மும்பை தீவிரவாதத்திற்கு பலியானோருக்கு அஞ்சலி செலுத்துங்கள்!







மழை வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகிப்போன சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதி மக்கள் முதலில் மும்பை தாக்குதலின் தீவிரத்தை உணரவில்லை. புறநகர் பகுதிகளில் வசித்துவந்த அனைவரும் நீரால் சூழப்பட்டு வெளியுலகுடன் துண்டிக்கப்பட்டுவிட்டனர். பல வீடுகளில் கடந்த சில நாட்களாக மின் சப்ளை இல்லை. இதனால் தொலைக்காட்சியோ செல்போனோ வேலை செய்யவில்லை. அத்தியாவசியத்தேவையான பால், குடிநீர் முதிலயவைகள் கூட இன்றி பலர் சிரமப்படுகின்றனர். பேருந்துகள், ரயில்கள் இயங்கவில்லை. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல இடங்களில் சகஜ நிலை திரும்பவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டோர் இது வரை மழை வெள்ளத்துக்கு பலியாகிவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் நம் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
மழை இன்று சற்று ஓய்ந்திருப்பதை அடுத்து, தற்போது தான் தமிழக மக்கள் மும்பை தாக்குதலின் தீவிரத்தை மெல்ல உணரத்துவங்கியுள்ளனர்.
முதலில் இது குறித்து நான் நேற்று பதிவிடலாம் என்று நினைத்த போது என்ன போடுவது யாரை தேற்றுவது என்று எனக்கு எதுவும் புரியவில்லை. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பாட்ஷா வெள்ளி விழாவில் ரஜினி நிகழ்த்திய தீவிரவாதிகளுக்கெதிரான உரையை சேர்த்து நேற்று வெளியிட்டேன்.
இருப்பினும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு ஒரு தனி பதிவு வெளியிட்டால் அஞ்சலி செலுத்த விரும்புபவர்களுக்கு தூண்டுகோலாக அமையுமே என்ற காரணத்தால், நேற்று வெளியிட்ட “Times of India” அஞ்சலி படிவத்தை URL வடிவத்தில் இங்கும் இணைத்துள்ளேன். கீழ் கண்ட முகவரியை க்ளிக் செய்து உயிர்நீத்த ஆத்மாக்களுக்கு உங்கள் அஞ்சலியை பதிவு செய்யுங்கள்.
Pay your tributes to those who killed in Mumbai
http://timesofindia.indiatimes.com/tributes.cms
தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் தம் இன்னுயிர் நீத்த அப்பாவி மக்களுக்கும், பாரதத்திற்கு விருந்தினர்களாக வந்து எதிர்பாராவிதமாக மடிந்த அயல் நாட்டவருக்கும், தேசத்தை பாதுகாக்கும் பொருட்டு கடமையை செய்யும்போது வீரமரணமடைந்த காவல்துறையினருக்கும், அதிரடிப்படையினருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எங்கள் இதயம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலி.
[END]

“தீவிரவாதிகளை விசாரணையின்றி தூக்கிலிடுங்கள்!!” - பாட்ஷா விழாவில் ரஜினி ஆற்றிய ஆவேச உரை!!




எங்கள் கண்ணீர் அஞ்சலி!!
மும்பையில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த நெஞ்சை பதற வைக்கும் அப்பாவி மக்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் கண்டு நாடே உறைந்து போயிருக்கும் இந்த நேரத்தில், தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் துறந்த அப்பாவி பொதுமக்களுக்கும், நம் விருந்தினர்களாக வந்து இந்த பூமியில் மடிந்த வெளிநாட்டினருக்கும் எங்கள் இதயங்கனிந்த அஞ்சலி. அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
பிணையாளிகளை காக்கும் பொருட்டு களத்தில் இறங்கி தம் இன்னுயிர் நீத்த போலீசாருக்கும், தேசிய பாதுகாப்புப்படை கமேண்டோக்களுக்கும் எங்கள் கண்ணீர் அஞ்சலி. நாடு என்றென்றைக்கும் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் சவால் விடப்பட்டுள்ள இந்த தருணத்தில் நாமனைவரும் ஒன்று பட்டு நின்று தீவிரவாதத்திற்கெதிராக ஒருமித்த குரல் கொடுப்போம்.
இது குறித்து நான் முன்பே பதிவை வெளியிட்டிருக்க வேண்டும். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
தீவிரவாதம் பற்றி ரஜினியின் கருத்து என்ன?
சூப்பர் ஸ்டார் அறவே வெறுக்கும் ஒரு விஷயம் தீவிரவாதம். பாட்ஷா பட வெள்ளிவிழாவில் அப்போது தமிழ் நாட்டில் பரவி வந்த வெடிகுண்டு கலாச்சாரத்தை கண்டித்து பேசியாதும், பிறகு அது மிகப் பெரிய அரசியல் சூறாவளியாக மாறி அப்போதைய ஜெயா அரசை தூக்கி எரிந்ததும் அனைவருக்கும் தெரிந்ததே.
கண்டித்து பேசியதோடல்லாமல் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான வழிமுறைகளையும் அந்த உரையில் அவர் கூறியிருந்தார். தீவிரவாதம் எல்லை மீறி போய்விட்ட இந்த தருணத்தில் அதை நான் நினைவுகூர்கிறேன்.
தீவிரவாதிகளை ஒடுக்க தேவையானது ஒரு இரும்புக்கரம். அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அவர்கள் மீது துளியும் இரக்கம் கட்டக்கூடாது. விசாரணை, சாட்சி போன்ற சட்ட நடைமுறைகளை பின்பற்றி அவர்களை தப்பவிட்டுவிடக் கூடாது. இதைத்தான் சூப்பர் ஸ்டார் பாட்ஷா வெள்ளி விழாவில் வலியுறுத்தியிருந்தார்.
ரஜினி கூறிய வழிமுறையை பின்பற்றி சிலரை தண்டித்தலே போதும், நிச்சயம் மற்றவர்களுக்கு பயம் வந்துவிடும். தீவிரவாதம் கட்டுப்படும்.
1995 இல் ரஜினியை ஆவேசப்படுத்திய நாட்டின் அப்போதைய சூழல் இன்றைக்கு அதை விட பலமடங்கு பெருகியிருப்பது வருத்ததிற்குரிய விஷயம்.

சூப்பர் ஸ்டாரின் அயராத வெற்றியின் சூட்சுமம் என்ன?




தன்னை நோக்கி வீசப்பட்ட தடைக்கற்கள் அனைத்தையும் படிக்கற்க்களாக்கி, சோதனைகளை கூட சாதனைகளாக்கும், சூப்பர் ஸ்டாரின் வித்தையை கண்டு வியக்கதவர்களே இருக்கமுடியாது. அதுவும் சக நடிகர்கள் மற்றும் யூத் (??!!) ஹீரோக்கள் மத்தியில் ரஜினி ஒரு ‘Living Inspiration’ என்றால் மிகையாகாது.
ரஜினியை போல் நாமும் வரவேண்டும் என்று எந்த நடிகனும் விரும்பினால், அதில் தவறேதும் இல்லை. அது அவரவர் விருப்பம். அவர்களுக்கிருக்கும் தகுதியை பொறுத்தது அது. ரஜினி ஏன் உண்மையில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று ஆராய்ந்து அவர் கடைப்பிடிக்கும் குணாதீசியங்களை அவர்களும் கடைபிடித்தால் - ரஜினியைபோல் இல்லாவிட்டாலும் - ஓரளவாவது பிரகாசிக்க இயலும். அதை விட்டுவிட்டு நேர்வழியில் போராடாமல் குறுக்கு வழியில் அந்த இடத்தை அடைய முயற்சிப்பவர்களை பார்த்து நான் பரிதாபம்தான் படுகிறேன். ரஜினி பின்பற்றும் உயரிய பண்பாடுகள் சிறிதும் பின்பற்றாமல் ஆனால் அவரைபோல் வெற்றிகளைக் குவிக்கவேண்டும் என்று பேராசைப்படுவதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.
“உன்னோட வாழ்கை அது உன் கையில் இருக்கு; அடுத்தவன் கொடுத்தா அது நிக்காதப்பா!!
கஷ்டப்பட்டு உழைச்சி முன்னேறப் பாரு, இஷ்டப்பட்டு எல்லோரும் உன் பின்னால் வருவான்”
- எத்துனை சத்தியம் இந்த வார்த்தைகள்??!!
சூப்பர் ஸ்டாரைப் போல் வர நினைக்கும் நடிகர்கள் இதை மனதில் வைத்தாலே போதும்!!
ரஜினியால் மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது?
அது சரி ரஜினி மட்டும் ஏன் இப்படி மக்கள் மனங்களில் கோலோச்சுகிறார்?
அவர் சொன்னால் மட்டும் அது மக்களை அவ்வளவு சுலபமாக சென்றடைகிறதே எப்படி? அந்தஸ்து மரியாதை இவையெல்லாம் அவரை தேடி வருகிறதே எப்படி?
மிகப்பெரும் சோதனைகளை கூட அனாயசமாக தாண்டிவிடுகிறாரே அது எப்படி? படத்துக்கு படம் அவரது மார்கெட் மட்டும் இப்படி உயருகிறதே எப்படி?
- இத்தகைய எப்படிகளை அவரைப் போல் வர விரும்பும் ஒவ்வொரு நடிகனும் தங்களுக்குள் கேட்கவேண்டும்.
விடை இது தான்:
அவரை, அவரது நடவடிக்கைகளை, அடுத்தவர்களிடம் அவர் நடந்துகொள்ளும் முறையை கூர்ந்து கவனித்தாலே போதும். நடிகை நயன்தாரா கூறியதைப் போல அவர் நமக்கு உபதேசம் செய்வதில்லை. வாழ்ந்து காட்டுகிறார். அதிலிருந்து நாமே நிறைய கற்றுக்கொள்ளலாம்.
அவர் நிறைய படிக்கிறார். நிறைய கேட்கிறார். குறைவாக பேசுகிறார். தினமும் தியானம் செய்கிறார்.
தியானம் - மதங்களை கடந்த மாமருந்து!!
தியானம் என்பது மதங்களை கடந்த மாமருந்து. அதன் சக்தி அபாரமானது. தியானத்தின் பலன்களை அது நம் வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சுட்டிக்காட்ட சூப்பர் ஸ்டார் தவறுவதேயில்லை.
தியானம் செய்தேன் - உங்களை சந்தித்தேன்
2004 ஆம் ஆண்டு மலேசிய நட்சத்திர கலைநிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி கேட்க்கும் அறிய வாய்ப்பை பெற்ற ரசிகர் ஒருவர் சொன்னார், “தலைவா, நீங்கள் தியானம் செய்றதை பற்றி அடிக்கடி சொல்வீங்க. நான் அதை கேட்டு தியானம் செய்தேன். இதோ உங்களை நேரடியாக சந்திக்கும் அறிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன்” என்றார் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே.
ரஜினி 25 விழாவில் வரவேற்புரையாற்றிய சூப்பர் ஸ்டார், தனது வெற்றிக்கு முக்கிய காரணமாக தியானத்தை குறிப்பிட்டார். மேலும் தியானம் செய்ய மதம் ஒரு பொருட்டல்ல என்றும் எந்த மதத்தவராயினும் தியானம் செய்து பலன் பெறலாம் என்றும், அதற்குரிய வழிமுறைகளையும் கூறி அசத்தினார். (பெட்டிச் செய்தியில் காண்க).
தொண்டர்களை சுயலாபத்துக்காக தூண்டிவிடும் தலைவர்களுக்கிடையே, அவர்களை “மனதை ஒருமுகப்படுத்துங்கள்; வெற்றிகளை குவிக்கலாம்!!” என்று கூறும் சூப்பர் ஸ்டார் உண்மையில் வித்தியாசமான மனிதர் தான்.
குறிப்பு:
சென்ற பதிவில் நம் onlyrajini.com வலைதளைத்தை பற்றி “ரசிகனின் தீர்ப்பு” என்று பெட்டிச் செய்தியாக சினிமா எக்ஸ்பிரஸ் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதை நான் கூறவில்லை.
நம் நண்பர்கள் கண்டுபிடிக்கிறார்களா பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன். ஒரு சிலர் அதை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. அவர்களுக்காக தான் இந்த நினைவூட்டல். கட்டுரையின் மூன்றாம் பக்கத்தில் நம் வலைத்தளைத்தை பற்றிய செய்தி பெட்டிச் செய்தியாக வெளியாக வந்திருக்கிறது.
தற்போது நண்பர் முரளி எனக்கு தியானம் பற்றி அனுப்பிய சேதி ஒன்றை தருகிறேன்.
- சுந்தர்
…………………………………………………………………………………………………………………
சுந்தர் , தியானம் பற்றி தலைவர் சொல்படி நானும் கற்று இபொழுது அதன் பலன்களை அனுபவித்தும் வருகிறேன் இப்பொழுது ஈஷா யோகா மையம் திருவல்லிக்கேணியிலும் , தொடர்ந்து மைலாப்பூரிலும் வகுப்புகள் தொடங்க இருக்கிறார்கள் , அதை ஒட்டிய பதிவை உங்கள் இணையத்தளத்தில் போடமுடியும் என்றால் , அதன் மூலம் நம் ரசிகர்கள் பயன்பெறுவார்கள் எனபது உறுதி , மேலும் நம் தலைவர் வழி நடக்க நாமும் ஒரு அடி எடுத்து வைதூம் என்ற மனநிறைவும் இருக்கும் ,
இதுட்டன் தமிழில் தட்டச்சு செய்யப்பட்ட வகுப்புகள் பற்றிய விவரங்கள் தங்களக்கு அளிக்கிறேன் , அதில் உங்கள் பதிவில் போடவேண்டும் என்றும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
- முரளி
ஈஷா யோகா
வாழ்கையை புதிய கோணங்களில் சிந்திக்கவும் உணரச்செய்யவும் செய்கிறது . நினைவாற்றல் மனம் குவிப்பு திறன் முடிவெடுக்கும் திறன் ஆகியவை சில வாரப் பயிற்சிகளிலேயே 100% வரை அதிகரிக்க முடியும்
நாட்பட்ட நோய்களான ஆஸ்துமா , உயர் ரத்த அழுத்தம் , நீரிழிவு , மூட்டு வலிகள், தலைவலி , சைன்ஸ் , முதுகுவலி , இருதய கோளாறு , உடற்பருமன் மற்றும் தீராத நோய்கள் குணமடையவும் , வராமல் தடுக்கவும் இயலும்
மிகவும் தொன்யமையான ஷாம்பவி மகா முத்ரா பயற்சி வாழ்கை முறையை மாற்றி அமைக்கக்கூடிய அளவில் ஷக்தி வாய்ந்ததாகும் .
இப்பயிற்சியில் கலந்துகொள்ள வாழ்கை முறை மற்றும் பழகவழகங்களில் எந்த மாற்றமும் செய்துக்கொள்ள தேவையில்லை . எந்த மதமானாலும் , எந்த இனமானாலும் , எந்த பிரிவானாலும் இந்த யோகா பயிற்சிகளுக்கு தடை இல்லை .
இப்பயிற்சி அனைவருக்கும் முற்றிலும் பரிசோதித்து அனுபவபூர்வமாக அறியக்கூடிய விஞ்ஞானம் ஆகும் .தினமும் மூன்று மணி நேரம் வீதம் 7 நாட்கள் என விஞ்ஞான முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது
வாருங்கள் உங்களில் மலருங்கள்
அறிமுக உரையுடன் பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 3 ம் தேதி மாலை 6 மணிக்குத்துவங்கும்
(* பயிற்சிக் கட்டணம் ரூபாய் 900/- மட்டும் )
இடம் :
புது ரஹ்மத் மன்ஜில்25/13 , குப்புமுத்து முதலி தெரு,திருவல்லிக்கேணிசென்னை - 600005(எல்லிஸ் சாலை ஜாம்பஜார் மார்க்கெட் இடையில் )
தொடர்பு கொள்ள :
ரமேஷ் : 9841285177முரளி : 9840223632

நிலைத்த, நீடித்த, உறுதியான வெற்றிக்கு தயாராகும் ரஜினி!!




சமீபத்தில் நடந்த ரசிகர் சந்திப்பு மூலம் மிகப் பெரிய சமூக மாற்றத்திற்கான விதையை அமைதியாக தூவிவிட்டு எதுவுமே தெரியாதது போல ‘எந்திரன்’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார்.
ரஜினியின் அரசியல் வாழ்க்கை மற்றும் அதற்கான வாய்ப்புகளை ரசிகர் சந்திப்புக்கு முன்பு மற்றும் ரசிகர் சந்திப்புக்கு பின்பு என்று பேசாமல் பிரித்துவிடலாம். அந்தளவு மக்களிடையே ரசிகர்களிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த சந்திப்பு. அதே போல சூப்பர் ஸ்டாரும் முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்தில் இருக்கிறார். ஈழத்தமிழர்களுக்காக நிகழ்த்திய உண்ணாவிரத உரை மற்றும், இந்த பேட்டிக்கு பிறகு அவரது நிலையே வேறு.
கழுதை அறியுமா கற்பூர வாசம்..?
‘கழுதை அறியுமா கற்பூர வாசம்..?’ என்பது போல இந்த சந்திப்பின் முக்கியத்துவம் அது நிகழ்த்தபோகும் மாற்றம் குமுதத்தில் ஜோக்கர் பணி செய்து வரும் ‘அரசு’ போன்ற அதிமேதாவிகளுக்கு புரியாது தான். ஆனால் சராசரி மக்களுக்கு புரிந்துவிட்டது. குழப்பத்தில் தத்தளித்து கொண்டிருந்த ரசிகனுக்கு புரிந்துவிட்டது. ‘நாம் காத்திருப்பது எந்த நாளும் வீண் போகாது’ என்ற நம்பிக்கை அவனுக்கு பிறந்துவிட்டது.
வெறும் நடிகன் என்ற தகுதியை தவிர ரஜினிக்கு என்ன உண்டு என்று நினைத்துக்கொண்டிருந்த பலர் - (அவரது கடும் விமர்சகர்கள், எதிர்ப்பாளர்கள் உட்பட ) இந்த பேட்டிக்கு பிறகு தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொண்டுள்ளனர் என்பது கண்கூடு. சில வாரங்கள் முன்பு வரை ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி மாற்றுக்கருத்து கொண்டிருந்த பலர் தற்போது பேட்டிக்கு பிறகு மனம் மாறியிருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. (ஆனால் நம் ரசிகர்களில் சிலர் இன்னும் அவரை சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது தான் கொடுமை!!)
ஆக்கபூர்வமான ஆலோசனைகள் சொன்ன சினிமா எக்ஸ்பிரஸ்
ரஜினியை வைத்து சம்பாதித்துவிட்டு அவரையே குறை கூறிக்கொண்டிருக்கும் பத்திரிக்கைகளுக்கு நடுவே, ‘சிருவும் எந்திரனும்’ என்ற கட்டுரையின் மூலம் ரஜினி என்ன செய்யவேண்டும் என்ற வித்தியாசமான கோணத்தில் அலசி, ஆக்கபூர்வமான ஆலோசனைகள் சொன்னது சினிமா எக்ஸ்பிரஸ். அவர்கள் கட்டுரை வெளியிட்ட நேரம் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு குழப்பம் விளைவிக்கும் ரசிகர்களை அதில் எச்சரித்திருந்தார்.
அதற்கடுத்து சமீபத்தில் ‘விடாக்கண்டர்களும், கொடாக்கண்டர்களும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு ரஜினியின் அசைவுகளுக்கு காரணம் அரசியல் அல்ல அவருக்குள் இருக்கும் ஒரு சராசரி குடிமகனே என்றும் அவரது முடிவுகளில் எள்ளளவும் சுயநலம் இருந்ததில்லை என்றும் ஆணித்தரமாக மீண்டும் ஒரு முறை உணர்த்தியது சினிமா எக்ஸ்பிரஸ். அதையே நாம் ஆபாச விகடனின் “தந்திரன் - ரஜினியின் முடிவுகளுக்கு பின்னால்….” என்ற கட்டுரைக்கு பதிலடியாக தந்திருந்தோம்.
இனிமே தான்டா இருக்கு வான வேடிக்கையே
இதோ ரசிகர் சந்திப்பிற்கு பிறகு - மீண்டுமொருமுறை சூப்பர் ஸ்டாரை பற்றிய சூப்பர் அலசல் கட்டுரை ஒன்றை திகட்ட திகட்ட தந்திருக்கிறது சினிமா எக்ஸ்பிரஸ்.
ரஜினியின் எதிர்கால திட்டங்களை அலசி, இனி தான்டா இருக்கு வான வேடிக்கையே என்று கூறுகிறது இந்த அலசல். மேலு நிலைத்த, நீடித்த, உறுதியான வெற்றிக்கு ரஜினி தன்னை தயார் படுத்தி வருவதாக கூறுகிறது இந்த கட்டுரை.
மேலோட்டமாக படித்தால் புரியாது
இது ஒரு HEAVY WEIGHT கட்டுரை. சும்மா மேலோட்டமாக படித்தால் புரியாது. எந்த வித வெளிப்புற தொந்தரவும் இல்லாமல் (without any external disturbance) அமைதியான ஒரு சூழலில் இந்த கட்டுரையை படிக்கவேண்டும். படித்துவிட்டு அசைபோடவேண்டும். அப்போது தான் இது சொல்லவரும் விஷயங்களை கிரகித்துக்கொள்ள இயலும்.

Rajini's political problems comes to an end?

The regional issue surrounding the birth state of super star appears to have come to an end with a Tamil weekly reporting that he indeed belongs only to Tamil Nadu. It was reported in one of the recently held fans-meets about a fan asking the Boss about his plans for a memorial mandapam for his parents in their native place, namely, Nachikuppam
in Krishnagiri district. Stunned by this, Rajini had asked to meet this fan.
Later investigation revealed that Rajinikanth was born in Nachikuppam which is a good 70 Kms from Bengaluru and his parents and other relatives had lived there for quite some time. His maternal uncle and aunt still live in Nachikuppam and a photo of the super star with his uncle adorns the walls in his uncle's house. It is also being said that Rajini may consider his political entry after Endhiran and now that it has been proved that he is after all born in Tamilnadu, it brings a huge sigh of relief to his numerous fans across the world.

Fans to fast on Rajini's birthday


After Rajinikanth had asked his fans not to celebrate his birthday as a mark of protest against the atrocities meted out to Lankan Tamils, Rajini fans have gone a step further and have organized a fast to protest against the genocide in Sri Lanka.
It can be recalled that Kamal Haasan had also asked his fans not to celebrate his birthday owing to the same reason. Numerous political parties and actors have been expressing solidarity with the Lankan Tamils as scores of Tamils have been killed and displaced because of the ongoing fierce battle in the island nation.
Actor Vijay too had gone on a one day fast along with his fans recently.

Advani seeks Rajini's support


BJP top brass Advani met the superstar of Tamil cinema Rajinikanth this evening. He was in the city to launch the Tamil version of his autobiography titled My Country, My Life. Released in March, the autobiography is translated into Tamil by noted political analyst Cho Ramasamy. It is also said in political circles that Advani called on Rajini
upon Cho's suggestion. The 'informal meeting', as claimed by political sources lasted for about an hour at the superstar's residence.
The meeting gains significance at a time when Rajini convened a gathering of his fans to address various queries, predominantly his entry into politics. Besides, the fact that the elections are drawing closer and that BJP wants to spread its root in the state is also to be noted. BJP, as a political party, has a fondness for star power for pulling in votes - Hemamalini and Chatruhan Sinha being the examples.

ரஜினி ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது - சத்ருகன் சின்ஹா தகவல


ரஜினி ரசிகர்களுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது என்று ரஜினியின் நெருங்கிய நண்பரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா கூறியிருக்கிறார்.
ரஜினி ஒரு பொது சொத்து; இனி ஒரு கூண்டுக்குள் அடைக்க முடியாது
சொந்த அலுவல் காரணமாக சென்னை வந்துள்ள சத்ருகன் சின்ஹா சனிக்கிழமை சூப்பர் ஸ்டாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பேச்சின் விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்ட சத்ருகன் சின்ஹா “ரஜினி தற்போது, தனது தனிமையை போற்றும், தக்கவைத்துக் கொள்ளும் நிலையை தாண்டிவிட்டார். அவர் இப்போது ஒரு பொது சொத்து. ஒரு கூண்டுக்குள் இனி அவரை அடைக்க முடியாது. தமிழக மக்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது.
தற்போதைய கவனம் எந்திரனில் தான்
தீவிர அரசியலை பற்றி ரஜினி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாக பி.ஜே.பி.யின் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார். “ஆனால் தற்போது நடித்து வரும் எந்திரனில் ரஜினியின் தற்போதைய கவனம் இருக்கிறது.”
அரசியலுக்கு வருவதற்கு முன்பு, ரஜினி மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்
ரஜினிக்கு ஏதாவது ஆலோசனை கூற விரும்புகிறீர்களா என்று சின்ஹாவிடம் கேட்டபோது, ஆந்திரதிதில் அரசியல் பிரவேசம் செய்திருக்கும் நடிகர் சிரஞ்சீவி தற்போது சந்தித்துவரும் சவால்களை சுட்டிக் காட்டிய அவர், ரஜினி நேரடி அரசியல் பிரவேசம் செய்வதற்கு முன்பு, மக்களிடம் சமூக ரீதியிலான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கருத்து தெரிவித்தார். (சூப்பர் சத்ருகன் சார். நல்ல, சமயோசித யோசனை!! ரஜினி ரசிகர்கள் சார்பாக தங்களுக்கு மிக்க நன்றி.)

தலைவர் எப்போதோ ரெடி; நீங்கள் ரெடியா?


சூப்பர் ஸ்டாரின் ரசிகர் சந்திப்பு குறித்து பல்வேறு ரசிகர்களுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிவருகிறேன். சந்திப்பு ஒவ்வொருவரையும் சென்றடைந்திருக்கும் விதம், எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், சந்திப்பு அவர்களுக்கு சொல்லும் சேதி என்ன என்று அறியமுற்படும்போது அந்த பிரமிப்பு இன்னும் பல மடங்கு கூடுகிறது.
ரசிகர்களின் பார்வை குறித்தும், சந்திப்பு குறித்து அவர்கள் நினைப்பது என்ன என்பது குறித்தும் அவ்வப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
தலைவர் எப்போதோ ரெடி; நமக்காகத்தான் காத்திருக்கிறார்
தென் மாவட்ட மன்ற பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது அவர் கூறிய கருத்து என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. “தலைவர் எப்போதோ அரசியலில் நுழைவதற்கு தகுதி, அனுபவம் ஆகியற்றை பெற்றுவிட்டார், அவர் காத்திருப்பது நாம் தகுதி பெறுவதற்கு தான். தான் மட்டும் சுத்தமாக இருந்து பயனில்லை. தன்னை சார்ந்தவர்களும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதை தான், அவர் என்னிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள் என்று கூறியிருக்கிறார். இப்படி அவர் கூறியிருப்பதால் பொருளாசை உள்ளவர்கள் அனைவரும் தாமாகவே வெளியேறிவிடுவர். மீதமிருப்பவர்கள் ஓரளவுக்கு அப்பழுக்கற்றவர்களாக இருப்பார்கள். அவர்களை பயிற்றுவிப்பது எளிது!” - எவ்வளவு உண்மை!! இந்திய அரசியல் வரலாற்றில் “என்னிடம் பணம் எதிர்பார்க்காதீர்கள்” என்று அறிவித்த ஒரே தலைவன் சூப்பர் ஸ்டார் மட்டுமே.
ரஜினியைப் பொறுத்தவரை தலைமைப் பதவிக்கு எப்போதோ தகுதி பெற்றுவிட்டார். மேலும் இந்த பன்னிரண்டு வருடங்கள் அவரை நன்கு பக்குவப்படுத்தியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளின் மீட்டிங்குகளுக்கு மாறுவேடங்களில் சென்று, அங்கு பேசப்படுபவற்றை உற்று கவனித்து வந்துள்ளார். மக்கள் அதற்க்கு காட்டும் ஒவ்வொரு ரிஆக்க்ஷனும் ரஜினிக்கு அத்துப்படி.
தலைவர் ஒதுங்கியிருந்தார்; உதறியிருந்தார். ஆனால் ஒருபோதும் உறங்கிவிடவில்லை.
(முதல்வர் பதவிக்கு அவர் முழு தகுதி பெற்றுவிட்டார் என்றும் குசேலன் பிரச்னையை சிறிதும் பதட்டப்படாமல் டிப்ளோமேடிக்ககாக அவர் தீர்த்த விதத்தை பற்றியும் ஒரு தனி பதிவே நான் அளித்தேன், நினைவிருக்கிறதா?)
http://www.rajinispecial.blogspot.com/
தன்னிடம் பதவி தானாக தேடி வந்தபோதே, அடுத்தவர்களின் வெற்றியில் தான் ஷீல்ட் வாங்க மறுத்தவர், அரசியல் பிரவேசம் குறித்து, இப்போதும் நிதானமும் பக்குவமும் காட்டி வருவது மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒன்றிரண்டு படம் ஹிட் கொடுத்த நடிகர்கள் கூட, நான் தான் அடுத்த முதல்வர் என்று விளம்பரங்கள் கொடுக்கும் இந்த காலத்தில் ரஜினியின் இந்த பக்குவம் ராமதாசை கூட கவர்ந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. நாளை ஒருவேளை அவர் அரசியலில் பிரவேசித்தாலும், ரஜினிக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது, சிரஞ்சீவியை பார்த்து அவர் அரசியலில் குதிக்கிறார் போன்ற வாதங்கள் மக்களிடம் எடுபடாது.
ரஜினி சாமர்த்தியமாக அது போன்ற வாதங்களுக்கு இப்போதே வைத்துவிட்டார் ஆப்பு.
குமுதம் சூப்பர் ஸ்டாரின் சமீபத்திய ரசிகர் சந்திப்பை பற்றி அருமையான சுருக்கமான கட்டுரை வெளியிட்டுள்ளது. கீழே அதை ஸ்கேன் கட்டிங்காக தந்திருக்கிறேன்.
ரசிகர் சந்திப்பு குறித்து பதிவுகள் இன்னும் வரும், வந்துகொண்டேயிருக்கும்.

தங்கத்தை உரசுங்கள்…. தலைவனை அல்ல!!


இயக்குனர் ஸ்ரீதரின் மறைவிற்கு ஏன் சூப்பர் ஸ்டார் போகவில்லை, அவர் போயிருக்கவேண்டும் என்று என்னிடம் சில நண்பர்கள் வருத்தப்பட்டதும், அவர்களுக்கு நான் கூறிய பதிலும் உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=449064&disdate=11/8/2008
இதோ, நேற்று சென்னை பிலிம் சேம்பரில் நடைபெற்ற இயக்குனர் ஸ்ரீதரின் அஞ்சலி நிகழ்ச்சிக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய சூப்பர் ஸ்டார் உருக்கமான உரை ஒன்றையும் அவர் ஆற்றியிருக்கிறார். மேலும், “ஸ்ரீதரின் இறுதி அஞ்சலிக்கு சில காரணங்களால் நேரில் செல்லமுடியவில்லை. அதற்காக வருத்தப்பட்டேன். அடுத்த நாள் நேரில் சென்று அவரது வீட்டாரிடம் துக்கம் விசாரித்தேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“தலைவரை உரசிப்பார்த்துவிட்டேன்… ரியல்லி ஸாரி“
அன்று என்னிடம் இது குறித்து, அவசரப்பட்டு கருத்துக்கள் வெளியிட்ட நண்பர், இன்று காலை இதை பேப்பரில் படித்துவிட்டு, எனக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ். இது - “Just saw the paper and stunned on thalaivar’s speech in Sreedhar’s funeral meeting. Thalaivaa, i misunderstood you. We have see actors in humans. But you are the only human among actors.”
குசேலனின் சுந்தர்ராஜன் கேரக்டர் தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. நேற்று கூட மும்பையிலிருந்து ஒரு ஆர்.எஸ் நம்மிடம் வந்து சேர்ந்தார். (ராமதாஸ் அல்ல. நம் ரசிகர் ஒருவர் ). இன்று இவர்.
சங்கநாதன் rajinifans.com இல் கூறியிருப்பதைபோல, இந்த சீசன் சுந்தர்ராஜன்களின் சீசன் போலும்… அடுத்து யாருப்பா?

ஒபாமா வெற்றி நமக்கு கூறும் சேதி என்ன?


அமெரிக்காவின் முதல் கறுப்பர் இனத்தை சேர்ந்த அதிபர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ஒபாமா. இந்த வெற்றி அவருக்கு எளிதில் கிட்டவில்லை. தனக்கு எதிரான துவேஷப் பிரச்சாரங்கள் அனைத்தையும் தனது பொறுமையாலும், சகிப்புத்தன்மையாலும், வென்று, தடைக் கற்களையே படிக்கற்களாக்கி காட்டியுள்ள ஒபாமா, ரஜினி நாளை தமிழகத்தில் பெறப்போகும் சரித்திர வெற்றிக்கு ஒரு முன்னோடி என்றால் மிகையாகாது.
அணுகுமுறையால் வென்ற ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு கட்டத்தில் அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவரது சொந்தக் கட்சியினர் உட்பட அனைவரும் அவரது இனத்தை சுட்டிக்காட்டி, நிறவெறியை தூண்டும் வண்ணம் பேசினர். அப்படியிருந்தும் தனது அணுகுமுறையால் அதை தகர்த்து வெற்றிக் கனியை பறித்துள்ளார் ஒபாமா.
எனக்கு தெரிந்து தேர்தல் பிரசாரத்தின் போது, தான் செய்யப் போகும் பணிகள் பற்றி தான் அவர் அதிகம் பேசினாரே தவிர யாரையும் அவர் தாக்கி பேசவில்லை, குற்றம் கூறவில்லை.
இந்த மாபெரும் வெற்றியை தன் தலைக்கு ஏற்றிக்கொண்டதாக தெரியவில்லை.
யாராவது நினைத்துப் பார்த்ததுண்டா?
ஒரு மூன்று வருடங்களுக்கு முன் இதை யூகித்தவர் யாராவது உண்டா? ஏன் இரண்டு வருடங்களுக்கு முன்பு? ஒரு கறுப்பினத்தவர் அமெரிக்க அதிபராவார் என்று யாராவது சொல்லியிருந்தால் நாம் எள்ளி நகையாடியிருப்போம். ஏனெனில், அமெரிக்காவில் நிறவெறி அந்தளவு தலைவிரித்தாடியது. ஆனால் அவரோ குறை கூறும் அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு வெள்ளையர்களும் பெருவாரியாக தனுக்கு வாக்களிக்கும்படி தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டார்.
இறைவன் என்ற ஒருவன்….
இவரது போட்டியாளராக ஹில்லாரி அறிவிக்கபட்டபோது, அவர் தான் வெற்றி பெறுவார் என்று அனைவரும் கருதினர். அதற்கேற்றாற்போல், அவர் ஒபாமாவுக்கு கடும்போட்டியை ஏற்படுத்தினார். இருப்பினும், இறைவன் விருப்பப்படி தானே அனைத்தும் நடக்கும்? அவனல்லவா, யாரை எங்கு எப்போது வைக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறான்…இதோ ஒபாமா வெற்றிபெற்றுவிட்டார். அவர் வெற்றி பெற்றிருப்பது அமெரிக்காவிலேயே இன்னும் பலருக்கு நம்பமுடியவில்லை. (இந்திய தொழில் துறையை பாதிக்காத அளவு, இவர் தனது தொழில் கொள்கைகளை வகுக்கவேண்டும் என்று அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்).
அமெரிக்காவிலேயே அந்த அதிசயம் நடக்கும்போது தமிழகத்தில் ஏன் நடக்காது? (இனி ஒபாமாவை தங்களுடன் ஒப்பிட்டு லெட்டர் பேட் கட்சி நடிகர்கள் உட்பட உப்புமா நடிகர்கள் கூட பேட்டியளிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்).
தமிழ் நாட்டு ஒபாமா
ஒபாமாவுக்கு எதிராக இனவெறி கட்டவிழ்த்து விடப்பட்டதைபோல, சூப்பர்ஸ்டாருக்கு எதிராகவும் இனவெறி கட்டவிழ்த்துவிடப்படுகிறது. ஒபாமாவின் அறிவுப்பூர்வமான, அணுகுமுறையில் குறை காணமுடியாதவர்கள் அவரது இனத்தை தான் கடைசியில் சுட்டிக்காட்டினர். அதையும் அவர் இன்முகத்தோடு வென்றார்.
சூப்பர் ஸ்டாருக்கு அப்படியேதான். அவரை, அவரது செயல்களில் குற்றம் காணமுடியாதவர்கள் கடைசியில் கையில் எடுக்கும் ஆயுதம் - கன்னடன். ஆனால் அவரோ, அது குறித்து பொருட்படுத்துவதுகூட இல்லை. சுத்த தமிழனாக ரசிகர் கலந்துரையாடலைக் கூட தமிழ் தாய் வாழ்த்து பாடி தான் ஆரம்பிக்கிறார். (எத்தனை பேருக்கு இது தெரியும்?)
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்…
சூப்பர் ஸ்டார் ஜஸ்ட் ஒரு உண்ணாவிரத உரையின் மூலமும், ரசிகர் சந்திப்பின் மூலமும், முன்பிருந்ததைவிட பன்மடங்கு புகழ் பெற்றுவிட்டா. மக்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு இடம் பிடித்துவிட்டார். யாரையும் குறைகூறாமல், கோபப்படாமல், சிக்கலான, தர்மசங்கடத்தை தரக்கூடிய கேள்விகளுக்கு கூட சிரித்துகொண்டே, அறிவுப் பூர்வமான பதில்களை அவர் கூறியவிதத்தை கண்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை எனலாம். இப்படிப்பட்ட மாணிக்கத்தை கையில் வைத்துக்கொண்டு, கரித்துண்டை அல்லவா வைரம் என்று நாடிக்கொண்டிருக்கிறோம் என்று மக்களுக்கு புரிந்துவிட்டது. இனி அந்த நடிகர் குட்டிக்கரணம் அடித்தாலும் பப்பு வேகாது.
“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்; ஆனா கைவிடமாட்டான்” - பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டிய எழுத்துக்கள்.

விகடன் - பயோடேட்டா


பயோடேட்டா
பெயர் : விகடன்
புதிய பெயர் : விக்காதவன்
வயது : தள்ளாட ஆரம்பித்துவிட்டது
பழைய தொழில் : பத்திரிகை நடத்துவது
புதிய தொழில் : மஞ்சள் பத்திரிகை நடத்துவது
உப தொழில் : பத்திரிகை தர்மத்தை விற்பது
ஒரே கஸ்டமர் : விஜயகாந்த்
நண்பர்கள் : பிச்சை போடுபவர்கள்
எதிரிகள் : பிச்சை போடாதவர்கள்
நம்புவது : பணம், கவர் (பெட்டி) கொடுப்பவர்களை
நம்பாதது : வாசகர்களை
ஒரே இலக்கு : நம்பர் 1
ஒரே பயம் : 3 ம் இடமும் ஆட்டம் காண்பது
ஒரே நம்பிக்கை : ரஜினியை பற்றிய செய்திகள்
சமீபத்திய எரிச்சல் : ரஜினியின் பேட்டியால் குட்டு உடைந்தது
சமீபத்திய மூக்கறுப்பு : ரிப்போர்டரில் சீமான் பேட்டி
விரும்புவது : அழைக்காமலே எங்கும் செல்வது
வெறுப்பது : எழுதுவது எதுவும் எடுபடாமல் போவது
ஒரே ஆறுதல் : மதன் பதில்கள்
ஒரே சந்தோஷம் : வாசன் பப்ளிகேஷன்ஸ் என்னும் பெயரில் குப்பை கொட்டுவது
சமீபத்திய சமாளிப்பு : விற்பனை குறைந்தவுடன் சைஸை மாற்றுகிறேன் பேர்வழி என்று வாசகர்களிடம் (இளிச்சவாயர்களிடம்) மேலும் ஐந்து ரூபாய் பிடுங்கியது.
பழைய போட்டியாளர் : குமுதம்
சமீபத்திய போட்டியாளர் : நக்கீரன், நெற்றிக்கண், மன்மத விருந்து etc.,
ஒரே சாதனை : விகடன் என்னும் பாரம்பரியத்தின் பெயரை நாசமாக்கியது
…………………………………………………………………………………………………………………
கருத்து: மனோகரன், திருப்பூர்லோகோ

“ரஜினி என்ற மாவீரன் போற்றப்படவேண்டும்; தூற்றபடக்கூடாது” - ஆபாச.விகடனுக்கு பதிலடி




நான் ஏற்கனவே எச்சரித்திருந்த படி, சூப்பர் ஸ்டாரின் உண்ணாவிரததையும், அவரது சமீபத்திய ரசிகர் சந்திப்பையும் கொச்சை படுத்தி, தூ.வி.யும், இன்று வெளிவந்துள்ள ஆபாச.வியும் கட்டுரைகள் எழுதியுள்ளன.
விமர்சனங்களை வரவேற்கும் ரஜினி - விமர்சிக்க இவர்களுக்கு தகுதியுண்டா ?
சூப்பர் ஸ்டார் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர் அல்ல. அவற்றை அவர் வரவேற்றே வந்துள்ளார். விமர்சனங்களை பொறுத்தவரை, அவர் எவ்வளவோ பார்த்துவிட்டார். அவைகள் அவருக்கு உரமிட்டிருக்கின்றனவே தவிர, அவரை வேறு ஒன்று செய்யமுடியவில்லை. அவரும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளுக்கு எதிராக கூட இதுவரை பேசியதில்லை.
நிலைமை இப்படி இருக்க, அவரைப்பற்றி யாராவது எழுதினால், என் பொருட்படுத்துகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். வாஸ்தவம்தான். அப்படி எழுதுபவர்களது நோக்கம் தான் நம்மை சினங்கொல்லச் செய்கிறது. ஒரு விமர்சகனாக அனைவரையும் விமர்சித்துவிட்டு ரஜினியையும் விமர்சித்து எழுதினால் ஒ.கே. ஆனால், நம் விமர்சகர்கள் அப்படியா?
ஞானசூன்யத்துக்கு ஒரு கேள்வி
ஏதோ தான் நடுநிலையாளன் என்பது போல் காட்டிக்கொள்ளும் ஞானி, மற்றவர்களைவிட்டுவிட்டு, திரும்ப திரும்ப தி.மு.க. தலைவரையும், ரஜினியையும் மட்டுமே மட்டமாக விமர்சிப்பது ஏன்? அரசியல் கட்சி தலைவராக நாளொரு காமெடி காட்சி அரங்கேற்றி வரும் விஷகாந்தையும், பொறுப்புள்ள எதிர்கட்சி தலைவராக முழுதும் பரிணமிக்காத ஜெயலலிதாவையும் இவர் விமர்சிக்க மறுப்பது ஏன்? அவர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களா? அல்லது அவர்கள் விமர்சிக்க கூடிய எதையும் செய்யவேயில்லையா? விஷகாந்தின் மாநாட்டு குளறுபடிகளையும், பொதுமக்களே முகம் சுளித்த ஆடம்பரத்தையும், அதற்காக அவரது தொண்டர்கள் பணத்தை தண்ணீராக வாரியிரைத்ததைப் பற்றியும் சிங்கார சென்னை அதனால் நாறியதையும், மாநாட்டு உரையில் வெளிப்பட்ட விஷகாந்தின் அரவேக்காட்டுதனமான, சுயநலம் கொண்ட, உரையை ஏன் விமர்சிக்கவில்லை? ‘ஐயோ’ பக்கங்களில் ஏன் குட்டவில்லை?
ஒருவர் பெட்டி தருகிறார். மற்றவர் இவரது வக்கிரத்தை தொலைக்காட்சியிலும் கொட்ட ஸ்லாட் (ஜெயா.டி.வி.) தருகிறார். இது தான் இவனது நடுநிலையின் லட்சணம்.
ஞானி, விகடன், தினமலர் ஆகிய இந்த ஓநாய்கள், விஷகாந்தை வளர்த்துவிடவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ரஜினியை தரக் விமர்சிப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ரஜினி மீது ரசிகர்களுக்கு விரக்தி வர வேண்டும், வெறுப்பு வர வேண்டும், அது விஷகாந்துக்கு ஆதரவாக மாறவேண்டும் - இவர்களது லட்சியம், நடுநிலைமையின் லட்சணம். (ஹொகேனக்கல் வருத்த சர்ச்சையில், “இனி ரஜினி சூப்பர் ஸ்டார் அல்ல” என்றான் இந்த ஞானி) ரசிகர்கள் இவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடக்கூடாதே என்று தான் நான் நண்பர் வினோ ஆகியோர் விஷகாந்துக்கு எதிரான பதிவுகளை போட்டோம்.
விகடனுக்கு சினிமா எக்ஸ்பிரஸ் சரியான பதிலடி
மேட்டருக்கு வருவோம். இன்றைக்கு வெளியாகியிருக்கும் ஆபாச.விகடனின் கட்டுரைக்கு தக்க பதிலடி தருவது போல் யதார்த்தமாக அமைந்துவிட்டது நான் இந்த பதிவில் இணைத்திருக்கும் சினிமா எக்ஸ்பிரஸ் கட்டுரை. சிருவும், இந்திரனும் என்கின்ற அருமையான ஒரு கட்டுரை எழுதியிருந்த நரேந்திரா கமல்ராஜ் என்பவர் தான் இதையும் எழுதியுள்ளார். ரசிகர்களின் அரசியல் எதிர்ப்பார்ப்புகளுக்கு ரஜினி காரணமல்ல என்று இந்த கட்டுரை சொல்கிறது. அவரை அரசியலிலிருந்து அந்நியப்படுத்திக் காண்பித்தாலும், ஆண்டவன் என்கின்ற பெரும் சக்திக்கு அவர் கட்டுப்பட்டவர் என்று கூறுகிறது இந்த கட்டுரை. ஒரு சில இடங்களில், ரஜினியை விமர்சித்து அவரை குறை கூறியிருப்பதே இது நடுநிலையாக எழுதப்பட்டுள்ளது என்பதற்கு சாட்சி. கட்டுரையாளருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
கட்டுரையின் கடைசி வரிகள் தான் விகடனுக்கு பதிலடி:“ரஜினி என்கின்ற சுத்த வீரன், போற்றத்தான் பட வேண்டுமேயொழிய, தூற்றப்படக்கூடாது.”
(நண்பர் ஈ.ரா. கூறியதைப் போல இறைவன் போட்ட விதைக்கு மழை தானாகவே கிடைக்குது பார்த்தீர்களா?)

ரஜினியின் ரசிகர் சந்திப்பால் புஸ்வானமான விஷகாந்த் மாநாடு - FansMeet Coverage




பொதுமக்களிடம் சூப்பர் ஸ்டாரின் இந்த சந்திப்பு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்துகொள்ள இப்போது நான் முயற்சித்துவருகிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நம் நண்பர்களிடம் இது குறித்து பேசி தகவல்களை சேகரித்து வருகிறேன்.

கோடிகள் சாதிக்காததை எளிமை சாதித்தது
நம் வலைத்தளத்தின் ரெகுலர் விசிட்டர்/என் நண்பர் ஒருவரிடம் சந்திப்பு குறித்து பேசிக்கொண்டிருந்த போது அவர் கூறியது:“நான் அலுவலகம் செல்லும் கேப் (cab) ஓட்டுனர், எப்போதும் ரஜினியை கிண்டலடித்துக்கொண்டும் கேலிசெய்துகொண்டும் இருப்பார். இந்த பேட்டி குறித்து பேச்சு எழுந்தபோது, அவர் கூறியது எனக்கு பெரிய ஆச்சரியம். ‘இந்த ஆள் எப்போ அரசியலுக்கு வந்தாலும் ஈஸியா ஜெயிச்சுடுவார் போலிருக்கே…’ என்று கூறினார் சுந்தர். எனக்கே மிகவும் ஆச்சரியம். அவர் இப்போது அப்படி கூறுவதற்கான காரணத்தை நான் ஆராய்ந்தபோது தான் புரிந்தது அந்த பேட்டியை பற்றி அந்தளவு அவருக்கு “feedback” கிடைத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து மக்கள் மத்தியில் கொண்டு வர முடியாத மன மாற்றத்தை தலைவரின் இந்த எளிமையான ரசிகர் சந்திப்பு சாதித்துவிட்டது. அந்த அளவு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் விஷ காந்தின் மாநாடு புஸ்வானம் ஆகிவிட்டது” என்றார். மனதிற்குள் உற்சாகம் பீரிட்டெடுத்தது.
பிறகு இன்று காலை, ஒரு வாரமிருமுறையை புரட்டியபோது, நண்பர் கூறிய கருத்து அதை உறுதி செய்தது. (ஸ்கேன் இணைப்பில் காண்க). படித்துவிட்டு, என்னடா இந்த பத்திரிகையில் இப்படி ஒரு ரஜினி ஆதரவு செய்தி என்று யோசிக்க வேண்டாம். ரஜினி ரசிகர்களின் பிரவாகத்தை எதிர் காலத்தில் கலைஞருக்கு பிறகு அறுவடை செய்யவேண்டாமா? அந்த சுயநலம் தான் இந்த பத்திரிக்கைக்கு.
இது ஆண்டவனால் தூவப்பட்ட விதை. இதற்க்கு பெருமழை தானாக கிட்டும் என்ற நண்பர் ஈ.ரா.வின் கூற்று இவ்வளவு சீக்கிரம் பலிக்கும் என்று நானும் எதிர்ப்பார்க்கவில்லை.
குறிப்பு:ஆலமரமும், தோட்டக்காரனும்…
ஒரு ஆர்வத்தாலும் தலைவரின் மேல் உள்ள பற்றினாலும் நான் ஆரம்பித்த ஒரு சாதரண blog, உங்கள் ஆதரவால் எதிர்பாராதவிதமாக இன்று onlyrajini.com என்னும் ஒரு பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. இந்த தோட்டக்காரன் அதை பராமரிக்க மிகவும் திண்டாடுகிறேன். அதைத்தான் நான் முந்தைய பதிவுகளில் ஒன்றில், என் பிரச்னை என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு இருந்த மனநிலையில் நான் அப்படி கூறிவிட்டேன். அது தவறு என்று பிறகுதான் எனக்கு புரிந்தது. நானும் ஒரு சாதாரண மனுஷன் தானே?
இத்துடன் இந்த டாபிக்கை முடித்துவிட விரும்புகிறேன். எனவே இதுகுறித்து, என்னை தொடர்புகொள்ள விரும்புபவர்கள், எனது இ-மெயிலில் மட்டுமே தொடர்புகொள்ளவும். தயவுசெய்து யாரும் இங்கு பின்னூட்டம் இட வேண்டாம். எதுவாயினும் என்னை simple_sundar@yahoo.com இல் தொடர்பு கொள்ளவும்.
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி,

காற்று போன பலூன் ஒரு மாநில முதல்வரை விஞ்சிய அதிசயம


ரஜினியின் துணிவு கருணாநிதிக்கு இல்லை - டாக்டர் ராமதாஸ்
“ரஜினி இப்போது ஒரு காற்று இறக்கப்பட்ட பலூன். நான் அதில் ஊசியை குத்திவிட்டேன். தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறேன் என்று சொன்ன ஒரு நடிகரை மக்கள் முக்காடு போட்டு மூலையில் உட்கார வைத்துவிட்டார்கள்.” - சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டாரைப் பற்றி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொன்னது இது.

“நட்சத்திர உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினி ஆற்றிய உரை பாராட்டத்தக்கது. அவரது துணிச்சலை கண்டு வியந்தேன். அவரது பேச்சு, ஈழத்தமிழர்கள் பட்ட வழிகளுக்கு ஒத்தடம் இடுவதாக அமைந்தது. மொத்தத்தில் ஈழத்தமிழர் பிரச்னையில் ரஜினி காட்டிய துணிச்சல் கருணாநிதியிடம் இல்லை.” -இந்த இதழ் தூ.வி.யில் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது.
காற்று போன பலூன், ஒரு மாநில முதல்வரை விட சிறந்த ஒன்றாக மாறிய அதிசயத்தை நிகழ்த்தி காட்டியுள்ளது காலம். இன்னும் என்னென்ன அதியசயங்கள் நடக்குமோ?
தூ.விகடனின் கீழ்த்தரமான செயல்
ராமதாசின் மேற்படி பேட்டியை கவர் ஸ்டோரியாக “ரஜினியின் துணிச்சல் கருணாநிதிக்கு இல்லை” என்னும் தலைப்பில் தூ.வி. வெளியிட்டுள்ளது. அதை கண்டு எங்கே இந்த வக்கிர கும்பல் மாறிவிட்டதோ என்று என்ன வேண்டாம்.
அங்கே தான் இருக்கு விஷயமே. அதே இதழில் அட்டையை திரும்பியவுடன் முதல் பக்கத்தில் “அரசியலில் ரஜினி - தீராத முப்பது வருபட்ட குழப்பம்” என்னும் ஒரு விஷமத்தனமான தலைப்போடு, சூப்பர் ஸ்டாரின் உணர்ச்சிகரமான, உணர்வுபூர்வமான இலங்கைத் தமிழ் ஆதரவு உண்ணாவிரதத்தை, அவரது ஆவேச உரையை - உள் அர்த்தம் கற்பித்து - நான் ஏற்கனவே கணித்தபடி - கொச்சைபடுத்தி கட்டுரை வெளியிட்டுள்ளது தூ.வி.
விற்பனை தந்திரம்
இதற்க்கு காரணத்தை நான் சொல்லவும் வேண்டுமோ? ரஜினிக்கு கிடைத்துள்ள எதிர்பாராத இந்த அமோக மக்கள் ஆதரவு விஷகாந்தின் வாய்ப்புகளை தடுக்கும் என்பதால் தான். விஷகாந்தை சில பல சொந்த காரணங்களுக்காக இந்த தூ.வி. கும்பல் தூக்கி பிடிப்பது தான் உங்களுக்கு தெரியுமே. இப்படி ஒரு ரஜினி எதிர்ப்பு கட்டுரை மக்களை சென்று சேரவேண்டாமா? இந்த தூ.வி கருமத்தைதான் வாங்குபவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்களே. எனவே, அவரசர அவசரமாக டாக்டர் ராமதாசை அணுகி, ஒரு பேட்டி எடுத்து, அதில் கடைசி கேள்வியாக கலையுலகின் இலங்கைத்தமிழர் ஆதரவு உண்ணாவிரதத்தை பற்றி கேட்டு, அதற்க்கு ரஜினியின் துணிச்சலை தொடர்புபடுத்தி பதிலும் பெற்றுவிட்டனர். அதை கவர் ஸ்டோரியாக வைத்து வாங்குபவர்களை இழுத்து இளிச்ச வாயர்களாக்குவதுதான் இந்த தூ.வி. கும்பலின் நோக்கம்.
வரவிருக்கும் தூ.வி. குழும வார இதழிலும் சூப்பர் ஸ்டாரை மிகவும் விமர்சித்து அவரது நல்ல செயல்களுக்கு உள் அர்த்தம் கண்டுபிடித்து ஒரு கட்டுரை வெளியாகவிருப்பதாக அறிகிறேன்.
தூ.வி. கும்பலை காலம் புரட்டிப் போடும் நாள் விரைவில் வரும். அன்று எனக்கு நினைவூட்டுங்கள்.

சூப்பர் ஸ்டாரின் புதிய ருத்ராக்ஷ மோதிரம் - சில தகவல்கள




சமீபத்தில் நடந்த நட்சத்திர உண்ணாவிரதத்திலும் ரசிகர்கள் சந்திப்பிலும், ரஜினியை சந்தித்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது, அவர் அணிந்திருந்த ருத்ராக்ஷ மோதிரம்.
பெரிய சைசில் இருந்த அது, சூப்பர் ஸ்டாரின் கம்பீரமான கரங்களுக்கு மேலும் மெருகை கூட்டியுள்ளது என்றால் மிகையாகாது.
ருத்ராக்ஷத்தில் பல வகைகள் உள்ளன. அதை அணிவதால் பல நல்ல பலன்கள் உண்டு. சனி தசைக்கும் ருத்ராக்ஷத்துக்கும் அநேக தொடர்புகள் உண்டு. இது பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அதையெல்லாம் குமுதமும், குங்குமமும் பார்த்துகொள்ளும்.
சுருக்கமாக இங்கு கூறுகிறேன்.

ருத்ராக்ஷத்தை தூய, கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர்களே மோதிரமாகவோ அல்லது ப்ரேஸ்லெட்டாகவோ உபயோகிக்கவேண்டும். இல்லையெனில் அது எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
மருத்துவ ரீதியாக கைகளில் இருந்து செல்லும் நரம்புகளுக்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மூளையின் இயக்கத்தை அவை வெகுவாக கட்டுபடுத்தும். நம் சிந்தனைகளை ஒரு முகப்படுத்தி நம் நோக்கத்தை அடைய அதற்க்கு இந்த ருத்ராக்ஷ மோதிரம் மிகவும் துணைபுரியும்.
ஜாதக ரீதியாக கடும் தசையில் இருப்பவர்கள் உரிய ஆலோசனை பெற்று அதற்கேற்றார் போல் இதை அணிவது, அவர்களது கஷ்டத்தை குறைக்கும். துன்பங்கள் அகலும்.
ருத்ராக்ஷம் அணிந்த நேரம் சூப்பர் ஸ்டாருக்கு எல்லாம் நல்லபடியாக நடந்து வருவது போல் எனக்கு தோன்றுகிறது. (இது நம்ம கண்டுபிடிப்பு!! ஹி…ஹி…)
குறிப்பு 1:
ஜஸ்ட் ஒரே மாதிரி போய் எனக்கும் போரடித்துவிட்டது. அதனால் இது ஒரு வித்தியாசமான முயற்சி. இந்த பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறதா என்று கூறவும் ?
குறிப்பு 2:
தீர்க்கதரிசனம்
முந்தைய பதிவில் நான் கூறிய என் பிரச்னையை பற்றி என் நண்பர்களிடம் இருந்து சில ஆலோசனைகள் வந்துள்ளன. அவற்றை பரிசீலித்து பெரும்பாலனவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நியாயமான ஒரு தீர்வை விரைவில் எட்டுவோம் என்று நம்புகிறேன். இது குறித்து தங்கள் கருத்துக்களை நீங்கள் தாராளமாக கமெண்ட்டில் கூறலாம். அப்படி பலர் முன்னிலையில் கூற விரும்பாதவர்கள் - எனக்கு சங்கடம் ஏற்படும் என்று கருதினால் - எனக்கு ஈமெயில் அனுப்பலாம்.
இக்கட்டான இந்த நேரத்தில் எனக்கு என்ன உதவிகள தேவைப்பட்டாலும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ள நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
கடந்த சில ஆண்டுகளாக நான் செய்யும் இந்த பணியின் பலன்களை பற்றி அணுவளவு கூட நான் யோசித்தது இல்லை. ஆனால் இன்று அது குறித்து யோசித்து ஒரு நல்ல தீர்வை எடுக்கவேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலை எனக்கு. அப்போது தான் நம் பயணத்தை தொய்வின்றி தொடரமுடியும். வெற்றிக் கோட்டின் அருகே வந்து துவண்டு போவது விவகமல்ல. இதை ஒரு பெரிய குடும்பமாக நான் உணர்கிறேன். தலைவர் பல விஷயங்களை சூசகமாக அறிவித்திருக்கும் இந்த இனிய பொழுதில் நம் எல்லாரது பொறுப்பும் முன்னை விட அதிகமாகிவிட்டது. (அவரவர் சொந்த கடமையும் உண்டு - அது தனி.) எல்லாம் கைகூடி வரும் இந்த பொழுதில் அற்ப காரணங்களுக்காக நாம் நம் பயணத்தை ஏன் தடைப்படுத்திகொள்ளவேண்டும் என்ற சிந்தனையே இப்போது என்னை ஆக்ரமித்துள்ளது.
நண்பர் ஈ.ரா. ஒரு பதிவில் கூறிய வரிகளை நமது சபதமாக ஏற்போம்:
//தலைவர் மாதிரியே அவரவர் சக்திக்கு ஏற்ப ஒரு காரியத்தை, சாதிக்கக் கூடிய ஒரு விஷயத்தை டார்கெட்டாக வைத்துக் கொள்ளுங்கள்… தலைவர் சாதிக்கும் நேரத்தில் நீங்களும் ஏதேனும் ஒரு சாதனையை நிகழ்த்தி நெஞ்சை நிமிர்த்திக்க் கொள்ள முயற்சி செய்யுங்களேன்..
குறைந்த பட்சம் நமது நல்ல காரியங்களால் ஒரு பத்து பேராவது நம் மீது நல்ல எண்ணம் கொள்ள உறுதி கொள்வோம்….
தலைவர் சாதிக்கும் நேரத்தில் நானும் என் பர்சனல் வாழ்கையில் (வலைத் தளம் தொடர்பாக அல்ல) ஒரு பெரிய சாதனையை செய்திருப்பேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். (ஜஸ்ட் என் மேல் அக்கறை கொண்டுள்ளவர்களுக்காக இந்த உறுதிமொழி).
நீங்களும், ஒவ்வொருவரும் இது போன்ற ஒரு உறுதிமொழியை எடுக்கவேண்டும் என்று நான் ஆசைபடுகிறேன். தலைவர் ரசிகர் சந்திப்பில் கூறியது அதுதான். இதை தீர்க்கதரிசனமாக கூறிய ஈ.ரா. அவர்களுக்கு என் நன்றி.

கடையடைப்பு தீர்வாகுமா? ரஜினி சொன்ன அற்புதமான யோசனை…




ஏதாவது ஒரு பிரச்னை, போராட்டம் என்றால் நம்மவர்களுக்கு தோன்றும் ஒரே தீர்வு பந்த் மற்றும் கடையடைப்பு தான்.
பந்த் அறிவிக்கப்படும் நாளில், இதனால் விடுமுறை கிடைப்பவர்கள் ஒன்று திரையரங்குகளில் படம் பார்த்துகொண்டோ அல்லது வீட்டில் தூங்கிக்கொண்டோ தங்கள் பொழுதை போக்கி பந்தை அனுஷ்டிப்பர்.

நேற்று தமிழகம் முழுதும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் சங்கத்தினர் முழு கடையடைப்பு நடத்தினர். பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.
இந்த கடையடைப்பால் வியாபார்களுக்கு கோடிகணக்கான பொருள் நஷ்டம், வருவாய் இழப்பு, உற்பத்தி குறைவு, அரசாங்கத்திற்கு பல கோடிகள் வரி இழப்பு - இது தான் இந்த கடை அடைப்பு சாதித்தது.
இதனால் யாருக்கு என்ன பயன்?
சூப்பர் ஸ்டாரின் தொலைநோக்கு பார்வை…
ஆனால், சூப்பர் ஸ்டார் பல ஆண்டுகளுக்கு முன்பே, 1985 பத்திரிகை பேட்டி ஒன்றிலும், அதற்க்கு பிறகு 1995 தூர் தர்ஷன் பேட்டியிலும், இப்படி தங்கள் வேலையை விட்டுவிட்டு, கடையடைப்புகள் நடத்துவதால் யாருக்கு என்ன லாபம்? இல்லை அதன் மூலம் நம் குறிக்கோள் தான் நிறைவேறுகிறதா?
சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதன் மூலம் ஏதாவது பிரயோஜனம் உண்டா? அதற்க்கு பதிலாக, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நம் ஆதரவை தெரிவித்தும், அவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாம் அனைவரும் கருப்பு கொடி குத்தி அவரவர் பணியை செய்வோம். பின்னர் நம் ஒரு நாள் ஊதியத்தை திரட்டி அவர்களுக்கு நிவாரண உதவி அளிப்போம். எதிர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவத்த மாதிரியும் ஆயிற்று, நமது பணியையும் செய்தமாதிரி ஆயிற்று, அரசுக்கும் வருவாய் இழப்பு இருக்காது. நமக்கும் நம்மால் முடிந்ததை செய்தோம், என்ற மன நிறைவும் கிடைக்கும்” என்றார்.
ஒரு வேளை, எதிர்காலத்தில் - எந்த ஒரு பிரச்னைக்கும் - இந்த முறை பின்பற்றப்பட்டால், இதற்க்கு முதலில் குரல் கொடுத்தவர் சூப்பர் ஸ்டார் தான் என்பதை நாம் மறக்கக்கூடாது. அனைவரிடத்திலும் இதை எடுத்துசொல்லவும் நாம் தயங்கக் கூடாது.
(ஞான சூனியமும் குமுதத்தில் இதைத்தான் குமுதத்தில் சமீபத்தில் கூறியிருக்கிறது. ஆனால் தலைவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த யோசனையை கூறினார். சொன்னது ரஜினி என்பாதாலயோ என்னவோ, அதை செய்ய பொறுப்புள்ளவர்கள் தயங்குகின்றனர்.)
குறிப்பு: உண்ணாவிரதம் குறித்த நம் பதிவு, எப்போது வெளிவரும் என்று தெரியாது. சூப்பர் ஸ்டார் வரும் சமயம் அங்கு நேரில் சென்று நடப்பவற்றையும் அவரது உரையையும் கவர் செய்துவர முயற்ச்சிக்கிறேன். அலுவலகத்தில் எனக்கு கிடைக்கும் பர்மிஷனை பொறுத்தது அது. ஆகையால் நண்பர்கள் சற்று பொறுமையாக இருக்கவும்.

ரசிகர்களை சந்திக்கும் சூப்பர் ஸ்டார


ரஜினியின் ரசிகர்களுடனான சந்திப்பு உறுதி செய்யப்பட்டுவிட்டது. வீண் பரபரப்பை தவிர்க்கவும், வேறு சில காரணத்தினாலும் இது தொடர்பான செய்திகளை தவிர்த்து வந்தேன்.

தற்போது முக்கிய நாளிதழ்களே இது குறித்து இன்று செய்திகள் வெளியிட்டுவிட்டதால், நான் இங்கு வெளியிடுகிறேன்.
திங்களன்று முதல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 10 பேர் வீதம் சந்திக்க ஏற்பாடாகியிருக்கிறது. இதற்க்கு மேல் எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை. சந்திப்பு குறித்து நம் நண்பர்கள் அவநம்பிக்கையுடன் கேள்வி எழுப்பும்போதெல்லாம், நான் “நிச்சயம் நடக்கும்” என்று கூறியதை நினைவில் கொள்ளவும்.
இந்த சந்திப்பு இத்தனை தாமதமாக நடப்பதற்கு காரணம் இருக்கிறது. சூப்பர் ஸ்டார் எதை செய்தாலும் அதில் நியாயம் இருக்கும், காரணமும் இருக்கும்.
Deccan Chronicle news on Fans meet
Rajini to finally meet fansBY PEER MOHAMEDCHENNAI
Super star Rajinikanth will give an audience to his fans on Monday to discuss their demand for his political entry. He has promised to meet seven to ten district level office bearers of the fan clubs from 32 districts across the state on Monday morning at his Raghavendra marriage hall here.
“We have been asked to assemble at the marriage hall by 8 in the morning on November 3. He is expected by 10 am. Up to 10 office bearers of the fan clubs from each district will be allowed,” said Mr Om Sekar, Chennai district president of the Rajini fan clubs.
Thanjavur district president Rajini Ganesan also confirmed the development. “Our district fan clubs’ persistent determination has finally yielded its fruits. Today I got a phone call from the headquarters (Chennai) that Rajini sir has agreed for a meeting with district level functionaries of his fan clubs from each district,” he said with enthusiasm.
Sources close to Rajinikanth said the super star would explain his stand on political entry to the fans during the meeting. Though his political entry won’t be immediate, he has agreed to the meeting following constant pressure from key functionaries of the fan clubs across the state.

மகுடங்களையே மறுத்தவருக்கு டாக்டர் பட்டம் ஒரு பொருட்டா?

அவரது சம்பந்தம் துளிகூட இல்லாமலேயே ரஜினியின் தலை உருட்டபடுவது இப்போது வழக்கமாகிவிட்டது.
இந்த விஷயம் எனக்கு முதலிலேயே தெரிந்திருந்த போதிலும், நாமாக இதை என் கூறவேண்டும் என்று நினைத்து தவிர்த்தேன். ஆனால், விஷயம் குறித்து ஒரு சில இடங்களில் கசிந்துவிட்டதால், சில உண்மைகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதாலேயே இந்த பதிவு.

கொடுக்காத ஒரு பட்டம் நிராகரிக்கப்பட்ட பின்னணி
கொடுக்கபடாத ஒரு டாக்டர் பட்டம், ரஜினிக்கு நிராகரிக்கப்பட்டதாம். இது எப்படி இருக்கு?
விஷயம் இதுதான்: மஹாராஷ்ட்ர ரஜினி மன்ற தலைவர் திரு. ஆதிமூலம், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு டாக்டர் பட்டம் தரவேண்டும் என்று, கோரிக்கை விடுத்து அவரது அருமை, பெருமைகள், மற்றும் அவர் திரையுலகில் நிகழ்த்திய பல சாதனைகளை பட்டியலிட்டு இந்தியாவில் உள்ள பல பல்கலைகழகங்களுக்கு கடிதம் எழுதினர்.
காரைக்குடி அழகப்பா பலகலைக் கழகம் மட்டும் இதற்க்கு பதில் அனுப்பியது. ரஜினியின் பயோ-டேட்டா மற்றும் இன்ன பிற விபரங்களை கேட்டிருந்தது அதில்.
ஆதிமூலமும், அதை அனுப்பிவைக்க, விஷயத்தை எப்படியோ மோப்பம் பிடித்த விகடன் குழுமம், விஜயகாந்திற்கு முன்னால், ரஜினி டாக்டர் பட்டத்தை வாங்கிவிட்டால் என்னாவது என்ற பதைபதைப்புடன், சிண்டு முடியும் வேலைகள் பலவற்றை செய்ய, கடைசியில் அழகப்பா பல்கலைக்கழகம் அந்த பரிசீலனையையே டிராப் செய்யுமளவிற்கு போய்விட்டது.
எதிர்ப்பு தெரிவித்த ஜே.கே. ரித்தீஷ் நற்பணி (??!!!) மன்ற தலைவர்
மதுரை மாவட்ட ஜே.கே.ரித்தீஷ் நற்பணி மன்ற தலைவர் சீனிவாசன் என்பவர், ரித்தீஷுக்கு முன்பாக ரஜினிக்கு டாக்டர் பட்டத்தை தர எதிர்ப்பு தெரிவித்து சூப்பர் ஸ்டாரைப் பற்றி தரக்குறைவாகவும், அவதூறாகவும் ஆட்சேபகரமான பல கருத்துக்களை ஒரு வாரமிருமுறை இதழில் கூறியிருக்கிறார். (எல்லார் முறையும் போய், இப்போது ரித்தீஷ் முறையா? அடக் கடவுளே…!!)
கொந்தளித்த ரஜினி மன்றத் தலைவர்
இது குறித்து கருத்து தெரிவித்த மஹாராஷ்ட்ர ரஜினி மன்றத் தலைவரும், ரஜினிக்கு டாக்டர் பட்டம் தர முயற்சி எடுத்தவருமான ஆதிமூலம் கூறுகையில், “ரசிகர்களை எந்த விதத்திலும் சுய லாபத்திற்காக பயன்படுத்தாதவர் ரஜினி. வாழ்வின் அடிமட்டத்திலிருந்து தனது கடும் உழைப்பால் மேலே வந்தவர் ரஜினி. அப்படிப்பட்டவருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதால் அந்த பட்டத்திற்கு தான் பெருமையே தவிர ரஜினிக்கு அல்ல. மேலும் ரஜினியிஜ்ன் வாழ்கை வாழ்வில் முன்னுக்கு வர துடிக்கும் ஒவ்வொருவருக்கும் பாடமாகும். அவரது வரலாற்றை படிக்கும் இளைஞர்களுக்கு வாழ்வில் நாமும் எதையாவது சாதிக்கவேண்டும் என்று உந்துதல் பிறக்கும். இப்படி பட்ட ஒருவருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்ப்பவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. யாருக்கு வேண்டுமானால் டாக்டர் பட்டம் தரட்டும். நாங்க எதிர்க்கவில்லை. ரித்தீஷுக்கு கொடுத்துவிட்டுதான் ரஜினிக்கு கொடுக்கவேண்டும் என்று கூறுவதுதான் தவறு. செந்திலுக்கு டாக்டர் பட்டம் கொடுத்துவிட்டுதான் தமிழக முதல்வருக்கு தரவேண்டும் என்று சொல்வதைப் போல் இருக்கிறது இது,” என்று குமுறித் தள்ளிவிட்டார்.
எதிர்பாராத இந்த சர்ச்சைகளினால், பரிசீலனையில் இருந்த இந்த விஷயத்தையே அழகப்பா பல்கலைக்கழகம் கைவிட்டுவிட்டதாக தெரிகிறது. (அரசியல் நெருக்கடி கூட இருக்க வாய்ப்புண்டு)
இதை முதலில் கேள்விப்பட்ட எனக்கு சிரிப்பு தான் வந்தது.
டாக்டர் பட்டத்தை மறுத்த ரஜினி - வரலாறு கூறும் உண்மை
இது போன்ற பட்டங்களின் மீதெலாம் விருப்பமற்றவர் ரஜினி என்பது உலகம் அறிந்தது.
புதுவை பலகலை கழகம் பத்தாண்டுகளுக்கு முன்பே ரஜினிக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது ரஜினி அதை ஏற்க மறுத்தவிட்டார். “தாங்கள் என் மீது வைத்துள்ள அன்பிற்கும், நன் மதிப்பிற்கும் நன்றி. இருப்பினும் இந்த பட்டத்தை என்னால் ஏற்க இயலாது.” என்று பட்டத்தை மறுத்து ரஜினி புதுவை பல்கலைக்கழகத்திற்கு எழுதிய கடிதம் பற்றிய விபரம் பல்கலைக்கழக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதை பார்த்த மாணவர்களுக்கு ரஜினி மீது நன்மதிப்பு இன்னும் பல மடங்கு கூடியது.
இந்த செய்தி வெளியிட்ட ஜூ.வி, ரஜினிக்கு புதுவை பல்கலைக்கழகம் அளித்த பட்டத்தை அவர் ஏற்க மறுத்த விபரத்தை குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்துவிட்டது.
விஷயம் இப்படியிருக்க ரஜினி ஏதோ டாக்டர் பட்டத்திற்கு அலைந்து அது கிடைக்காமல் போய்விட்டது போல செய்திகள் பரப்பப்படுகிறது.
நன்றி சொல்லுவோம்
கௌரவ டாக்டர் பட்டம் என்பது தகுதியற்றவர்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்டு அதன் தகுதியை அது இழந்து நெடுங்காலம் ஆகிவிட்டது. இந்நிலையில் இத்திட்டத்தை கைவிட்ட அழகப்பா பலகலைகழகத்திற்கு நாம் நன்றி சொல்வோம்.
குறிப்பு: டாக்டர் பெற வேண்டி சுய முயற்சி எடுப்பவர்கள் தான் அநேகம். அனால் இங்கு, அதற்க்கு முயற்சி செய்தவர் ரஜினியோ அவருக்கு நெருக்கமானவர்களோ அல்ல. எங்கோ உள்ள ஒரு ரசிகர்.

கலியுக கர்ணன் சூப்பர் ஸ்டார் - Short Series 1

கர்ணனைப் போல வலது கை கொடுப்பதை இடது கை தெரியாமல் கொடுப்பது சூப்பர் ஸ்டாரின் பாணி. இது தான் அவரது ப்ளஸ் பாய்ண்ட். அதுவே தான் அவரது மைனஸ் பாய்ண்ட்டும் கூட.
ஒரு இஸ்திரிப் பெட்டி கொடுத்துவிட்டு, அதை இரண்டு வாரம் விளம்பரம் செய்யும் இந்த விளம்பர யுகத்தில் விளம்பரங்களை துளியும் விரும்பாமல் அவர் செய்யும் உதவிகள் யாருக்கும் தெரிவதில்லை. இந்த ஒரே காரணத்தினாலேயே, என்ன செய்துவிட்டார் ரஜினி என்று அநேகம் பேர் கேள்வி எழுப்புகின்றனர் - இன்றும் கூட.
“சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு கொடை வள்ளல்” - சத்யராஜ்
கார்கில் நிதியாகட்டும், சுனாமி நிதியாகட்டும், திரைப் படைத்துறையை சேர்ந்த பல்வேறு தொழிலாளர் அமைப்புகளுக்கு அளித்த நிதியாகட்டும், ரஜினியின் பங்கும் அங்கு உண்டு. இதை தவிர்த்து ஆரவாரமின்றி ரஜினி செய்திருக்கும் உதவிகள் நிறைய. இதை நான் கூறவில்லை. புரட்சி தமிழன் சத்யராஜ் தான் கூறினார். வீரா படத்தின் நூற்றைம்பதாவது நாள் விழாவில்.
அந்த விழாவில் கலந்து கொண்ட சத்யராஜ், அப்போது தான் நடித்துகொண்டிருந்த “வீரப் பதக்கம்” படத்தின் போலீஸ் அதிகாரி கெட்டப்பிலேயே இந்த விழாவிலும் கலந்துகொண்டார்.
விழாவில் அவர் சூப்பர் ஸ்டாரை புகழ்ந்து பேசிய பேச்சு இருக்கிறதே…அப்பப்பா…. காமராஜர், அண்ணா, எம்.ஜி.யார் ஆகியோர்தான் அவரை ஒப்பிட்டு புகழ்ந்து தள்ளிவிட்டார். அந்த விழாவில் தான் ரஜினி திரைப் படைத்துறைக்கு செய்த அநேக உதவிகளை பட்டியலிட்டார்.
என்ன செய்வது….அதே சத்யராஜ் தான் கே..கூ…பூ… என்றும் பேசியது. மாடு கெட்டால் தேடலாம்; மனுஷன் கெட்டால்?
ஒ.கே. நாம் நமது மேட்டருக்கு வருவோம்….
இணைக்கப்பட்ட பேப்பர் கட்டிங்கில் நீங்கள் காண்பது சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா உட்பட எண்ணற்ற திரைப்படங்களுக்கு புகைப்பட கலைஞராக பணிபுரிந்த நேஷனல் செல்லையா, ரஜினி பற்றி கூறியது. திரைப் படைத்துறை சார்ந்த ஒருவர் அப்போதே கூறியது இது. சும்மா உங்கள் கவனத்திற்காக. [இது போன்ற பழைய விழாக்கள், மற்றும் சூப்பர் ஸ்டாரின் மேடைப் பேச்சுக்கள், அவரது அறிக்கைகள் ஆகியவை வெளிவந்த செய்தித்தாள்கள் யாரிடமாவது இருக்குமானால், தயவு செய்து என்னை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.sankar713@yahoo.com
Related Posts Plugin for WordPress, Blogger...