நமது தளத்தில் மிகவும் வரவேற்ப்பை பெற்ற Tid Bits பகுதி இதோ மீண்டும் வருகிறது. தலைவர் மற்றும் அவரது படத்தை குறித்த சிறு சிறு செய்திகளை கூட எதையும் நீங்கள் விட்டுவிடக்கூடாது என்பதற்காக தொடங்கப்பட்ட பகுதி இது.
இடைப்பட்ட காலங்களில் நமது தளத்தில் பெரும்பாலான முக்கிய செய்திகளை நாம் கவர் செய்துவந்தாலும், எந்திரன் பரபரப்பிலும் அதன் வெற்றி ஏற்படுத்திய தாக்கத்திலும் சில சிறிய சிறிய செய்திகளை நேரமின்மை காரணமாக மிஸ் செய்ய வேண்டியதாகிவிட்டது. இதோ தற்போது இப்பகுதி மீண்டும் துவங்குகிறது. இனி நீங்கள் எந்த செய்தியையும் மிஸ் செய்ய மாட்டீர்கள் என நம்பலாம்.
1) தலைவரின் உடனடி கவனம் ஹராவில் மட்டுமே?
பிரபல கன்னட இயக்குனர் பிரேம் இயக்கத்தில், மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் நடிக்கும் 100 வது படமான ‘ஜோகையா’ என்னும் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ஒப்புக்கொண்ட விஷயத்திர்க்கு குமுதம் புண்ணியத்தில் கை, கால், காது மூக்கு முளைத்து அடுத்த படத்தில் ‘சந்நியாசி’ வேடத்தில் ரஜினி நடிக்கிறார் என்று வால்போஸ்டர் செய்தியாகி விட்டது.
உண்மையில் சூப்பர் ஸ்டாரின் முழுக் கவனம், இடையில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி நின்றுகொண்டிருக்கும் அனிமேஷன் படமான ஹராவை முடிப்பதில் மட்டுமே தற்போது உள்ளது. சௌந்தர்யா அஸ்வின் பாதி இயக்கியிருக்க, மீதமுள்ள பகுதியில் சில LIVE போர்ஷன்கள் சேர்த்து, ஒரு பக்கா கமர்ஷியல் படமாக அதை வெளியிடவிருக்கின்றனர். அதன் பிறகு, சிறிது காலம் ரெஸ்ட். அதன் பிறகு, மாறியிருக்கும் அரசியல் சூழ்நிலையை மனதில் வைத்து தான் சூப்பர் ஸ்டார் தனது அடுத்த அடியை எடுத்து வைப்பார். அதுவரை… பொறு மனமே!
2) செல்வராகவனின் வருங்கால மனைவி வீட்டுக்கு சென்ற ரஜினி
சோனியா அகர்வாலின் விவாகரத்துக்கு பிறகு, சில காலம் தனிமையில் இருந்த செல்வாவுக்கு தற்போது, அன்புகாட்டவும், அரவணைக்கவும் ஆள் கிடைத்தாகிவிட்டது.
‘இரண்டாம் உலகம்’ என்ற தனது புதிய படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றும் கீதாஞ்சலி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட காதலையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடன் அவரை விரைவில் கரம் பிடிக்க இருக்கிறார் செல்வா. இவர்களின் திருமண முடிவு குறித்து தெரிந்துகொண்ட சூப்பர் ஸ்டார், நேரே கீதாஞ்சலி வீட்டுக்கே சென்று, அவரது தந்தையை சென்று சந்தித்து வாழ்த்திவிட்டு வந்தார். (மருமகனோட அண்ணனாச்சே!)
கீதாஞ்சலியின் தந்தை பி.எஸ்.ராமன், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் என்பது குறிப்பிடத்தக்கது.
3) ரஜினியை இனி யாராலும் தாண்டி போகமுடியாது – நாகார்ஜூனா
சில பல காரணங்களுக்காக சூப்பர் ஸ்டாரை உள்ளூர் நடிகர்கள் சிலர் வாய்விட்டு பாராட்ட மறுத்தாலும் பிற மாநில நடிகர்கள் அவரது அருமை பெருமைகளை உணர்ந்தே இருக்கின்ர்ணன்ர். அவர்களில் ஒருவர் பிரபல தெலுங்கு ஹீரோ நாகார்ஜூனா.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் , “ரஜினியின் ரோபோ பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இந்திய சினிமாவில் ரஜினியை வேறு யாரோடும் ஒப்பிட முடியாது. ரஜினி இல்லாமல் ஷங்கரால் தனியாக ரோபோவை பண்ணியிருக்கவும் முடியாது. (அப்படிப் போடு!). ரஜினியை இனி யாரும் தாண்டி போக முடியும்னும் தோணலை.”
சூப்பரா சொன்னீங்க நாகார்ஜூனா சார்.
பேட்டியில் நாகாசூன ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். “இதயத்தை திருடாதே, உதயம் ஆகிய படங்கள் வந்த சமயங்கள்ல… அந்த வெற்றி தந்த ஆணவத்துல திமிரா நடந்திருக்கேன். ஆனால், அதற்க்கு பிறகு கிடைச்சது பயங்கர அடி. ஒரு படம் ஹிட்டானா ஆகயத்துல மிதக்ககூடாது. அதுக்கு பிறகு அங்கேயிருந்து தலை கீழா கீழே விழ வேண்டியிருக்கும். எளிமையா இருந்தா எந்தப் பிரச்னையும் இல்லே.”
தலைவர் இதை தான் எந்திரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவுல சொன்னார். “எல்லோரும் என் எளிமையை பத்தி பேசுறாங்க. எளிமையா இருந்துதாங்க ஆகணும். ஏன்னா…. கொஞ்சம் உயரத்துல இருந்து விழுந்தா அடி படாது. ஆனா நீங்க என்னை ரொம்ப பெரிய உயரத்துல வெச்சிருக்கீங்க. கீழே விழுந்தா அட்ரஸ் இல்லாம போயிடுவோம்!” என்றார். எவ்ளோ பெரிய விஷயத்தை ஜஸ்ட் லைக் தட் சொல்லியிருக்கிறார் தலைவர் பார்த்தீங்களா??
4) பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் நிறைவேறிய ஆசை
இதை நீங்கள் படித்தால் தலைவருக்கு எந்தெந்த இடத்துல எல்லாம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று வியந்து போவீர்கள்.
சூப்பர் ஸ்டாரின் அருபாதாம் கல்யாணம் சமீபத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. மிகவும் ப்ரைவேட்டாக இந்த வைபவம் நடைபெற்றதால், தன் நெருங்கிய நண்பர்கள் பலரை அழைக்க முடியவில்லை. இதையடுத்து, தனது வீட்டில், தனது நண்பர்கள் மற்றும் துணைவியாரின் தோழிகள் மற்றும் சொந்த பந்தகளுக்கு அழைப்பு விடுத்து விருந்தளித்தார்.
அருணா சாய்ராம், சுதா ரகுநாதன் உள்ளிட்ட பிரபல இசைக்கலைஞர்களும் இதில் கலந்துகொண்டனர். அது குறித்து ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் இணைப்பை தந்திருக்கிறேன். தமிழாக்கம் பின்வருமாறு.
//நீங்கள் சூப்பர் ஸ்டாராக இருந்தால், உங்கள் பிறந்த நாளை பல முறை கொண்டாட வேண்டியிருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அப்படித்தான் ஆயிற்று. அதுவும் இம்முறை மணிவிழா வேறு. முதல் கொண்டாட்டம் சுவாமி தயானந்த சரஸ்வதி வந்தபோது நடைபெற்றது. அடுத்து நண்பர்களுக்காக ஒருமுறை. அடுத்து உறவினர்களுக்காக ஒருமுறை. நிகழ்ச்சிக்கு படையெடுத்து வந்த வி.ஐ.பி.க்களில் ஒருவரான சுதா ரகுநாதன், சூப்பர் ஸ்டாருடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் தனது விருப்பத்தை தெரிவித்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றியும் கொண்டார். காரணம் : ரஜினியின் பிறந்தநாளுக்கு நானும் போனேன் என்று தனது மகளிடம் பந்தா காண்பிக்கவாம்.//
5) போர்ப்ஸ் இதழ் டாப் நபர்கள் பட்டியல் குறித்த வாசகர் கடிதங்கள்!
ஃபோர்ப்ஸ் இதழின் 2010 ஆம் ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார் இடம்பிடித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். அது தொடர்பான ஃபோர்ப்ஸ் இதழின் பக்கங்களை கூட நாம் ஸ்கேன் செய்து அளித்திருந்தோம். இதோ அடுத்த ஃபோர்ப்ஸ் இதழ் வெளியாகிவிட்டாது.
முந்தைய இதழின் சிறந்த நபர்கள் பட்டியல் குறித்து வாசகர் கடிதங்கள் பல அந்த பத்திரிக்கைக்கு வந்துள்ளன. அவற்றுள் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து பிரசுரித்துள்ளனர். அந்த பக்கம் இதோ உங்களுக்காக.
[END]

No comments:
Post a Comment