

இசை வெளியீட்டு விழாவிற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இதுவரை “31 ஆம் தேதி ஆடியோ வெளியீடு” என்ற அறிவிப்புடன் நாளிதழ்களில் விளம்பரம் எதுவும் வெளியாகவில்லை.
இன்றைக்கு வெளியாகவிருந்த சிறப்பு படங்கள் + செய்திகள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை வெளிவரும் என்று தெரிகிறது. இதுகுறித்து இன்றைய தினகரனில் முதல் பக்கத்தில் வெளிவந்திருக்கும் ஒரு விளம்பரத்தை இணைத்திருக்கிறேன்.
நாம் கூறியதற்கு மாறாக விளம்பரம் எதுவும் இன்று வெளிவரவில்லை என்பது நமக்கு ஏமாற்றம் தான். ஆடியோவை பொறுத்தவரை பாடல்களை கேட்க இண்டர்நெட் டவுன்லோட்கள் மற்றும் இணையங்கள் மலிந்துகிடக்கும் இன்றைய காலகட்டங்களில் கடைகளில் ‘INITIAL SALES’ என்பது மிகவும் முக்கியம். இசை வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் சூழலில் இப்படி அது குறித்து விளம்பரங்களை வெளியிடாது தவிர்ப்பது அல்லது ஒத்திப்போடுவது ஏன் என்று புரியவில்லை…
Promo Article 640x318 Endhiran Scoop 12 : இன்று விளம்பரத்திற்கு பதில் ப்ரோமோ ஸ்டில் வெளியீடு & விழாவில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் விபரம் !
இசை உரிமையை வாங்கியிருக்கும் ‘THINKMUSIC’ நிறுவனம் ஏற்கனவே தொலைபேசி புக்கிங்கை (சென்னைக்கு மட்டும்) துவக்கிவிட்ட நிலையில், இவர்கள் விளம்பரம் வெளியிடாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. இணைய KNOWLEDGE இல்லாத இண்டர்நெட்டை பயன்படுத்த தெரியாத ரசிகர்களுக்கு இது பற்றியோ இசை வெளியீடு பற்றியோ எப்படி தெரியும்?
போணியாகாத படங்கள் மற்றும் பாடல்களுக்கெல்லாம் பாடல் வெளியீட்டிற்கு சில நாட்கள் முன்பு தொடர்ச்சியாக விளம்பரம் தரப்படும் தரப்படும் நிலையில், உலகமே எதிர்பார்க்கும் நம் திரைப்படத்தின் விளம்பரத்தை சில நாட்களுக்கு முன்பு எதிர்ப்பார்ப்பது தவறா?
சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களை தவிர யாருக்கும், (அதுவும் இன்டர்நெட் knowledge உள்ள ரசிகர்களை தவிர), வேறு யாருக்கும் – ஆடியோ போஸ்டர் வெளிவந்திருக்கும் விஷயம் கூட தெரியவில்லை. அதுவும் 31 ஆம் தேதி ஆடியோ ரிலீஸ் என்ற விபரமும் தெரியவில்லை.
இதனிடையே… வேறு சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு…
1) மலேசியா வந்து இறங்கிய முதல் குழு….
இதனிடையே, நாம் Scoop No. 11 இல் கூறியிருந்தபடி, எந்திரன் மற்றும் சன் பிக்சர்சின் டீமின் முதல் குழு நேற்று மலேசியா வந்து இறங்கியுள்ளது. இது தொடர்பான மலேசிய செய்தித்தாளின் பேப்பர் கட்டிங்கை மலேசியாவிலிருந்து நண்பர் கனகராஜ் அனுப்பியிருக்கிறார்.
Makkal OsaiJ 640x339 Endhiran Scoop 12 : இன்று விளம்பரத்திற்கு பதில் ப்ரோமோ ஸ்டில் வெளியீடு & விழாவில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் விபரம் !
படக்குழுவினர் அளித்துள்ள தகவலின்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சிம்பு, பரத், பிரபு, அர்ஜூன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் மலேசியா வரவிருக்கின்றனர். மேலும் பல நட்சத்திரங்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நட்சத்திரங்களை மலேசியா அழைத்து செல்லவென தனி விமானத்தை சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்துள்ளாதாக கூறப்படுகிறது.
2) நேரடி ஒளிபரப்பு இல்லை?
இதனிடையே நிகழ்ச்சி நடைபெறும் சனிக்கிழமை மாலையன்று வழக்கம்போல சன் டி.வியில். திரைப்படம் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. எந்திரன் இசை வெளியீட்டு நிகழ்ச்சி, கூடுதல் அம்சங்களுடன் நன்கு எடிட் செய்யப்பட்டு ஏதாவது நல்ல விடுமுறை நாளில் ஒளிபரப்பப்படும் என்று தெரிகிறது. So, மலேசியாவில் மட்டும் தான் நேரடி ஒளிபரப்பு இருக்கும்.
3) சூரியன் FM இல் இன்று ப்ரோமோ துவங்கியது…
சன் குழுமத்திற்கு சூரியன் FM இல் (93.5) இன்று சின்ன ப்ரோமோ துவங்கியது… முதலில் ஒரு வித்தியாசமான இசை கேட்கிறது. பிறகு சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும்…விரைவில்…” என்று அறிவித்துவிட்டு அத்தோடு முடிகிறது.
No comments:
Post a Comment