were missing each other. His charming wife Lathaji had called and had profusely spoken about the film and how amazing the experience had been. Rajni was exuberant this morning. And we spoke for more than an hour on ‘Paa’. He said we are all upset after seeing the film, not so much because of the content and its emotional quotient, but because now that ‘you have done this, what are we going to do’.
It is such a joy to spend time with a member of your own fraternity and speak of nothing else but creative inputs, life and the world around us. And this morning was no different.
What an incredible life Rajni has had. From a struggling bus conductor checking tickets on public transports to this God-Like figure of immense fan following and mass strength. Absolutely amazing !!//
[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...