பாராளுமன்ற தேர்தல் முடிந்து முடிவுகள் வரும்வரை இந்த மீடியாக்கள் பார்வை தலைவர் மீது கொஞ்சம் அதிகபடியாக தான் இருக்கும். இது தவிர்க்க முடியாத ஒன்று. இது தலைவர் பெற்று வந்த வரமா இல்லை சாபமா என்று தெரியவில்லை.
அவர் உண்டு அவரின் எந்திரன் உண்டு என்று தன் கடைமையை அவர் சரியாக தான் செய்து வருகிறார்.
இன்று வந்த ஒரு தினசரி தனது வழக்கமான உள்குத்து கட்டுரை ஒன்றை வெளியிட்டு தனக்கு கொடுத்த வேலையை சரியாக முடித்து உள்ளது. நாம் அனைவரும் தெளிவாக இருப்பது பாவம் இன்னும் இந்த அதி மேதாவி நிருபருக்கு தெரியவில்லை.
வரும் நாட்களில் இது மாதிரி செய்திகளை நிறைய பார்க்க போகிறோம். இது மாதிரியான செய்திகள் நம்மை இன்னும் பக்குவ படுத்தும். அதை தான் தலைவரும் எதிர் பார்க்கிறார். அந்த வகையில் அந்த தினசரிக்கு ஒரு பெரிய நன்றி.
இன்றைய மாலை மலரில் தலைவரை பற்றி நல்ல மாதிரி செய்தி வந்துள்ளது...
"ரஜினி வந்து பிரச்சாரம் செய்து, இந்த கட்சிக்கு ஒட்டு போடுங்கன்னு சொன்ன, நிச்சயமா கண்ணை மூடிகிட்டு ஒட்டு போற்றுவோம் என்று 58 சதவீதம் மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் - ரஜினி ரொம்ப நல்ல மனுசர். யோசித்து பார்த்து நமக்கு நல்லதை தான் சொல்வார் "
இது தான் அந்த செய்தி.... நாட்டில் சில நல்ல பத்திரிக்கை நிருபர்களும் இருக்கிறார்கள்.
எல்லாம் இருக்கட்டும்.. தலைவர் இந்த சுயநல அரசியல்வாதிகளுக்கு பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்பது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர்...
அவர் வரும்போது (எப்போ... எப்போ.. உஸ்ஸ்ஸ்.. இருங்கப்பா...நீங்க வேற.. ) இந்த பிரச்சார நேர விரைய வேலை எல்லாம் இல்லை.... நேரா.... straight shot !! -ரசிகன்.
No comments:
Post a Comment