எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை உடையவர் ரஜினி. அவரது கொள்கையை ஏற்று அவரது ரசிகர்களும் மத நல்லிணகத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். மத வேறுபாடின்றி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நலம் பெற வேண்டி, பல்சமய வழிபாட்டு தளங்களில் பிரார்த்தனைகளை செய்துவருகின்றனர்.
நமது தளம் சார்பில் ஏற்கனவே இந்துக்களின் திருக்கோயில் மற்றும் கிறிஸ்தவர்களின் தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெற்றது உங்களுக்கு தெரிந்ததே. அதன் தொடர்ச்சியாக இஸ்லாமியர்களின் தர்க்காவிலும் நிச்சயம் பிரார்த்தனை நடைபெறும் என்று கூறியிருந்தோம்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை (03/06/11) அன்று மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள பாரம்பரியம் மிக்க ஹஸ்ரத் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. நம் தள வாசகர்கள் மற்றும் நண்பர்கள் தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக தர்காவினுள் பிரார்த்தனை செய்ய சிறப்பு அனுமதி பெற்றிருந்தோம். அதன் படி சுமார் அரை மணிநேரம் தர்காவினுள் தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. நம்முடன் சேர்ந்து தர்கா பொறுப்பாளரும் தொழுகையில் ஈடுபட்டார். விடைபெறும்போது நமது தளம் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொண்டோம்.

தொழுகையில் பங்கேற்றோர்: ராஜா, பி.எம். முரளி, மாரீஸ் கண்ணன், ராஜகோபால், எல்.ஐ.சி.ஸ்ரீதர், குட்டி சந்திரன், ரோபோ சத்யா, பிரதீப் குமார், விஜய் ஆனந்த், சந்துரு, ஜான், வெங்கடபதி, கனி, பிரவீன், பிங்கி ஆர்.கோபால் உள்ளிட்ட ரஜினி ரசிகர்கள் மற்றும் நம் நண்பர்கள் பங்கேற்றனர். வர இயலாத நண்பர்கள் தத்தங்கள் இடத்திலிருந்தே பிரார்த்தனை செய்வதாக நம்மிடம் தெவித்திருந்தனர்.

தலைவர் நலமுடன் திரும்பிய பிறகு, நாம் பிரார்த்தனை செய்த இடங்கள் அனைத்திற்கும் மீண்டும் ஒரு முறை சென்று நன்றி கூறிவிட்டு வரவேண்டும் என்று நண்பர்கள் கருத்து தெரிவித்தனர். நிச்சயமாக!

ராணா படத்தின் பி.ஆர்.ஒ.வும், நண்பருமான ரியாஸ் அவர்கள் நமது தொழுகைக்கு வருவதாக கூறியிருந்தார். ஆனால் திடீர் பயணமாக பெங்களூர் செல்லவேண்டியிருந்ததால் நமது பிரார்த்தனை சிறப்பாக நடைபெறவேண்டி வாழ்த்து அனுப்பியிருந்தார். நமது தொழுகை நடைபெறும் அதே நேரம் தாமும் தாம் இருக்கும் இடத்திலேயே தொழுகை செய்வதாக கூறியிருந்தார்.

————————————–
(தர்காவுக்கும் மசூதிக்கும் என்ன வித்தியாசம் ?
மசூதி அதாவது பள்ளிவாசல் என்பது இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலம். தர்கா என்பது மறைந்த முஸ்லிம் மகான்களின் சமாதி உள்ள இடம். சென்னை ஆயிரம் விளக்கில் இருப்பது மசூதி. எல்.ஐ.சி. கட்டடத்துக்கு எதிரில் இருப்பது ஹஸ்ரத் தர்கா. இங்கே அனைத்து மதத்தினர்களும் நம்பிக்கையுடன் வந்து செல்கிறார்கள். நாடு முழுதும் தினசரி எண்ணற்றோர் வந்து தொழுகை நடத்திவிட்டு செல்லும் அஜ்மீர் தர்கா, நாகூர் தர்கா என்று பல தர்க்காக்கள் உள்ளன.)
————————————–
[END]
No comments:
Post a Comment