எந்திரன் ஜாலம் - அதி வேகமாக விற்றுத் தீர்ந்த தினகரன்



கடந்த இரண்டு நாட்களாகவே ரசிகர்கள் ஒரு வித பரபரப்பான எதிர்ப்பார்ப்பில் இருந்தனர். நேற்றைக்கு மட்டும் நமக்கு இன்றைய தினகரனை எந்திரன் ஸ்பெஷல் பற்றி அரை டஜன் எஸ்.எம்.எஸ்.கள் வந்தன.
நாம் நமது பேப்பர் கடைக்கு ரெகுலர் கஸ்டமர் என்பதால் நமக்கு எடுத்து வைத்திருப்பார்கள் என்றாலும், எதற்கு ரிஸ்க் என்று ஏழு மணிக்கே கையில் கத்திரிக்கோலுடன் (?!) கடைக்கு சென்றுவிட்டேன்.
நாம் சென்ற போது காலை ஏழு மணியிருக்கும். நமது பேப்பர்களை வாங்கிவிட்டு அங்கேயே தினகரனை புரட்ட ஆரம்பித்துவிட்டேன். அப்பொழுதே கடைக்காரர் நிறைய பேருக்கு தினகரன் இல்லையென்று சொல்லிக்கொண்டிருந்தார். “சார் கொஞ்சம் அந்த பக்கம் போயி படிங்க. இங்கே நிறையே பேர் பேப்பர் இல்லாம ரிட்டர்ன் போய்ட்டுருகாங்க. அவங்க டென்ஷன் ஆகிடுவாங்க” என்றார். அவர் சொல்வது நியாயம் தான் என்று புரிந்தது. காரணம் அந்த நிமிடமே நம்மை ஒருத்தர் முறைத்து பார்த்தார்.




பின்னர் கடைகாரரிடம் விசாரித்தேன். “வழக்கமாக ஞாயிறு இதே நேரம் சுமார் 20 முதல் 25 பேப்பர் வரை வித்திருக்கும். ஆனால் இன்னிக்கு எந்திரன் ஸ்பெஷலை முன்னிட்டு, எல்லா பேப்பரும் 6.45 க்குள் (சுமார் 80) வித்திடுச்சு. உங்களை மாதிரி ரெகுலர் கஸ்டமர்கள் நாலஞ்சு பேருக்கு எடுத்து வெச்சிருக்கேன். ரொம்ப நாளைக்கு பிறகு இன்னிக்கி நல்லா வித்திருக்கு” என்றார்.
புறநகர் பகுதிகளில் பல இடங்களில் டிமேன்ட்டை விட சப்ளை கம்மியாக இருந்ததாக கடைக்காரர்கள் குமுறுகிறார்கள். இந்தளவு விளம்பரம் செய்து அதற்க்கேற்றார்போல சப்ளை செய்யவேண்டாமா? -கேட்டால், “நகர்ப்ப் புற பகுதிகளில் பல கடைகளில் இன்று கூடுதல் பேப்பர்கள் சப்ளை செய்யப்பட்டதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டதாக” எஜன்ட்டுகள் கூறுவதாக தெரிகிறது. கடைக்காரர்களோ, “ஏமாற்றத்துடன் திரும்பும் கஸ்டமர்களுக்கு எங்களால் பதில் கூறமுடியவில்லை. சில கடைக்காரர்கள் வழக்கத்தைவிட இரு மடங்கு பேப்பர்களை எப்படியோ வாங்கிவிட்டனர். ஆனால் நாங்க என்ன செய்றது…?” என்று சோகத்துடன் கூறினர்.
Meanwhile, நம்மை தொடர்பு கொண்ட நண்பர் பாஸ்கி, தனக்கு நான்கைந்து கடைகளில் அலைந்தும் பேப்பர் கிடைக்கவில்லை என்றும் தளத்தில் வெளியிட்டு உதவுமாறும் கேட்டிருந்தார்.
பாஸ்கி மட்டுமல்ல மேலும் பல நண்பர்கள் போன் செய்து, பேப்பர் கிடைக்கலை, உங்களுக்கு கிடைச்சிடுச்சா என்று நம்மிடம் கேட்டனர். வெளி மாவட்டங்களிலிருந்து வந்த அழைப்புக்களையடுத்து தமிழகம் முழுக்க பரவலாக இதே நிலை ஏற்பட்டது புரிகிறது.
இது போன்ற பேப்பர் கிடைக்காத ரசிகர்களின் வசதிக்காக அதை ஸ்கேன் செய்து வெளியிடுகிறேன்.
சரி, ஸ்டில்ஸ் எப்படி? ……………..சும்மா கலக்குதில்ல…!!
(நன்றி: தினகரன்)







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...