எந்திரன் ஸ்டில்கள்....






படப்பிடிப்பில் எடுக்கப்படுகிற ஸ்டில்களின் 'சிப்' அப்படியே ஷங்கர் கைக்கு போய்விடுகிறது. அதை அவர் தனது லேப்-டாப்பில் பத்திரப்படுத்தி விடுகிறார்.
படப்பிடிப்பில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் செல்போனில் படும் எடுக்கவே முடியாது.
-இப்படியெல்லாம் எந்திரன் பற்றி செய்திகள் வருகிறது. இந்த செய்திகளை ஆற அமர படித்துக் கொண்டே படப்பிடிப்பை செல்போனில் படம் எடுத்து இ-மெயிலில் அனுப்புகிறார்கள்! ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? என்று பிரேம்ஜி ஸ்டைலில் ஷங்கர் மண்டையை பிய்த்துக் கொண்டாலும், இந்த 'நெட்'வொர்க்கை நிறுத்த முடியாது போலிருக்கிறது. படத்தில் நீங்கள் பார்ப்பது பெரு நாட்டில் நடைபெற்ற எந்திரன் படப்பிடிப்பு. அழகு மயில் ஐஸ்வர்யாராயும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஆட தயாராகிற இந்த படங்கள் பார்க்கவே ஜாலியாக இருக்கிறதல்லவா? ம்... எப்பவுமே திருட்டு தேனுக்கு ருசி அதிகம்!
-ஆர்.எஸ்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...