No more soundbite please!
தமிழ்நாடெங்கும் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகளை அடுத்த மாதம் சென்னையில் சூப்பர் ஸ்டார் சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகும் நேரத்தில் ரஜினி மன்ற வட்டாரங்களிலிருந்து அதிகாரபூர்வமற்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.ரஜினி மன்ற நிர்வாகிகள், சூப்பர் ஸ்டாரை அரசியலுக்கு வந்தாக வேண்டும் என்று சொல்லி சென்னையில் போயஸ்கார்டன் வீட்டிலும் , ராகவேந்திரா மண்டபத்திலும் குவிந்ததாகவும், பின்னர் சூப்பர் ஸ்டாரை சந்திக்க முடியாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் பின்னணி விபரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. ரசிகர்கள், ரஜினியை தேடி வருவது அன்றாடம் நடைபெறும் வழக்கமான நிக்ழ்ச்சிதான். அனைத்து மன்ற நிர்வாகிகளையும் ரஜினி சந்திக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சந்திப்பு பற்றிய முழு விபரங்கள் சம்பந்தப்பட்ட மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக தேதி, இடம் போன்றவை முறையாக தெரிவிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை தலைமை மன்றம் செய்து வருகிறது. ரஜினி தன்னுடைய ரசிகர்களுடன் தொடர்பு கொள்ள நினைத்தால் அது அறிக்கை வடிவில் நிச்சயம் ரசிகர்களை சென்றடையும். ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் இடையே எந்தவொரு இடைவெளியும் இல்லை. ரஜினி ரசிகர்களின் உணர்வுகளும், எதிர்பார்ப்புகளும் தலைமை மன்றத்தின் வாயிலாக ரஜினிக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதில் எந்தவித மாற்றமும் இருக்காது. தலைமை ரஜினி மன்றத்தின் அனுமதியோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் ரஜினி மன்ற நிர்வாகிகள் பத்திரிக்கைகளுக்கும், மீடியாவுக்கும் பேட்டியளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment