கிட்டதட்ட ஒரு மாத கால ‘எந்திரன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, தலைவர் இன்றிரவு சென்னை திரும்புகிறார். மிகவும் பரபரப்பான ஒரு சூழ்நிலையில் அவர் இது போல் வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்புவது நீண்ட காலத்திற்கு பிறகு நடக்கிறது.
உளவுத்துறை போலீஸார் விழிப்புடன் காத்திருக்கின்றனர் !!
லெட்டர் பேட் கட்சி தலைவர்கள் கணக்குடன் காத்திருக்கின்றனர் !!
அரசியல் கட்சியினர் கிலியுடன் காத்திருக்கின்றனர் !!
புதிதாக வாழ்வு பெற்றவர்கள் கலக்கத்துடன் காத்திருக்கின்றனர் !!
பத்திரிக்கைகள் கல்லா கட்டும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் !!
அறிவுஜீவிகள் வழக்கம்போல் ஒன்றும் நடக்காது என்ற நப்பாசையுடன் காத்திருகின்றனர் !!
ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருகின்றனர் !!
எதிரிகள் தோற்பதற்கு காத்திருக்கின்றனர் !!
பார்போம் யார் கனவு பலிக்கிறது என்று? !!!
சென்னை முழுதும் கலக்கலான போஸ்டர்கள்
இதற்கிடையே நேற்று மாலை மலரில் ரசிகர்கள் போஸ்டர் பற்றி வெளியான செய்தியை பார்த்து மேலும் சில பகுதி ரசிகர்கள் போஸ்டர்கள் எழுப்பியிருப்பதாக தகவல்.
சென்னை விமான நிலையம், சூப்பர் ஸ்டார் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதி, சத்தியநாராயணன் வீடு அமைந்துள்ள கோபாலபுரம், ராகவேந்தரா மண்டபம் மற்றும் அயனாவரம் ஆகிய பகுதிகளில் கலக்கலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
போஸ்டர் வாசகங்களில் சாம்பிள்கள் சில:
வெளிநாடு சென்று திரும்பும் எந்திரனே வருக…வருக..
தமிழ்நாட்டிற்கு இன்பம் தருக..தருக…
ரசிகர்களுக்கு முதல் மரியாதை கொடுத்த இந்தியருக்கு நன்றி..நன்றி…நன்றி!!
மற்றவர்கள் வந்தது வீம்புக்காக! எங்கள் தலைவர் வருவது எங்கள் அன்புக்காக!!
(அட ஓவர் பில்டப்பா இருக்கேன்னுதானே நினைக்குறீங்க…எனக்கும் அந்த பயம் இருக்கு…ம்…ம்…ம்…என்ன செய்ய ?)
தமிழகம் முழுதும் ரசிகர்கள் ஆங்காங்கே, இது போல் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் என்று தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர். சிலர், முன்னெச்சரிக்கையாக, ‘தலைவர் என்ன சொல்கிறார் என்று பார்த்துவிட்டு நமது கொண்டாட்டங்களை வைத்துக்கொள்ளலாம்’ என்று அமைதியாக இருப்பதாக தகவல்.
தமிழகம் முழுதும் வெளியான மாலை மலர் செய்தி
நேற்று நாம் கூறிய செய்தி, இன்னும் பல முக்கிய விபரங்களை சேர்த்து மாலை மலரில் வெளிவந்துள்ளது. தமிழகம் முழுக்க அனைத்து பதிப்புக்களிலும் இந்த செய்தி வெளியானது.
No comments:
Post a Comment