ரஜினியை இமிடேடே செய்தால் ரஜினியாகிவிட முடியாது! - சூர்யா


அயன் பட பிரஸ் மீட்டில் நடிகர் சூர்யா நமது நிருபரிடம் கூறியது:
எல்லோரும் எம்ஜிஆர் அல்லது ரஜினியை தங்கள் ரோல்மாடலாக சொல்வார்கள். ஆனால் நீங்கள் அப்படி யாரையும் குறிப்பிடவில்லை. கமலிடமிருந்து, விக்ரமிடமிருந்து, தனுஷிடமிருந்து, ஆர்யாவிடமெருந்தெல்லாம் நிறைய கற்றுக் கொண்டதாகச் சொன்னீர்கள். எனில் எம்ஜிஆர் - ரஜினி போன்ற இமயங்கள் உங்களைக் கவரவில்லையா... இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள எதுவும் இல்லையா உங்களுக்கு?
(இந்தக் கேள்வியை நிச்சயம் அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் பார்வையிலேயே தெரிந்தது!)
"ஓ... நீங்கள் அப்படி அர்த்தப்படுத்திக் கொண்டீர்களா... நல்லது... எனக்கு மட்டுமல்ல... சினிமாவுக்குள் வரும் எல்லாருக்குமே, எம்ஜிஆர், ரஜினி சார் உயரங்கள் மீது ஒரு கண் இருக்கும். காரணம் அவர்கள்தான் சினிமாவின் உச்சம்.
ஆனால், நான் வெளிப்படையாக சொல்லாமல் விட்டது, ரஜினியை இமிடேட் செய்து ஒருவரால் உயரத்துக்கு வந்துவிட முடியாது என்பதைத்தான்.
ரஜினியின் ஸ்டைல் அவருக்கு மட்டும் சொந்தமானது. அதை கற்றுக் கொள்ள முயற்சிப்பது சரியாகுமா...
அவரது வசன உச்சரிப்பு, நடிப்பு, நடை, உடை என எல்லாமே ஸ்டைல்தான். எனவே திரையில் அவரைப் பார்த்து கற்றுக் கொள்வது என்றால் அது காப்பியடிப்பதுதான். அதைச் செய்தால் யாரும் எடுபட மாட்டார்கள். ஒரு எம்ஜிஆர்தான்... ஒரு ரஜினிதான்.
ஆனால் திரைக்கு பின்னால் அவர்தான் சினிமாக்காரர்களுக்கு வழிகாட்டி. என் தந்தை அடிக்கடி ரஜினியின் கடந்த காலம், அவர் பட்ட கஷ்டங்கள், அவரது நிகழ்காலம்... அதில் அவர் கடைப்பிடிக்கும் எளிமை பற்றியெல்லாம் பேசுவார்.
நான் ஒருபோதும் அவரைக் திரையில் அவரைக் காப்பியடிக்க மாட்டேன். ஆனால் நிஜத்தில் அவரைப் போல சின்ஸியராக இருக்கவே விரும்புகிறேன் என்றார்.
-சங்கநாதன்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...