எந்திரன் - டப்பிங் பேசினார் ரஜினி
பக்கா ப்ளானிங்கோடு போய்க் கொண்டிருக்கிறது எந்திரன். நேரத்தை துளி கூட வீணாக்காது பம்பரமாக சுற்றிக்கொண்டிருக்கிறது ஷங்கரின் டீம். சூப்பர் ஸ்டாரும் முழு ஒத்துழைப்பும் அளித்து வருகிறார்.
படத்தின் டாக்கி போர்ஷன்கள் அநேகமாக முடிந்தே விட்டன என்று சொல்லலாம். பாக்கியிருப்பது பாடல்கள் மட்டும் தான். எப்படியும் டிசம்பருக்குள் (அதிகபட்சம் பொங்கல் திருநாள்) அனைத்தையும் முடித்து, இறுதிகட்ட பணிகளுள் நுழைய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
‘எந்திரன்’ படத்தை பொறுத்தவரை நேரத்தை மிச்சப்படுத்த, எடிட்டிங் உட்பட படத்தின் பெரும்பாலான POST-PRODUCTION பணிகள் உடனுக்குடன் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகளும் துவங்கிவிட்டன. கடந்த வாரம் புதன் மற்றும் வியாழக்கிழமை இரு தினமும் பிரசாத் ஸ்டூடியோவில் சூப்பர் ஸ்டார் எந்திரன் படத்துக்கான முதல் கட்ட ‘டப்பிங்’ பேசினார். (திரையில் காட்சி ஓட, அதற்கேற்றார்போல வசனத்தை அடுத்து ஒரு விசிலடிக்க வைக்கும் செய்தி
ஒரு படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று SOUND. சரியான ஒலிப்பதிவு என்பது ஒரு தரமான படத்திற்கு இன்றியமையாதது. அதுவும் சூப்பர் ஸ்டார் நடிக்க உலகத் தரத்தோடு தயாராகும் ஒரு படத்திற்கு - அதுவும் இசைப் புயல் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் படத்திற்கு… “ஒலிப்பதிவு” என்பது எத்துனை முக்கியம்? அதனால் தான் இயக்குனர் ஷங்கர் உலகத் தரத்திற்கேற்ப ஒரு ஒலிப்பதிவாளரை எந்திரன் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.
சிறந்த ஒலிப்பதிவிற்க்காக ஆஸ்கார் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி எந்திரன் படத்தின் ஒலிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார். ‘SLUMDOG MILLINAIRE’ படத்திற்காக சிறந்த ஒலிக்கலவை - Best Sound Mixing ஆஸ்கார் விருதை ரசூல் பூக்குட்டி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி… எந்திரன் படத்தில் பணிபுரிவது பற்றி கேட்டால், “இது வரை நீங்கள் பார்க்காத ரஜினியை பார்ப்பீர்கள்” என்று மட்டும் சொல்கிறார் ரசூல். (இது ஒன்னு போதும் ரசூல் சார்….!)
கலக்குங்க ரசூல்… உங்க ‘ஒலி’ விருந்தை கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம்.
எந்திரனில் சூப்பர் ஸ்டாருக்கு மூன்று வேடமா?
எந்திரனில் சூப்பர் ஸ்டார் மூன்று வேடங்கள் ஏற்றிருப்பதாக செய்தி ஒன்று கசிந்திருக்கிறது. நம் நண்பர்கள் கூட அதை உறுதி செய்து வெளியிடுமாறு என்னை கேட்டுக்கொண்டார்கள்.
நாம் விசாரித்தவரை அந்த செய்தியில் உண்மையில்லை. எந்திரனை பொறுத்தவரை சூப்பர் ஸ்டாருக்கு இரண்டே வேடம் தான். ஒன்று விஞ்ஞானி. ஒன்று எந்திர மனிதன். சும்மா ஒரு fanstasy க்காக வேடங்களை திணிப்பவரல்ல ஷங்கர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அவசியம் ஏற்பட்டாலொழிய ஷங்கரின் படங்களில் கேரக்டர்களின் திணிப்பு இருக்காது. அருமையாக பேக்கேஜ் செய்யப்பட்ட ஒரு பக்கா திரைக்கதையில், படத்தின் பெரும் பகுதியை இரண்டு ரஜினிக்களும் ஆக்கிரமித்துள்ள போது மூன்றாவதாக ஒருவருக்கு இடம் எப்படியிருக்க முடியும்? எனவே இது தொடர்பான செய்திகளில் உண்மை எதுவும் இருப்பதாக நமக்கு தெரியவில்லை.
எந்திரன் எப்போ ரிலீஸ்?
அனைவரின் கேள்வியும் இது தான்.
எப்படியாவது படத்தை ஏப்ரல் 14 க்கு ரிலீஸ் செய்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் எந்திரன் குழுவினர். படத்தின் டாக்கி போர்ஷன்கள் முடிந்து டப்பிங் துவங்கிவிட்ட நிலையில், எஞ்சியுள்ள பாடல் காட்சிகளை டிசம்பருக்குள் ஷூட் செய்துவிட்டு படத்தை ஏப்ரலில் விடுவது தான் இப்போதைய திட்டம். இருப்பினும் CG பணிகள் (Computer Graphics) நிறைய செய்ய வேண்டி இருப்பதால் ரிலீஸ் தேதியை இறுதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பூனாவில் ஒரு காட்சி எடுக்கப்படக்கூடும் என்று தெரிகிறது.
(குறிப்பு: கூடுமானவரை தீர விசாரித்து நம்பகமான செய்திகளை மட்டுமே நாம் இங்கு அளிக்கிறோம். அதையும் மீறி சில சமயங்களில் சில செய்திகள் தவறாகிவிட வாய்ப்புக்கள் உண்டு. மிகப்பெரிய மீடியா சக்திகளுக்கே ‘எந்திரன்’ செய்திகள் சவாலான விஷயம் என்பதையும் - நான் பத்திரிக்கையாளன் அல்ல என்பதையும் - ரசிகன் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டுகிறேன். எந்திரன் செய்திகளுக்கு மட்டுமல்ல மற்ற செய்திகளுக்கும் இது பொருந்தும்.
No comments:
Post a Comment