விகடனில் ரஜினி பற்றிய கேள்விகளுக்கு கமலின் பதில்கள்!!

மிழ் திரையுலகில் மிச்ச மீதி இருக்கும் உன்னதமான சில விஷயங்களில் ரஜினி-கமல் நட்பும் ஒன்று. பல விதமான சூழல்களுக்கு இடையேயும், இவர்களின் நட்பு மட்டும் இன்னும் உறுதியாக இருக்கிறது.
RajiniKamal 640x423  விகடனில் ரஜினி பற்றிய கேள்விகளுக்கு கமலின் 
பதில்கள்!!
அவருடன் அறிமுகமான காலம் முதலே கலை ரீதியாக மட்டுமல்ல… தனிப்பட்ட ரீதியிலும்  கமல் மீது மிகப் பெரும்  மதிப்பும் மரியாதையும் தலைவர் வைத்திருக்கிறார். கமல் 50 நிகழ்ச்சியில் தலைவர் ஆற்றிய உரையே இதற்க்கு சான்று. (பின்னர் சில நாட்கள் கழித்து கலைத் தாயின் கைகளில்  கமல் இருப்பது போன்ற ஓவியத்தையும் தலைவர் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. )
ரஜினி அவர்களை பற்றி பல்வேறு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளில் கமல் நல்ல கருத்து கூறியிருக்கிறார். அதே போல கமலை பற்றியும் அவருடன் இருக்கும் நட்பை பற்றியும் ரஜினி பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார்.
1995 ஆம் தூர்தர்ஷன் பேட்டியில், ‘உங்களுக்கு பிடித்த ஹாலிவுட் நடிகர் யார்… இந்திய நடிகர் யார்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த சூப்பர் ஸ்டார், “ஹாலிவுட்டில் சில்வஸ்டர் ஸ்டாலோன், தமிழில் கமல்ஹாசன்” என்றும் கூறினார்.
இதை பற்றி அப்போது கமலிடம் கேட்கப்பட்டது. “என் சகோதரரிடம் கேட்டால் அவர் வேறு என்ன சொல்வார்…?” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
16 
Vayadhinilae 1977 640x649  விகடனில் ரஜினி பற்றிய கேள்விகளுக்கு கமலின் 
பதில்கள்!!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட, இதே போல, ஒரு பத்திரிக்கை கேள்வி பதிலில் வாசகர் ஒருவர் கமலிடம் , “உங்களுடன் கௌரவ வேடத்தில் அறிமுகமான ரஜினி, உங்களை முந்தி சென்றுவிட்ட வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?” என்று கேட்ட கேள்விக்கு “இல்லாமல் இருக்குமா?” என்று வெளிப்படையாக பதிலளித்தார் கமல்.
கடந்த சில வாரங்களாக ஆனந்த விகடனில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார். நாம் கேட்க நினைக்கும் பல கேள்விகளை வாசகர்கள் அவரிடம் வெளிப்படையாக பல கேள்விகள் இருந்தபடியால், சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை. (எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம் என்று விகடன் கூறியிருந்தது!).
அந்த கேள்வி -பதிலில் தலைவர் பற்றிய கேள்வி பதிலை மட்டும் தேர்ந்தெடுத்து இங்கு தருகிறேன்.
[தனிப்பட்ட வாழ்க்கையை தவிர பிற விமர்சனங்களை கமல் தவறாக எடுத்துகொள்ளமாட்டார் என்பதால் நாம் நமது கருத்துக்கள் சிலவற்றை கூறியிருக்கிறேன்.  '[     ]‘ அடைப்பு குறிக்குள் இருக்கும் கமெண்ட் நம்முடையது!]
Photo34 16A 640x426  விகடனில் ரஜினி பற்றிய கேள்விகளுக்கு கமலின் 
பதில்கள்!!
1) எந்திரனில் நாம் நடிக்கவில்லையே என்று எப்போதாவது நினைத்தீர்களா? (ஹானஸ்டாக பதில் கூறுபவராச்சே கமல் அதனால் கேட்கிறேன்!)
கமல் : ‘நினைத்திருந்தால்,  நடிக்கும் வாய்ப்பு இருந்தது. நடிக்கவில்லை விடுங்கள்!’
[தயாரிப்பாளர் என்ற வார்த்தையை முதலில் சேர்த்துக்கொள்ளுங்கள் கமல்.]
2) தாங்கள் ‘LATE CHILD’ என்பதில் உங்களுக்கு வருத்தம் உண்டா?
கமல்: ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்குறதுனால…. இல்லே!’ (பன்ச் உபயம் : நண்பர் ரஜினி)
[எங்க தலைவர் கிட்டேயிருந்து மத்த நல்ல விஷயங்களும் எடுத்துகிட்டீங்கன்னா சந்தோஷம் கமல் சார்!]
3) நீங்களும் ரஜினியும் சேர்ந்து நடிப்பது இல்லை என்ற ஒப்பந்தம் இனியும் நீடிக்கத்தான் வேண்டுமா?
கமல் : ‘நடிக்காமல் இருந்தது, முதலில் நடித்தது எல்லாமே தற்காப்பு வியாபாரம்தான். அதே காரணத்துக்காக மீண்டும் நடிப்பது தப்பில்லை தானே.
இருவருக்குமே அந்த தற்காப்பு தற்போது தேவையில்லாமல் செய்த உங்களைப் போன்றவர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் கமல், ரஜினி!’
[சத்தியமா சொல்றேன் சார்.. ரெண்டு மூண்டு தடவை படிச்சப்புறம் தான் நீங்க என்ன சொன்னீங்கன்னே புரிஞ்சது. ஆங்.... அஸ்கு புஸ்கு...]
MG 
3666 640x426  விகடனில் ரஜினி பற்றிய கேள்விகளுக்கு கமலின் பதில்கள்!!
4) ரஜினியிடம் நீங்கள் கண்டு வியக்கும் குணம் எது?
கமல் : ‘நட்பு தான்!’
[இது ஒன்னை சொல்லியே தப்பிச்சுடுறீங்க கமல் சார்]
5) உங்கள் நண்பர் ரஜினிகாந்த் அவர்களிடம் நீங்கள் முரண்படும் ஒரு விஷயம், பாராட்டும் ஒரு விஷயம்?
கமல் : ‘முரண்பாடுகள் உள்ளதாலேயே எல்லோரையும் போன்றவர். உச்ச நட்சத்திர அந்தஸ்தை ஓரங்கட்டிவிட்டு சாதாரணமாக இருக்க முயல்வதால்.. உன்னதமானவர்!’
[முரண்பாடுகள் பற்றிய கேள்வியை நீங்க சரியா புரிஞ்சிக்கலைன்னு நினைக்கிறேன். ஓகே. ஆனா ரெண்டாவது பதிலுக்கு தேங்க்ஸ் சார்!]
Rajini in MA Premiere 300x199  விகடனில் ரஜினி பற்றிய கேள்விகளுக்கு 
கமலின் பதில்கள்!!பிறர் கேட்க மறந்த கேள்வி ஒன்றை நான் கமல் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.
கேள்வி : நீங்கள் நடிக்கும் திரைப்படங்களை கண்டு ரசித்து, பகிரங்கமாக உங்களை உங்கள் நண்பர் ரஜினி பாராட்டுவது போல… நீங்கள் ஏன் செய்வதில்லை? எங்களுக்கு தெரிந்து உங்கள் சமீபத்திய படங்களை அனைத்தையும் ரஜினி பார்த்துவிட்டார். ஆனால் நீங்கள் சரித்திரம் படைத்த சிவாஜியையோ, இந்தியாவே வியந்து பார்த்து எந்திரனையோ பார்த்ததாக தெரியவில்லையே… ஏன்?
இதற்க்கு கமல் அவர்கள் பதிலளிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அது என்னவாக இருக்கும்? அல்லது உங்கள் பதில் என்னவாக இருக்கும்? உங்கள் கற்பனைக் குதிரையை தட்டிவிடுங்கள் நண்பர்களே… (உங்கள் கருத்துக்கள் நாகரீகமான விமர்சனமாக இருக்கவேண்டியது அவசியம்!)
[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...