என்ன தேசமோ… இங்கு பொய்கள் கூடியே ஒரு நியாயம் பேசுமோ…?



கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். நேற்று முன்தினம் சில தொலைகாட்சிகளில் மற்றும் இணைய தளங்களில் கூறப்பட்டதை போல, ராகவேந்திரா மண்டபத்தில் ‘கல் வீச்சு’ போன்ற அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை என்பதை வெள்ளியன்று இரவு அங்கு நேரில் சென்று உறுதிப் படுத்திக்கொண்டோம். அதற்க்கு பிறகு தான் நமக்கு நிம்மதியாக இருந்தது. இதற்குள் பல வெளியூர் ரசிகர்கள் தொலைகாட்சியை பார்த்துவிட்டு, நம்மிடம் என்ன ஏது என்று விசாரிக்க ஆரம்பித்தனர். அவர்களிடம் கவலைப்பட ஏதுமில்லை என்று கூறி சமாதானம் செய்தோம். வீண் பரபரப்புக்களை தவிர்க்க, நமது தளத்தில் “வதந்திகளை நம்பவேண்டாம்” என்று செய்தி வெளியிட்டோம்.

இதற்கிடையே அதே தினம் (வெள்ளிக்கிழமை) மாலை, தலைவருக்கும் நடிகர் அஜீத்துக்கும் “ரெட் கார்டு” போட பெப்சி முடிவெடுத்திருப்பதாகவும், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் அதில் தலையிட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன.
இதை தொடர்ந்து பிரச்னையை மேலும் பெரிதாக்காது சுமூகமாக பேசி தீர்க்க பல்வேறு திரையுலக சங்கங்களின் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் மறுநாள் (சனிக்கிழமை) காலை பிலிம் சேம்பர் வளாகத்தில் துவங்கியது.
அப்போது கூட, எந்தத் தரப்பிற்கும் பாதிப்பின்றி ஒரு சுமூக முடிவு எட்டப்படும் என்று தான் நமக்கு செய்தி கிடைத்தது. நண்பர்களுக்கும் அதை தான் தெரியப்படுத்தினோம். ஆனால், மாலை, சங்கங்களின் சார்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை படித்தவுடன் நம் மனம் சற்று வலித்தது.
நியாயத்திற்கு துணை நின்றதற்கு இத்துனை சோதனையா? அறிக்கை விபரத்தை தளத்தில் வெளியிட விருப்பமின்றி விட்டுவிட்டேன். இத்துணைக்கும் அறிக்கை வெளியான அடுத்த சில நிமிடங்களில் நமக்கு அதன் நகல் கிடைத்துவிட்டது. என்னத்தை சொல்ல…
என்ன தேசமோ இது என்ன தேசமோ
இங்கு பொய்கள் கூடியே ஒரு நியாயம் பேசுமோ…
தர்மம் தூங்கி போகுமோ…
நீதி வெல்லுமோ
இங்கு நேரமாகுமோ
*********இன்பம் துன்பம் என்பது இரவு பகலை போன்றது
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் ஆறலாம்
சோகம் என்ன தோழனே
சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு
இன்று ஓய்வெடு
நீ இன்று ஓய்வெடு
*********பிறக்கும் போதும் பேரில்லை
இறக்கும் போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
ஜெயிக்க போகும் மானிடா
மயக்கம் இங்கே ஏனடா
உறுதியோடு கேளடா
உண்மை நீயடா
ஓ.. உண்மை நீயடா
‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ படத்தில் வரும் இந்த பாடல் தான் இப்போதைக்கு எனக்கு நினைவுக்கு வருகிறது.
Want to hear the above song? (Just click the below link and hear it. It’s a Soul-stirring song!)
http://www.musicplug.in/songs.php?movieid=2014

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...