பிரமாண்ட செட்டில் எந்திரன் சண்டை
பிரமாண்டம் என்றால் ஷங்கர் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் இயக்கிய ஜென்டில்மேன், காதலன் படங்களைத் தவிர மற்ற படங்களான ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி என அத்தனைப் படங்களும் பல கோடிகளை செலவழித்து எடுக்கப்பட்டவை. தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் எந்திரன், ஷங்கரின் லட்சியப் படம் என்பதால் ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பதாக இருந்து, சில நாட்கள் படப்பிடிப்புக்குப் பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சன் பிக்சர்ஸுக்கும் ரஜினியை வைத்து படம் தயாரிப்பது கனவாக இருந்ததால் செலவுக்கு குறைவில்லை. வேகமாக வளர்ந்து வரும் எந்திரன், வில்லன் ரஜினியோடு விஞ்ஞானி ரஜினி மோதும் காட்சிக்காக பல லட்சம் செலவு செய்து மாயாஜாலில் போடப்பட்ட செட்டில் இரண்டு ரஜினியும் மோதும் சண்டைக் காட்சியைப் படம்பிடித்து வருகிறார்கள். இப்படத்தின் இன்னொரு முக்கிய வில்லனாக நடிக்கும் டேனி டென்ஸோங்பாவும் இந்த காட்சியில் கலந்துகொண்டு நடித்தார். ரஜினி, ஷங்கர், சன் பிக்சர்ஸ் இந்த மூன்று பிரமாண்டங்களும் இணைந்தால் வசூலுக்கு பஞ்சமிருக்காது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment