பிரச்னை முடிந்திருக்கலாம். ஆனால் அது நம் மனதில் ஏற்படுத்தியிருக்கும் காயம்…? இன்னும் எத்துனை காலம் தான் நாம் இவற்றையெல்லாம் சகித்துகொண்டிருக்கப்போகிறோம்? நாம் என்ன கையாலாகாத கோழைகளா… விலங்கிடப்பட்டிருக்கும் வேங்கைகள் அல்லவா? தலைவனுக்கு ஒரு சிறுமை என்றால் நம்மால் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியுமா?
‘சிறுமை கண்டு பொங்குவாய்’ என்று பாரதி கூறிய வரிகளுக்கேற்ப, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழ் மற்றும் ஜாதியின் பெயரை கூறிக்கொண்டு நடந்து வரும் அக்கிரமங்களை பார்த்து நம் ரசிகர்கள் கொதித்தெழுந்து வருகிறார்கள். இது குறித்து, நமக்கு உணர்ச்சி பிரவாகமாக வெடித்து மடை திறந்த வெள்ளமென வரும் கமெண்ட்டுகளே சாட்சி.
திரைத் தொழிலாளர்களுக்கு வருவாயில் பங்கு - முன்மாதிரியை ஏற்படுத்திய தலைவர்!!
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்ற பழமொழிக்கேற்ப, இந்த பிரச்னையில் ஜாதி எங்கிருந்து வந்தது என்று நமக்கு புரியவில்லை. ஜாதியின் பெயரை சொல்வதே வெட்கக்கேடான விஷயம் என்று தமிழகத்தில் இருந்த சூழல் மாறி, இன்று ஜாதியின் பெயரை பெருமையுடன் சொல்லி, அதற்க்கு ஆதரவு திரட்டுவது எத்துனை கேவலம்? நாடு எங்கே போகிறது? காந்தி தேசமே உனக்கு காவல் இல்லையா?
அதுமட்டுமல்ல, தலைவர், தொழிலாளர்களுக்கு எந்த அளவு உதவக்கூடியவர் என்பதை யாரும் அத்துணை சுலபத்தில் மறந்துவிட முடியாது. குசேலன் பட வெளியீட்டின் போது, “இனி என் படத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு என் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அளிப்பேன்” என்று கூறி, அதை நடைமுறையில் செய்து காட்டியவர் தலைவர். இன்று தொழிலாளர்களுக்காக வாய் கிழிய பேசுபவர்கள் அவர்களுக்காக செய்தது என்ன? சிந்திப்பீர் தொழிலாளர்களே…
நமக்கு ஏற்பட்ட இந்த கொதிப்பை போல தனது குமுறல்களையெல்லாம் கட்டுரையாக வடித்து, நமக்கு அனுப்பியிருந்தார் நமது நண்பர் ஈரா. நமது ‘Guest Article’ பகுதியில் அதை வெளியிடுகிறேன்.
உங்கள் கருத்துக்களையும் இது போன்று நமது “Guest Article” பகுதியில் வெளியிட விரும்பினால், கடுஞ்சொற்களை தவிர்த்து, யாரையும் கீழ்த்தரமாக விளிக்காது, எழுதியனுப்பவும். நாகரீகமாக அதே சமயம் பாரதியின் சினத்தோடு உங்கள் கருத்துக்கள் அமையவேண்டும்.
தலைவருக்கு இது போன்று அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளை உளவியல் ரீதியாக அணுகி, இது போன்று பிரச்னையை தூண்டிவிடுகிறவர்களின் நோக்கம் என்ன, அவர்களை எப்படி கையாள்வது, இதற்க்கு முடிவு தான் என்ன? என்பது பற்றியும் எழுதியனுப்பலாம்.
மறக்காது உங்கள் கட்டுரையை இதே பதிவில் கமெண்ட் பகுதியிலும் அளிக்கவும். “Guest Article” பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் கமெண்ட்டாக அது இங்கு பிரசுரிக்கப்படும். கட்டுரைகளை திருத்தவும், சுருக்கவும், (அதன் தரத்திற்காக) நமக்கு முழு உரிமை உண்டு. கட்டுரையை வெளியிடுவது நமக்கு கிடைககும் நேரத்தை பொறுத்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: tcln2009@gmail.com
ஒன்று கூடுவோம்! தலைவருக்கு துணை நிற்போம்!!
மாபெரும் சாதனைகள் அனைத்தும் முதலில் ‘முடியாது’ என்று சொல்லப்பட்டவையே….!!!!
ஜெய் ஹிந்த்!
No comments:
Post a Comment