பல சிறப்பம்சங்களுடன் ‘எந்திரன்’ - தீபாவளி ரிலீசை நோக்கி..!



ஊரெங்கும் இப்போ ஒரே பேச்சு - “ஷங்கர் எந்திரன் படத்தை முடித்துவிட்டாராமே… எந்திரன் எப்போ ரிலீஸ்?” என்பது தான். ஒரே ஒரு பாடலைத் தவிர ‘எந்திரன்’ படத்தின் அனைத்து காட்சிகளின் படப்பிடிப்புகளும் முடிந்து விட்டன.
*3 டி கன்வர்ஷன், எடிட்டிங், டப்பிங், ஒலிக்கலவை, கிராபிக்ஸ் சேர்ப்பு உள்ளிட்ட போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சென்னை - சாலிக்கிராமம் மற்றும் கேரள மாநிலம் கொழக்குட்டோமில் உள்ள பிரசாத் லேபுகளில் இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

*சூப்பர் ஸ்டார் ‘எந்திரன்’ படத்தின் டப்பிங்கை ஏற்கனவே துவக்கி பெருவாரியாக முடித்துவிட்டாலும், கடந்த சில தினங்களாக பிரசாத் லேப்பில் சில காட்சிகளுக்கு டப்பிங் பேசிவருகிறார். (பன்ச் டயலாக்ஸ்?)
*அனைத்து பணிகளும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்து FIRST COPY ரெடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வேகமாக நடைபெற்றுவருகின்றன. எப்படியும் தீபாவளிக்கு (நவம்பர் 5) ரிலீஸ் செய்து விடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
*சன்பிக்சர்ஸ் தனது வழக்கமான பாணியில் அல்லாமல் வித்தியாசமாக விளம்பரத்தை செய்யவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சன்னும் அந்த முடிவில் தான் இருக்கிறது. எந்திரன் ப்ரோமோ மீது கூடுதல் கவனம் செலுத்தும் பொருட்டு எந்திரனுக்கு, முன்பும் பின்பும் சில மாதங்களக்கு சன் வேறு எந்த படத்தையும் வெளியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எந்திரன் சில சிறப்பம்சங்கள்
* படத்தின் மொத்த பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ.150 கோடிகள். தமிழ் திரையுலக வரலாற்றில் - ஏன் இந்திய திரையுலக வரலாற்றில் இத்துனை பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் முதல் படம் இதுவே.
* சூப்பர் ஸ்டார் ரஜினி தனது கேரியரில் அதிகபட்ச ஊதியம் பெறும் படம் எந்திரன் தான்.
* தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அதிக பட்ச ஊதியம் வழங்கப்படும் முதல் படம் எந்திரன் தான்.
* இந்திய திரையுலக வரலாற்றில் ஒரு படத்தின் கதாநாயகிக்கு அதிகபட்ச ஊதியம் வழங்கப்படுவதும் எந்திரனுக்காகத்தான்.
* சென்னை நகரில் அதிகபட்ச திரையரங்குகளில் திரையிடப்படும் படம் எந்திரன் தான். (எந்திரன் ரிலீசாகும் தருணத்தில் சென்னையில் மூன்று புதிய மல்டிபிளெக்ஸ் தயாராகியிருக்கும்).
* அதேபோல உலகம் முழுதும் அதிகபட்ச திரையரங்குகளில் ரிலீச்சாகும் திரைப்படமும் எந்திரன் தான்.
* இதுவரை நடித்த படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி மேக்கப்புக்காக அதிக சிரத்தை எடுத்துக்கொண்டது எந்திரனுக்காகத்தன். (ரோபோ கெட்டப் காரணமாக!)
* சூப்பர் ஸ்டார் ரஜினி டபுள் ஆக்ஷனில் நடிக்கும் 9வது படம் எந்திரன். (ஜானி, ராஜாதி ராஜா போல). இங்கு டபுள் ஆக்க்ஷன் என்பது ஒரே நேரத்தில் இரு காரக்டர்களையும் திரையில் பார்க்கும் விதத்தில் வருவது எனக் கொள்க.
* பில்லா, தர்மத்தின் தலைவன் போன்று டபுள் ரோல்களை கணக்கில் எடுத்தால் எந்திரன் 12 வது படம்.
* 3D கண்ணாடிகளை பொறுத்தவரை Use & Throw வகையிலான மலிவான ஆனால் (தரமான) Film கண்ணாடிகளை தருவதற்கு வாய்ப்பிருக்கிறது. (அதுபற்றி இப்போது பேசுவது சரியல்ல. பிறகு விரிவாக கூறுகிறேன்.)
* உலகத் தரத்திற்கு இணையாக பல தொழில் உயர் நுட்பங்களை முதல் முறையாக தமிழ் திரையுலகில் பயன்படுத்தும் படமும் ‘எந்திரன்’ தான்.
இன்னும் பல விஷயங்கள் இது போல உள்ளன. (நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த, நான் விட்டுவிட்ட விபரங்களை கூறலாம். இங்கு சேர்க்கப்படும்!)
[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...