Endhiran Scoop 1: எந்திரன் ப்ரோமோ பணிகள் ஷங்கர் வசம்!


ரண்டரை ஆண்டுகள் அரும்பாடுபட்டு உருவாகியிருக்கும் தன் DREAM PROJECT எந்திரன் சூப்பர் டூப்பர் ஹிட்டாகவேண்டும் என்பதில் ஷங்கர் மிகவும் உறுதியாக இருக்கிறார். அதை விட சூப்பர் ஸ்டார் இன்னும் உறுதியாக இருக்கிறார். (நாமும் அதைவிட இன்னும் உறுதியாக இருக்கிறோம். Cheers Endhiran Team!)

படம் வளர்ந்துவந்த ஒவ்வொரு அங்குலத்தையும் பார்த்து வியந்த சன் பிக்சர்ஸ் படத்தின் பட்ஜெட் ஓவர் ஷூட் ஆனபோது கூட எந்த விதம் மறுப்புமின்றி ஷங்கர் தனது விருப்பத்திற்க்கேற்ப எடுக்க பெருமளவு உதவியது. எனவே எந்திரனைப் பொறுத்தவரை ஷங்கருக்கு முழு சுதந்திரம் சன் பிக்ச்சர்சால் தரப்பட்டுள்ளது.

Shankar Scoop2  Endhiran Scoop 1: எந்திரன் ப்ரோமோ பணிகள் ஷங்கர்  வசம்!

எந்திரன் போன்ற முற்றிலும் மாறுபட்ட, 150 கோடிகள் பட்ஜெட் தாண்டிய ஒரு மாபெரும் படைப்பின் ப்ரோமோ பணிகள் முற்றிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்பிய ஷங்கர், விளம்பர வெளியீடு முதல் ட்ரைலர் தயாரிப்பு வரை அனைத்தும் தான் விரும்பிய படி இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கூறி அதற்க்கான ஒப்புதலையும் பெற்றுவிட்டார். (ரசிகர்கள் இது குறித்து வைத்திருந்த கருத்துக்களை அவர் நன்கு அறிவார். Don’t worry!)

சன் டி.வி. யில் ஒளிபரப்பாகும் வழக்கமான ரிப்பீட் மூவி ட்ரைலர் போல அல்லாமல் எந்திரன் ட்ரைலர் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று விரும்பிய ஷங்கர் அதற்கேற்றார் போல ட்ரைலர் தயார் செய்துள்ளார். அவர் கொடுத்துள்ள GUIDELINES ன்படி தான் அவை தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்படும்.

ட்ரைலர் தயாரிப்பை அடுத்து, விளம்பரங்களுக்கு பயன்படுத்தவேண்டிய ஸ்டில்களை – தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஸ்டில்கள் - கொடுத்து விளம்பர டிசைனை தயார் செய்யுமாறு தனது உதவியாளர்களுக்கு கட்டளையிட்டுள்ளார் ஷங்கர். So, அதிரடி விளம்பரங்கள் தயாராகி கொண்டிருக்கிறது. (ஜூலை 31 ஆடியோ வெளியீடு 100% உறுதிங்க!)
நண்பர்களே, இந்த தகவல்களை செய்திகளை முதலில் நமது தளத்தில் தான் படிக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஓ.கே?

(குறிப்பு: நமது கடுமையான முயற்சி மற்றும் உழைப்பின் பலனே இந்த செய்திகள். எனவே நம் தளத்தின் செய்திகளை எடுத்தாள்வோர், பயன்படுத்துவோர், நமது தளத்தின் பெயரை அவசியம் போடவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.)

Next Scoop will be on………….. Endhiran trailer!
Stay tuned…..!!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...