Endhiran tickets Sold in a jiffy In Kerala (கேரளாவில் 125 தியேட்டரில் எந்திரன் டிக்கெட் காலி: புதிய சாதனை )


கேரளாவில் எந்திரன் படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. சில மணி நேரத்திலேயே 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்தது.

கேரளாவி்ல் எந்திரன் படம் 125 தியேட்டர்களில் வெளியாகிறது. இது கேரள சினி்மா வரலாற்றில் புதிய சாதனை ஆகும். மலையாளத் திரைப்பட வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் 100 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டதில்லை. முதல் முதலாக எந்திரன் தான் இந்த சாதனையை படைத்துள்ளது.

திருவனந்தபுரம், கொச்சி, பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய இடங்களில் உள்ள நியூ, தான்யா, அஜந்தா ஆகிய 5 தியேட்டர்களில் எந்திரன் பட முன்பதிவு நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆனால் காலை 9 மணிக்கு முன்பாகவே ரஜினி ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்தனர்.

முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் 5 தியேட்டர்களிலும் 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்தன. இதே போல் மற்ற பகுதிகளிலும் 2 நாட்கள் காட்சிக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.

இது குறித்து அஞ்சலி, அதுல்யா தியேட்டர்களின் மேலாளர் அசோகன் கூறுகையி்ல்,

இதற்கு முன் எந்த படத்திற்கும் முன்பதிவு செய்யப்பட்டதில்லை. எந்திரன் படம் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டன என்றார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...