திருமாவின் நூல்கள் - கேட்டு வாங்கி படிக்கும் சூப்பர் ஸ்டார் & எந்திரன் கதை தான் என்ன? - ஷங்கர் கூறுகிறார்



1) திருமாவின் நூல்கள் - கேட்டு வாங்கி படிக்கும் ரஜினி
தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளை குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள முனைந்திருக்கும் சூப்பர் ஸ்டார் அவற்றை பற்றிய நூல்களை தற்போது ஆர்வமுடன் படித்துவருகிறார்.
சென்ற ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற நடிகர் சங்க உண்ணாவிரதத்தின்போது திருமாவளவன் பேசிய பேச்சு அவரை மிகவும் கவர்ந்துவிட்டதாம். இதையடுத்து அதே விழாவிலேயே சிறுத்தை தலைவரின் நூல்களையும் அவரது உரைகள் அடங்கிய டி.வி.டி.க்களையும் கேட்டாராம். ஆனால் சிறுத்தைத் தலைவர் இடையில் அதை மறந்துவிட்டார். சமீபத்தில் அவரை ஒரு விழாவில் தலைவர் எதேச்சையாக சந்தித்த போது அதை நினைவூட்டினாராம். எனவே, சிறுத்தை தலைவர் சூப்பர் ஸ்டார் கேட்ட நூல்களையும் ஒலி ஒளி நாடாக்களையும் தற்போது கொடுத்தனுப்பியிருக்கிறாராம்.
எந்திரன் படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஆர்.ராதா அவர்களின் வாழ்க்கை வரலாறும், வீட்டில் கம்பன் கழகம் பரிசளித்த கம்பராமாயணமும் படித்துவருகிறார் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.
இயக்குனர் மணிவண்ணனின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு பேசிய சூப்பர் ஸ்டார், “மணிவண்ணன் மூலமாக பெரியார், அண்ணாவைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். பெரியார் புத்தகங்களையும் எனக்கு படிக்க கொடுத்தார்,” என்று கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
2) எந்திரன் வழக்கமான காதல் கதையோ அல்லது ஊழலுக்கெதிரான கதையோ அல்ல - ஷங்கர்
தனது ஒவ்வொரு படத்தை துவங்கும் முன்பு நிறையே ஹோம் வொர்க் செய்யும் ஷங்கர், எந்திரனுக்காக மெனக்கெட்டது நிறைய. சொல்லப் போனால் ஆராய்ச்சி செய்வதிலேயே ஷங்கர் நிறைய நேரங்களை செலவிட்டார். “நாம் சொல்லும் விஷயங்களின் நம்பகத்தன்மை மிகவும் முக்கியம்” என்பது ஷங்கரின் கோட்பாடு.
“எந்திரன் கிட்டத்தட்ட 85% முடிந்துவிட்டது. படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் உடனுக்குடன் நடந்துவருகிறது. ஆனால் CG பணிகள் தான் நிறைய உள்ளன. ரோபோக்களை மையமாக கொண்ட கதை என்பதால் ரோபோவை பற்றி நான் சொல்லும் விஷயங்கள் உண்மையானதாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இணையத்தில் அவை பற்றிய நிறைய விஷயங்களை சேகரித்தேன். CG பணிகளை செய்ய தகுந்த நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் முன், இணையத்தில் அவர்கள் இதற்க்கு முன்பு CG பணிகளை பார்த்தேன். எல்லாவற்றிலும் திருப்தி ஏற்பட்ட பின்பு தான் பணிகளை துவக்கினேன்” என்று கூறும் ஷங்கர் சிவாஜியை விட எந்திரன் பலமடங்கு மென்மையாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
சரி எந்திரன் கதை தான் என்ன? என்று கேட்டால், “எந்திரன் வழக்கமான காதல் கதை அல்ல லஞ்ச ஊழலுக்கெதிரான போரும் அல்ல. இது வரை நான் முயற்சித்திராத மாறுபட்ட அறிவியல் கதை இது. இதில் முற்றிலும் வித்தியாசமான ரஜினியை நீங்கள் பார்க்கலாம். ரஜினி நன்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்.” என்று முடித்தார் ஷங்கர்.
3) வணக்கம் சொன்ன ரசிகர் - பதில் வணக்கம் சொன்ன ரஜினி
சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தற்போது எந்திரன் படபிடிப்பு நடைபெற்றுவருகிறது.

ஸ்டூடியோ வளாகத்துக்குள்ளேயே குடிசைகள் மற்றும் அடுக்குமாடி செட்ட்கள் போட்டு போட்டு படப்பிடிப்பு நடந்துவருகிறது.
படப்பிடிப்பு வளாகத்தில் ஜிம் பாய்ஸ்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்நியர் உள்ளே பிரவேசிப்பதை தவிர்க்க படப்பிடிப்பு நடக்கும் நேரம் ஸ்டூடியோவின் கதவு மூடிவைக்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் எடுக்கப்பட்டு, அது முடிந்தவுடன் அவர் கிளம்பிவிடுகிறார். பின்னர் மற்ற காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஷங்கர், உதவி இயக்குனர்கள், பீட்டர் ஹெயன்ஸ் என எல்ல்ளார் கையிலும் மைக்குகள்.
சாப்பிடவும் மேக்கப்பை போடவும் மட்டுமே கேரவனுக்குள் செல்கிறார் தலைவர்.
படப்பிடிப்பில் அன்றைய நாளுக்கு அவரது படப்பிடிப்பு முடிந்தவுடன் மேக்கப்பை கலைத்து முகம் கழுவி, பச்சை கலர் லுங்கி, வெள்ளை சட்டையுடன் வீட்டிற்கு கிளம்பிவிடுகிறார்.
ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து திரும்புகையில், காரில் இருந்த சூப்பர் ஸ்டாரை பார்த்துவிட்ட ரசிகர் ஒருவர் இரு கைகளையும் தூக்கி தலைக்கு மேல் கூப்பி “தலைவா… வணக்கம்!!” என்று உற்சாக கூக்குரலிட, பதிலுக்கு அவரும் தலைக்கு மேல் கூப்பி வணக்கம் தெரிவித்தார். ரசிகர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.
4) குமுதம் இல்ல நிகழ்ச்சி - உட்கார மறுத்த ரஜினி
குமுதம் ஆசிரியரின் தாயார் எஸ்.ஏ.பி. கோதை ஆச்சி அவர்களின் மணிவிழா சமீபத்தில் அடையாறு போட் க்ளப் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. (புகைப்படத்துடன் செய்தியை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தோம்).

பல வி.ஐ.பி.க்களும் திரையுலக முக்கியஸ்தர்களும் கோதை ஆச்சி அவர்களிடம் ஆசி பெற வந்திருந்தனர். சூப்பர் ஸ்டார் தமது துணைவியார் லதாவுடன் வந்திருந்தார். சூப்பர் ஸ்டாரை குமுதம் முதன்மை ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன் மற்றும் வள்ளி பழனியப்பன் ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.
இரு குடும்பத்தாரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டார்கள். அவர்களுடன் பேசும்போது பெரும்பான்மையான நேரம் தனது கைகளை கட்டியபடியே இருந்தார் ரஜினி.
பின்னர் இரு குடும்பத்தாரும் கோதை ஆச்சி அவர்களுடன் உடகார்ந்து க்ரூப் போட்டோ எடுக்க அமர்ந்தனர். சூப்பர் ஸ்டாரை அழைத்தபோது, அவர் உட்கார மறுத்துவிட்டார். பெரியவர்களுடன் சரி சமமாக அமர்வதா என்று சூப்பர் ஸ்டார் பிடிவதாமாக மறுத்துவிட்டார். “அட பரவாயில்லை சார் வாங்க” என்று அவர வலுக்கட்டாயமாக அழைத்து உட்காரவைத்தனர். ஒரு சில நொடிகளே அமர்ந்து, போட்டோ எடுத்தவுடன் சட்டென்று எழுந்துவிட்டார்.
சூப்பர் ஸ்டாரின் அடக்கத்தை குமுதம் குடும்பமே வியந்து பாராட்டியதாக தகவல்.
[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...